என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, August 25, 2009

வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...!


இது என்னுடைய 100 வது போஸ்ட் என்பதை இப்போதுதான் தற்செயலாக கவனிக்கிறேன்.

போஸ்டர் ஒட்ட, ஃப்ளெக்சி பேனர்கள் அடிக்க, கட்அவுட்கள் வைக்க, கலெக்ஷன் கல்லா பார்க்க, கோவில் கட்ட, குடம் குடமாய்ப் பால் அபிஷேகம் செய்து கொள்ள ... ஊஹும், எதற்குமே நேரம் இல்லை!

'யாம் பெற்ற இன்பம்' தொடரின் 7 வது அத்தியாயத்தில் சென்ற வருடத்திய திருமெய்ச்சூர் லலிதாம்பிகை கோவில் விசிட் பற்றி எழுத ஆரம்பிக்கின்ற நேரத்தில் தான் ஒரு அசரீரி கேட்டது:

"லலிதாம்பிகை பற்றி அப்புறமாக எழுதலாம். பல் தேய்க்காமல் அதெல்லாம் செய்யக்கூடாது. நான் அவளிடம் சொல்லிக் கொள்கிறேன். 'தமிழின் தனிப் பெரும் பத்திரிகை ஆஃபீசில் ஏதோ குழப்பம், இந்திரபுரி சைட்டில் ஏதோ பயங்கர வைரஸ் பிரச்னை' என்கிறார்களே, அதை முதலில் கவனி! " -சரஸ்வதி தேவியிடமிருந்தே வான் கட்டளை ஒன்று எனக்கு ட்விட்டரில் வந்து சேர்ந்தது!

கழுகார் ஸ்டைலில் சொல்வதென்றால்: சூடான பாதாம் பால், இஞ்சி மொறப்பா, மசாலா டீ, பிஸ்தா பருப்பு என்றெல்லாம் நியூசை விடத் தீனியே பிரதானம் என்றலையாமல் , என் எழுத்துக் கடமையே முக்கியம் என்று சொல்லி, றெக்கை விரித்தெழும்பி அவசர அவசரமாக சேதிகள் சேர்க்கலானேன்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக விகடனின் பிரதான நெட் சைட் (www.vikatan.com) வைரஸ் அட்டாக்கால் முடங்கிக் கிடப்பது உண்மை. ஸ்நேகா மேட்டர் என்னாயிற்றென்று தெரியவில்லை, மதன் கார்ட்டூன் பார்க்கவில்லை, லூசுப் பையன் படிக்கவில்லை, யாருடையது இந்த வார தொப்புள் போட்டோ? தெரியவில்லை ... கவலையா இருக்காதோ, பின்னே?!

என்னவோ ஏதோ என்று பதைபதைத்து, சொல்ல வேண்டியவர்களுக்குச் சொன்னால், 'மூளை கேன்சருக்கு அமிர்தாஞ்சனத்தை சூடு பறக்க, அழுத்தித் தடவணும்' என்பது போல் எனக்கு அருள் வாக்காய்ச் சொல்லப்பட்ட பாட்டி வைத்தியங்கள்:

1. சார், நெருப்புநரி (firefox) யூஸ் பண்ணிப் பாருங்க, எல்லாம் சரியாப்போச்சு. பிரச்னை ஓடியே போயிட்டுது. எல்லாம் சுபம், வணக்கம்!

2. ஒரு தடவை கூகிள் க்ரோம் முகர்ந்து பார்த்துட்டு ஈர வேட்டியோட வேப்பிலை கட்டிக்கிட்டு எட்டி எட்டிப் பாருங்க, சைட் நல்லா தெரியுது! ஓக்கேவா, வர்ட்டா?

3. குளிக்காம பத்து டாலரை மஞ்சள் துணியில முடிஞ்சு வைச்சுகிட்டு, லேப்டாப்போட பின்பக்கமாவே நடந்து பூ மிதிங்க. எல்லாம் போகப்போக சரியாயிடும்!

ஊஹூம். எந்த வைத்தியமும் எடுபடவில்லை.

"என்னை மீறி, என் 'வைரஸ் வார்னிங்' கேட்காமல் உள்ளே போனால் உன் கணினிக்குள் ஸ்வைன் வரும், உனக்கு ரத்த வாந்தி வரும், மொத்தத்தில் டேட்டா சகலமும் ஸ்வாஹா ஆகும்" என்று எல்லா உலாவிகளும், அதாங்க, சுத்த தமிழ்ல 'ப்ரௌவுசர்'களும், என்னை பலமாக எச்சரித்தன.

சென்ற பிறவியில் யாருக்கோ ஸ்லேட், பல்ப்பம் இலவசமாக வாங்கிக் கொடுத்திருப்பதால் எனக்கு இந்தப் பிறவியில் கொஞ்சம் கணினி ஞானம் வாய்த்திருக்கிறது.

வியாபார கவனத்தில், எசகுபிசமாக ஏதாவது விளம்பரங்களை அப்லோட் செய்திருப்பார்கள், அதனால் இந்த அட்டாக் என்பது புரிந்தது. ஆனால் இதைச் சுத்தம் செய்து சைட்டை ஞான ஸ்நானம் செய்விக்க ஏன் இத்தனை நாட்கள்? மணிக் கணக்கில் கூட இது ஆகி இருக்கக்கூடாதே? என்ன செய்கிறார்கள் ஐடி ஆட்கள், டேடாசெண்டர் ஜாம்பவான்கள், ப்ரொக்ராமர் திருக் கூட்டங்கள்?' என்று நான் குழம்பிக்கொண்டிருக்கும்போது தான் அந்த 'நியூஸ்' வந்து சேர்ந்தது.

விகடன் ஆசிரியர் குழுவிலிருந்து முதன்மை ஆசிரியரைத் தூக்கி விட்டார்களாம்!' என்கிற செய்தி!

"என்ன கொடுமை இது சரவணன்?!" -சந்திரமுகி வாரிசு நடிகர் பாணியில் நான் விசாரித்து விசாரித்துக் கேட்டறிந்து கொண்ட உண்மைகள் இதோ:

ஜூனியர் விகடன் முதன்மை ஆசிரியராக இருந்த வெங்கடேஷ் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!

எதற்கு, ஏன், எப்படி, எவ்வளவு என்றெல்லாம் உத்தேசமாக எதையாவது பெனாத்தி 'இன்னொரு பத்தாயிரம் ரூபாய்' கேசில் மாட்டிக்கொள்ளும் உத்தேசம் எனக்கில்லை. என்ன வுட்ருங்க, ராசா!

ரா. கண்ணன் ஜுவி அடிஷனல் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

வைரஸ் அட்டாக் தீவிரம் இன்னும் குறைந்த பாடில்லை. அதைக் கவனிக்க தனியே ஒரு டீம் வேலை செய்கிறது.

வைரஸ் அட்டாக்கிற்கும் ஆசிரியர் நீக்கத்துக்கும் எந்த கனெக்ஷனும் இல்லை.

வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...யாதொரு சம்பந்தமுமில்லை!

17 comments:

ஆயில்யன் said...

//போஸ்டர் ஒட்ட, ஃப்ளெக்சி அடிக்க, கட்அவுட்கள் வைக்க, கலெக்ஷன் கல்லா பார்க்க, கோவில் கட்ட, குடம்குடமாய்ப் பால் அபிஷேகம் செய்து கொள்ள ... ஊஹும், எதற்குமே நேரம் இல்லை!//

அதெல்லாம் கவலைப்படாதீங்க ஆர்டர் கொடுத்திருக்கோம் 200 க்கு வரும் :)))

ஆயில்யன் said...

//ஒரு தடவை கூகிள் க்ரோம் முகர்ந்து பார்த்துட்டு ஈர வேட்டியோட வேப்பிலை கட்டிக்கிட்டு எட்டி எட்டிப் பாருங்க, சைட் நல்லா தெரியுது! ஓக்கேவா, வர்ட்டா?/

LOL :))))

ஆயில்யன் said...

//சுத்தம் செய்து சைட்டை ஞான ஸ்நானம் செய்விக்க ஏன் இத்தனை நாட்கள்? மணிக் கணக்கில் கூட இது ஆகி இருக்கக்கூடாதே? என்ன செய்கிறார்கள் ஐடி ஆட்கள், டேடாசெண்டர் ஜாம்பவான்கள், ப்ரொக்ராமர் திருக் கூட்டங்கள்?'//

அதுவும் கூட்டம் கூட்டமாக ஐடி மக்கள் மொய்த்திருக்கும் தருமமிகு சென்னையில்? :)

Boston Bala said...

---என்ன வுட்ருங்க, ராசா!---

விட்டாச்சு :)

ஆயில்யன் said...

//எதற்கு, ஏன், எப்படி, எவ்வளவு என்றெல்லாம் உத்தேசமாக எதையாவது பெனாத்தி 'இன்னொரு பத்தாயிரம் ரூபாய்' கேசில் மாட்டிக்கொள்ளும் உத்தேசம் எனக்கில்லை.//

எதற்கு?
ஏன்?
எப்படி?
எவ்வளவு? - எம்புட்டு தகவல்கள் வந்திருக்கும்! -

:(

சொல்லலாம் பத்தாயிரம்தானே! :)))

டகிள் பாட்சா said...

அதானே ஆயில்யன்!
ராம் after all $200 challenge நேர்கொள்ள மாட்டாரா? லாஸ் வேகஸ் பக்கத்துல இருந்துகிட்டு இந்த ரிஸ்க் கூட எடுக்கல்லன்னா எப்படி? நம்ம எல்லாரும் கொஞ்சம் வாய கிளறினா சும்மா கக்கிட மாட்டாரா! கிசு கிசு இல்லாம என்னப்பா வாழ்க்கை?

Recessionல இங்க ஒக்காந்துகிட்டு ஜிங்கியடிக்கறத விட்டுட்டு பேசாம இந்தியா போயி ஒரு பத்திரிக்கை ஆசிரியராகி கோடிஸ்வரனாலாமா! இல்லைன்னா USலேயே ஸ்வாமி சபலானந்தா (அ) ஸ்வாமி அல்பானந்தான்னு ஏதாவது ஆஸ்ரமம் ஆரம்பிச்சு ஊரையே வளச்சு போடலாமா!

ஆனா ஒண்ணு ஒருத்தர்தான் மாட்டிகிட்டார். இன்னும் கவர் வாங்கற ஆசிரியர் கும்பல் ஏகப்பட்டது இருக்குங்க நாட்டுல. லஷ்மிகாந்தனையெல்லாம் கோயில் கட்டி கும்பிடலாம்.

BTW

நூறாவது போஸ்டிங் போடும் தலைக்கு நல் வாழ்த்துக்கள்.

Vino said...

back to form... ? warm welcome

துளசி கோபால் said...

//3. குளிக்காம பத்து டாலரை மஞ்சள் துணியில முடிஞ்சு வைச்சுகிட்டு, லேப்டாப்போட பின்பக்கமாவே நடந்து பூ மிதிங்க. எல்லாம் போகப்போக சரியாயிடும்!//

:-))))))))


சதமடிச்சதுக்கு இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

கவாஸ்கர் மாதிரி நின்னு நிதானமா அடிக்கிறீங்க:-))))

துளசி கோபால் said...

புதுசாக் கலர் மத்திக் கலக்குறீங்க!!!!!

(போன பின்னூட்டத்தில் சொல்ல விட்டுப்போச்சு)

துளசி கோபால் said...

oops.....கலர் 'மாத்தி'ன்னு மாத்திப் படிங்க.

Anonymous said...

இந்த வெங்கடேஷ் தானே 'விகேஷ்' என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஜு.வியில் எழுதுபவர் ? - கக்குகிறான் கணேஷ் என்றெல்லாம் கவர் ஸ்டோரி எழுதியவர் ? (டாக்டர் பிரகாஷ்))

விகடனிலேயே கருப்பு ஆடா ? இல்லை 'ஐயா'வின் சாமர்த்தியமான காய் நகர்த்தலா ? இதுநாள் வரை 'ஐயா'வை வறுத்தெடுத்தது / கொண்டிருப்பது திருமாவேலன்.


- அலெக்ஸ் பாண்டியன்

ILA (a) இளா said...

Centuryக்கு வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஆயில்யன், பாஸ்டன் பாலா, டகிள் பாச்சா, வினோ, துளசி, அலெக்ஸ், நிஜமா நல்லவன், இலா அனைவருக்கும் உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!

'சாட்'டில் மட்டுமே பாராட்டிய துணிச்சல்காரர்களுக்கும் நன்றி!

'6 கோடி வங்கியில், 60 லட்சம் டீமேட் அக்கவுண்டில், சென்னையில் 13 வீடுகள்' ... என்னய்யா நடக்குது நாட்ல?!

விகடன் சைட் இன்னமும் முடங்கிக் கிட்ப்பது சோகம் ;-(

கருமமிகு சென்னையில் இதையெல்லால் கவனிப்பார் இல்லையா?!

டகிள் பாட்சா said...

அடேங்கப்பா!

Modus Operandi தெரிஞ்சால் கொஞ்சம் உபயோகமா இருக்கும்.

டகிள் பாட்சா said...

ஆமா! ப்ரபலங்களை பத்தி எல்லா பத்திரிக்கைகளும் கிழி கிழி ன்னு கிழிக்கிறாங்களே! இங்க இவ்வளவு நடந்திருக்கு! முழு பூசணிய சோத்துல மறச்சா மாதிரி ஒரு பத்திரிக்கையும் இதப் பத்தி மூச்சு விடலயே! இதுக்கு பேர்தான் பத்திரிக்கை mafiaவா!

Anonymous said...

http://kafila.org/2009/08/26/editors-and-journalist-must-declare-their-income/

- Alex Pandian

Anonymous said...

http://www.vinavu.com/2009/09/04/spy/