என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, August 12, 2009

சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!

யூட்யூபில் ஒரு 'அருமையான' பாடல் காட்சி பார்த்தேன்!


நீங்களும் பார்த்து சிரியுங்கள்!

'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்வதெல்லாம் அபத்தம். இறைவனுக்கு எதற்காக எக்ஸ்ட்ரா புகழ்?' என்று இளையராஜா திருவாய் மலர்ந்து அருளினாராம்!

ரஹ்மானை இடிப்பதாக நினைத்துக்கொண்டு ராஜா இப்படிச் சொல்லியிருப்பது காழ்ப்பின் உச்ச கட்டம். கண்டிக்கத் தக்கது.

ஏ. ஆர். ரஹ்மான் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடி சொல்வது அடக்கத்தின் காரணமாக அல்லவா? இந்து ஆன்மீகவாதிகள் 'ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்வது போலத்தானே இதுவும்?

பல பூஜை மந்திரங்களின் முடிவில் 'நமஹ: ந மம' என்று சொல்லி முடிப்பதுண்டு. (இறைவா, உன்னை நமஸ்கரிக்கிறேன். ஆனால் இதனால் ஏற்படுகின்ற நல்வினைகள் கூட என்னைச் சார்ந்தவை அல்ல, இறைவனாகிய உன்னையே சார்ந்தவை என்பது பொருள். 'அந்த பூஜை செய்து விட்டேன், இந்த பூஜையை பிரமாதமாக முடித்து விட்டேன் என்று நமக்குள் கர்வம் வந்து விடலாகாது என்பதற்காக!)

தினந்தோறும் செய்யப்பட வேண்டிய சந்தியாவந்தன மந்திரங்களின் முடிவில், 'காயேனவாசா ...' என்றொரு மந்திரம் உண்டு. தியான மந்திரங்கள் சொல்லும்போது எங்கேயோ பராக்கு பார்த்துக்கொண்டோ, அசிரத்தையாகவோ, கொட்டாவி விட்டுக் கொண்டோ, எதையோ நினைத்து மனத்தை அலைபாய விட்டுக் கொண்டோ செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, 'எல்லாமே உன் காலடியில் தான்' என்று பொருள்படும்படி, "ஸர்வம் ஸ்ரீநாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று முடிப்பது வழக்கம்.

இந்து தியான முறைகள், வழிபாடெல்லாவற்றிலும் மிகுந்த நம்பிக்கை இருப்பதாக சொல்லிக்கொள்ளும், திருவண்ணாமலையே கதி என்று கிடக்கும் இசை'ஞானி'யா இப்படி நடந்து கொள்வது?

எங்கேயோ பயங்கரமா பொசுங்கற வாசனை வருதில்ல ?!


31 comments:

Blogeswari said...

Have lost the little respect I had for this man. Both brothers (Gangei and IR) , during ARR's initial days used to semmaya take a dig at him(ARR) particularly during the stage shows... They'd ask a singer to sing Garden vareli jingle and get the same singer to sing 'Kaadal rojave's humming bit.

IR has gone senile.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ப்ளாகேஸ்வரி ?! What a mischievously funny name! I dig it instantaneously! எப்படி இதுநாள் வரை இங்கே சந்திக்காமல் போனோம்?

கௌண்டமணி போன்ற நடிக நண்பர்கள் இந்த 'டாபிக்'கில் என்னை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளனர்.

"டேய் மவனே, எனுக்கா துண்ணூறு குடுத்து துண்ணுட்டுப் போன்றே? நீ என்ன, திடீர் பகவானா? அட, கசமாலமே! நீயும் நானும் சேர்ந்து அந்த .... எல்லாம் மறந்துட்டாப்ல, அடங் கொய்யா!"

"சிலரை சில நாள் ஏமாற்றலாம் ,,," வரிகள் நினைவுக்கு வருகின்றன!

I know too much. So, I have to play a little dumb!

vel said...

yenunganna, los angles'la ukaarndha enna vena sollalaama? that azhagar malai song was picturized in 2008. Rehman'aa nenaichu padal ezhudhidhaaga udhaar vidaraange. Your facts are totally wrong. Sarvam krishnarpanam'ngumbodhu, you lost all 'ownership'..including your fame..its not yours...so you cant give to Lord what you dont own in the first place...adhai thaan avaru sonnaru.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இல்லீங்ணா, வேல்ண்ணா! என்னடா, இப்படி ஒருத்தர் எழுதிட்டாரேன்னு நானும் கொஞ்சம் வேலை மெனக்கெட்டு ஆராய்ச்சி பண்ணியும் பார்த்துட்டேன். படம், பாடல் எல்லாமே ரஹ்மான் ஆஸ்காருக்கு அப்பால தான். படம் இன்னும் ரிலீஸ் கூட ஆகலை. நான் சொன்னதில் மாற்றமேதும் இல்லை!

அது கெடக்கட்டும், கழுதை. 'லாஸ் ஏஞ்சல்சில் உட்கார்வது' என்ன அவ்வளவு பெரிய மேட்டரா?! இது என்ன அவ்வளவு பெரிய ஞான பீடமா?!

Anamika said...

It is unfortunate that Chennai Online has published such a fictitious article and that you have blurted out your thoughts based on it!

Let me correct the facts: Azhagar Malai song was filmed in 2008 itself, much before ARR won any award for Slumdog. Check the dates on these links for proof: http://www.cinemaexpress.com/archaics/15082008/snippets/snippets2.asp and http://www.newsinlive.com/movies/2008/08/25/illaiyaraja-to-be-fantastic-actor.

And, the lyrics for this song are by Vali, not Ilayaraja!

Also, Ilayaraja has been participating in many stage events in the past few years and ARR's awards have nothing to do with his public appearances. Magazines must be responsible in what they write. But, we know most of them are not!

Ironically, nobody seems to realise or accept that Raja actually used the words 'unnadhamaana porulil' while talking about the sentence "ellaap pugazhum iraivanukke' as in the press report posted on the URL http://musically-marx.blogspot.com/2009/08/ilayaraja-releases-agsharam.html. He was just adding his interpretation of that sentence. Is it patented by ARR or what? Why shouldn't anyone else use that common phrase?

Moreover, none of us know why Raja talked about this. He might have replied to another speaker's comments and could have quoted this phrase in reply - who knows?! Why should we jump to conclusions?

It is common for press and media to quote Ilaiyaraaja's comments out of context. So, it is unwise for us to defend or swear based on such reports.

I hope at least some of the readers here will understand this point and stop the mud slinging!

டகிள் பாட்சா said...

அடேங்கப்பா! IRஐ பத்தி யாராச்சும் ஏதாவது எழுதினா போதும்., தொடைய தட்டி கிட்டு கிளம்ப ஒரு கிழக்கூட்டமே இருக்குதய்யா! அவரு என்னதான் தப்பா பேசினாலும் அதுக்கு சாக்கு போக்கு சொல்லி, அவர் உளறல்களுக்கு புது பொழிப்புரை எழுதி புளகாங்கிதம் அடைகிறவர்கள் இருக்கும் வரை IR க்கு இந்த கோபமும், மூர்க்கத்தனமும் இருக்கத்தான் செய்யும்.
நம்ம ஆளுக்கு தமிழ் நாட்டை தாண்ட முடியலை. வடநாட்டுக்கு போனார். pack up சொல்லி அனுப்பி விட்டார்கள். "nothing but wind! Thiruvasagam என்றெல்லாம் try பண்ணார். எல்லாம் ஊத்திக்கிச்சு! அவிங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன style வேணும்கறது புரிஞ்சுக்காம ' நா போடறதுதான் tune. அதை நீ கேட்டு தீரனும்' ங்கறதெல்லாம் தமிழ் நாட்டு எல்லைக்குள்ளதான் செல்லும்.
சும்மா You Tube ல Jai Ho ன்னு search பண்ணுங்க ARR music சர்வதேச எல்லைகளையெல்லம் கடந்து ஸ்பானிஷ், சீன, cambodia, Argentina மற்றும் உலக மக்கள் எப்படி ARR இசையை ரஸிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்று புரியும். 'வினாஸ காலே விபரீத புத்தி'யாக IR இப்படி தொடர்ந்து தனக்கு தானே குழி பறித்துக்கொண்டிருக்கிறார்.

வேண்டுமென்றால் இவரும் Hindi, Hollywood படங்களுக்கு try பண்ணுவதுதானே. ஓஹோ! எவனும் கூப்பிடலை! அதனால்தான் இந்த ' சீ சி இந்த பழம் புளிக்கும் பாடலும், இழிச்சொற்பொழிவுமா!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

Anamika,

I do not read chennaionline. I can't quote my verified private sources, but you may also see:

http://www.tamilvanan.com/content/tag/அழகர்மலை/

http://www.alaikal.com/news/?p=15242

Anyway, such nonsensical utterances are not unusual for Ilayaraja, who has been deified into an Almighty status which went straight to his head long, long ago.

It is sad to see a talented person -not a super God -spout such utter rubbish time and again, trying desperately to re-live an imagined past glory.

Time changes but egomania persists.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

டகிள் பாட்சா,

பொளந்து கட்டியிருக்கீங்க. 'இழிச்சொற்பொழிவு' வார்த்தை பிரயோகத்தை ரசித்தேன்!

vel said...

Mr.dagil batcha

Ungalukkaaga onnumae pannadha aalukku neega varinji kattii veluthu vaangumbodhu, engalukaaga evvalavo seidha enga raaja'vukkaaga naanga idhu kooda seiyya maatama?

loangles Ram aiyya - pls again see the links given by anamika - the song was conceptualized much before.

edhuvumae puriyaadha varikkum ularal madhiri dhaan irukkum...nam thaai mozhi utpada...so raaja pesinadhu puriyalainna vittudunga..

Anonymous said...

Dear vel, thoongarangavala ezhuuppalam. aana thoongaramaathiri nadikkiravangalai onnum panna mudiyaadhu. ivanga kitta ean unmaiya solringa.just left it.

Hello intha loss anjel and ect.....

ellarukkum Raaja appadithaan ungalaukku music pudichaa kelunga
illainna ellathaium moodikondu ARR songs kelunga.

டகிள் பாட்சா said...

இந்த controversy ஐ தெளிவுபடுத்த நமது 'கப்ஸா' பத்திரிக்கை தலைமை நிருபர் 'டகிள்' அவர்கள் IRஐ தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் Hyper Tensionல் இருப்பதாகவும், அவர் சார்பில் தம்பி கங்கை அமரன் பேட்டி கொடுப்பார் என்றும் சொன்னார்கள். இதோ அந்த பேட்டியை 'டகிள்' அவர்கள் IR ரஸிகர்களுக்கு சமர்ப்பிக்கிறார்.

டகிள்: என்ன சார் இது! ஞானி தடால்னு கோவிச்சுகிட்டு'அழகர் மலை' மேல உட்கார்ந்து அறிக்கை உடறாரு.
க.அ: என்ன செய்யறது! எங்களுக்கு கொடநாட்டில பங்களா இல்ல! கொளுத்தற 'அழகர் மலயிலிருந்து அறிக்க விட்டா கொஞ்சம் சூடாத்தானே இருக்கும்.
டகிள்: அது இல்லைங்க! ARRஐ தாக்கறாப்பல...
க.அ: தெரியுதில்ல! தெரியனும்னுதான் சொன்னாரு! எங்க வயிற்றெரிச்சல் எல்லாருக்கும் தெரிய வேணாமா!
டகிள்: உலகமும் காலமும் மாறத்தான செய்யும்! அதுக்கு கோவிச்சுகிட்ட எப்படி?
க.அ: உலகம் எப்படி மாறலாம். எங்க அண்ணன் பாட்ட விட்டுட்டு ஜனங்க வேறொருத்தர் பாட்ட எப்படி கேக்கலாம். இது அநியாயமால்ல இருக்கு.
டகிள்: இல்லைங்க! Award கிடைக்காததுனாலதான் இந்த எரிச்சல்ங்கறாங்களே!
க.அ: பின்னே இருக்காதா! எல்லாரும் சேர்ந்து சதி பண்றாங்க!
டகிள்: யாருங்க!
க.அ: எல்லாரும்தான்! மத்திய அரசு பத்மஸ்ரீ கூட கொடுக்கல. மாநில அரசு சுத்தமா எங்கள மறந்து போச்சு! அட! ம்யூசிக் அக்காடமி கூட எங்கள மதிக்கறதில்லை. ஒரு 'சங்கீத காலாவதி' பட்டமாவது அண்ணனுக்கு தரக்கூடாதா!
டகிள்: கலாநிதிங்க
க.அ: Sun TV ஓனர் பேரெல்லாம் இங்க கொண்டுவராதீங்க. அவங்க ஆனாலும் ஒவராத்தான் ARRஐ சப்போர்ட் பண்ணறாங்க. அவிங்களோட சதி இது!
டகிள்: ஏங்க! கடவுள் விதியில உலகமும், காலமும் மாறத்தானே செய்யும்! முந்தா நேற்று MSV, நேற்று IR, இன்று ARR, நாளை யாரோ!
க.அ: இத ஒத்துக்க முடியாது. இது இறைவன் செய்யற சதி! அதனாலதான் அண்ணன் 'ஒரு புகழும் இறைவனுக்கு போய் சேரக்கூடாது'ன்னு தெளிவா பினாத்தினாரு
டகிள்: Oscar கிடைக்கலேன்னா என்னங்க! உலகமே மூழ்கிப்போச்சா என்ன?
க.அ:அதனாலதான் நாங்களே எங்க பெரிய அண்ணன் பாஸ்கர் பேரிலே ஒரு அக்காடமி ஆரம்பிச்சு 'பாஸ்கர் அவார்ட்' ன்னு அண்ணனுக்கு நாலு அவார்ட் கொடுக்க்ப்போறோம். 1. போட்ட tuneஐயே திரும்ப போடறத்துக்கு 2. போட்ட BGM ஐயே திரும்ப போடறத்துக்கு 3. எல்லா பாட்டையும் தானே பாடறத்துக்கு 4. தனக்கு பிடிக்காத எல்லாரையும் தாறுமாறா பேசறத்துக்குன்னு நாலு categoryலேயும் அண்ணனுக்கே அவார்ட்.
டகிள்: ஆமா!சார்! இதுலேல்லாம் அண்ணனை மிஞ்ச யாரும் கிடையாது! ஆமா அடுத்த வருஷம் வேற யாருக்காச்சும் கொடுப்பீங்களா?
க.அ: அண்ணனுக்கு முன்னயும் சரி! பின்னயும் சரி.! யாரும் அவார்ட் வாங்கக்கூடாது. அதனால அவார்ட் குடுத்து முடிச்ச உடனேயே அக்காடமிய கலச்சுடுவோம்.
டகிள்: ஏங்க! அண்ணன் western music ல கலக்க hollywood ஏன் போகக் கூடாது. Oscar எல்லாம் எல்லா வருஷமும் அவருக்கே கிடைக்குமே!
க.அ: எவனும் கூப்பிட மாட்டேன்றானே! அதனால 'Nothing But Music' - Part 2 வா, 'Everything is Gas'ன்னு அண்ணன் ஒரு ஆல்பம் போடப்போறாரு. பொறுத்திருந்து பாருங்க! உலகமே நாறப்போகுது.
டகிள்: என்னாங்க அவ்வ்வ்வ்வளோ strong Gasஆ
க.அ: சும்மாவா! இதுல ஒரு புதுமை என்னான்னா! instruments ஏ இதுல அண்ணன் use பண்ணப்போறதில்ல! எல்லாமே Gasதான். preparation எல்லாம் ஜோரா நடந்துகிட்டுருக்கு. complete Orchestra க்கு Food & Training.. அண்ணன் ரொம்ப பிஸி.
டகிள்: Food ஆ
க.ஆ: Gas ன்னா சும்மாவா! தெனம் மொச்ச கொட்டை சுண்டலும், உளுந்து வடையும்தான்.
டகிள்: வாழ்த்துக்கள். ARR OSCAR வாங்கினதுல அண்ணனுக்கு வயிற்றெரிச்சல்னு சொல்லறாங்களே!
க.அ: அப்படி இருந்தா விழாவிலே 4 பவுன் தங்க சங்கிலி ARRக்கு போட்டிருப்பாரா!
டகிள்: அதுல ஏதோ மந்திரம் அது இதுன்னு அரசல் புரசலா பேசிக்கறாங்களே!
க.அ: ஆமா! மலயாள மாந்தரீகம் செஞ்சுதான் கழுத்துல போட்டோம். ஆனா எப்படி விஷய வெளில லீக் ஆயிடுச்சுன்னு புரியலை. அவரு உஷாரா அந்த சங்கிலிய கழட்டி Muslim Fakir ஒருத்தர் மூலமா 'Boomerang Black Magic' போட்டு சக்திய திசை திருப்பி அனுப்ப போறாருன்னு கேள்விப்பட்டோம்.
டகிள்: ஐய்யய்யோ!
க.அ: கவலையே வேண்டாம். எங்க 'யாகாவா முனிவர்' முன்பு சொன்ன மாதிரி காக்கைக்கு சாதம் போட்டா ஒண்ணுமே செய்யாதுன்றதுனாலே, அதயும் செஞ்சுகிட்டிருக்கோம். 'அழகர் மலை' பாடல்ல கூட பார்த்திருப்பீங்களே!
டகிள்: மனுஷனுங்களுக்குதானே போடறீங்க. அதுல கூட அண்ணன் ஒருத்தருக்கு இன்னும் போட சொல்லி கடுமயா ஒருத்தற கடிஞ்சுக்கறாறே!
க.அ: சரியாத்தான் செய்யறோம். எங்கள சுத்தி இருக்க காக்காய்ங்களுக்குதானே சோறு போடச்சொன்னாரு.
டகிள்: சரிங்க! ரொம்ப thanks! அடுத்த பேட்டிய எப்ப தொடரலாம்.
க.அ: இத படிச்சுட்டு IR ரஸிகர் யாரானா பின்னூட்டம் போடுவாங்க! அப்ப திரும்ப வாங்க!

டகிள் பாட்சா said...

Please treat my posting as fun. no ill feelings. யாருக்கும் குடை பிடிக்காதீர்கள்.
also soory for the error. it is not 'nothing but music'. it is 'nothing but wind'

எஸ். ராமானுஜன் said...

திரு. டகிள் பாட்சா,
அதெப்படிங்க, ராஜாவைப் பற்றி ஒரு எதிர்கருத்தை யாராவது சொன்னா உடனே ஜால்ரா தட்ட கிளம்பிடறீங்க? சந்தடி சாக்குல உங்கள ‘யூத்து' அப்படின்னு சொல்லிக்கிறீங்க... இருக்கட்டும்.

ராஜாவின் படைப்புகளை, அதன் இசை நுணுக்கங்களின் அடிப்படையில் விமர்சிக்க முடியாதவர்கள், ‘எப்படியாவது' ராஜாவை விமர்சிக்கவேண்டுமென்று சொல்லும் கருத்துக்கள்தான் நீங்கள் கூறியது.. மன்னிக்கவும், உளறிக்கொட்டியது.

திரு. லாஸ் ஏஞ்சலஸ் ராம் அவர்களே, அனாமிகா கொடுத்த இணைப்புகளில் இருக்கும் தேதிகளைக் கொஞ்சம் கவனமா பார்க்கோனும்.. படமும் பாடல்களும் வந்ததென்னவோ 2009ல் தான். ஆனால் பாடல் பதிவு எப்போது நடந்ததென்று அந்த இணைப்புகளை கவனமா பார்த்திருந்தால், நீங்கள் ‘வேலை மெனக்கெட்டு' செய்த ஆராய்ச்சி எப்படிபட்டதென்று புரியும். இதில் பெயர் வெளியிடமுடியாத செய்தி தொட்ர்பாளர்கள் வேறு.

அதுவுமில்லாமல், இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளை எப்படிங்க இவ்ளோ ‘அழகா” கோர்த்துவிடுகிறீர்கள்? அடேங்கப்பா!!!

சில விஷயங்களை சிலர் தான் சொல்லலாம், மற்றவர்கள் அந்த வாக்கியங்களைப் பயன்படுத்தக்கூடாதென்கிறீர்கள். இதயெல்லாம் பார்த்தா உங்களுக்கெல்லாம் ராஜா மேல் ஏதோ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருப்பதாகதான் தோன்றுகிறது.

எங்கேயும் பொசுங்கவில்லை ராம் அவர்களே, கொஞ்சம் உங்களிடமே பாருங்கள், அங்கேதான் பொசுங்குகிற வாசனை வருகிறது.

இப்படிக்கு,
எஸ். ராமானுஜன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அய்யோ டகிள்!

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாவுது. கண்ணில தண்ணியா கொட்டுது. யாருப்பா இந்த டகிள் பாட்சா, இப்படி பிச்சு உதறராரே?!

அய்யா டகிள், எங்கே இருந்தாலும் என்னை உடனே தொடர்பு கொள்ளவும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஆயில்யன்,

மொறை வெச்சு மொறம் போட்டுத் தாக்குறாருப்பா டகிள் சூப்பர் பாட்சா! பின்னிப் பெடலெடுக்கறதுங்கறது இது தான்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ராமானுஜன்,

இந்தப் பதிவு ராஜாவின் இசைத் திறமை அல்லது அவருடைய இசை நுணுக்கங்கள் பற்றியதல்ல என்பதை மறந்து விட்டீர்களே!

தமிழ் சினிமாத் துறையில் இருக்கும் பலருக்கும் ராஜா பிரதர்சின் ரஹ்மானிய எதிர்ப்பு நிலை நன்றாகவே தெரிந்த ஒன்று தான். ரஹ்மான் ஆஸ்கார் வாங்குவதற்குப் பல வருடங்கள் முன்பிருந்தே இப்படித்தான்.

உன்னித்துப் பார்த்தால், அழகர்மலை பாடல் பதிவு தேதி பற்றிய விவாதம் அநாவசியம். அது சொல்லும் சேதி தான் முக்கியம். ஆஸ்காருக்கு முன்னும் பின்னும் எப்போதுமே அவர்கள் அப்படித்தான் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு ராஜாவிடம் காழ்ப்புணர்ச்சி என்று நீங்கள் சொல்வதில் எனக்கு சிரிப்பே வருகிறது. நான் என்ன அவருடன் தொழில் போட்டியிலா இருக்கிறேன்? அல்லது ரஹ்மானுடன் எனக்கு ஏதாவது அண்டர்ஸ்டாண்டிங்கா ?! எதுவுமே இல்லை என்பதே உண்மை.

ராஜாவின் பல பாடல்கள் அருமை என்பதில் சந்தேகமே இல்லை. தொழில் திறமை வேறு, போட்டியாளர்களிடம் பொறாமையும் பொச்சரிப்பும் வேறு.

அதை மட்டுமே தான் விவாதிக்கிறோம் இங்கே!

டகிள் பாட்சா said...

ஐயா ராமானுஜம்!

கணித மேதை பேரை வச்சிகிட்டு தப்பு தப்பா கணக்கு போடுறீங்களே! I think you are mixing up issues.

ராம் மற்றும் நான் சொல்ல வந்தது performance or talent பற்றி அல்ல. Behaviour. A typical example of IR's behaviour is expressed in a UK Jingle " The higher up the monkey goes, the more behind it shows".

மேலே மேலே உயர் நிலையை தொடும்போது, he should have covered his ass. அசிங்கமான சொற்களையும், செய்கைகளையும் உயர் நிலை அடைந்த பிறகும் ஒருவர் தொடரலாமா என்பதே எங்கள் ஆதங்கம். இதை ரோட்டில் போகும் யாரோ ஒருவன் சொல்லியுருந்தால் யாரும் அதை பொருட்படுத்தப் போவதில்லை.

நல்ல இசையை யார் கொடுத்தாலும் அதை நாங்கள் ரஸிப்போம். அதற்காக அவர்களுக்கு காவடி தூக்கி அவர்களது வேண்டத்தகாத வார்த்தைகளையும், செய்கைகளையும் உங்களைப்போல் நியாயப்படுத்த மாட்டோம்.

இது போல பேசுவது தவறு. இதில் oscarக்கு முன், oscarக்கு பின் என்ற கால நிர்ணயம் அனாவசியம்.

காழ்ப்புணர்ச்சியோ, பொசுங்குதலோ 'இசை ஞானி'க்கே சொந்தமானது. அதை பல முறை அவர் நிரூபித்து வருகிறார்.

இடிப்பாரை ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்பது வள்ளுவர் திருமொழி.

இசை சாணி said...

Mr.ராமனுஜம்
Having die hard fans who can justify every wrong doing of IR is his greatest asset. No one disputes about the greatness of IR as a musician.
Being a person who occupied the chair for 25 years ( by hook or crook - ஆலையில்ல ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரையாம்) before ARR took it over, everyone expects the Maestro to react positively and prove his maturity and graciousness by coming out with good words about ARR's great achievement.
இசை ஞானியாகவும், பக்திமானாகவும், முற்றும் துற்ந்தவறாகவும் image ஐ வளர்த்துக்கொண்டவர், அதனை செய்கையின் மூலம் நிரூபிக்க தவறிவிட்டது மட்டுமல்ல, புழுதி வாரித் தூற்றவும் செய்கிறாரே என்பதுதான் எங்களின் வருத்தம்.
When ARR had been gracious enough to give his studio , the music library and equipment for Karthik raja's use when ARR was in London, IR should have shown his gratitude by coming out openly in praise of ARR and not to involve in this kind of digs.
தகுதியுள்ள மற்றவரையும் அவரது திறமை மற்றும் சாதனைகளை பெருந்தன்மையோடு புகழ்வதனால் IRஐ பற்றின மதிப்பு பன்மடங்கு பெருகியிருக்கும் அல்லவா!
தாழ்மை உணர்ச்சியும், தகுதிக்கு மேல் கிடைத்த உயர்வும் அவரை இது போல செய்ய சொல்லுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அய்யா டகிள்,

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானுங் கெடும்' என்பதே சரி.

'இல்லாத'வை விட்டு விட்டீர்களே?!

டகிள் பாட்சா said...

sorry

மனதில் இருந்தது. type செய்யும் வேகத்தில் விடு பட்டு விட்டது. I am Sorry. Can you please edit it if necessary?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

'இடிப்பாரை இல்லா' தான் சரின்னு நினைக்கறேன். 'இல்லா'த' தப்பு. இல்லையா?

தமிழ் கூறும் நல்லுலகில் யாருமே இதையெல்லாம் கண்டு கொள்வதில்லையா?

தலயே தப்பு செய்தாலும் 'த' போட்டாலும், தப்பு தப்பில்லையா?

ஏய், யாரங்கே? நம் அரண்மனைப் புலவர் ஆதிமந்தி எங்கே? அவரது அஜிஸ்டெண்டுகள் எங்கே? எல்லோருமா தகரக் காசுகள் தேடி, டால்டா டப்பா தூக்கிச் சென்று விட்டனர்?

என்ன ஆயிற்று நம் சாம்ராஜ்யத்திற்கு?
சுதந்திர தினமென்பதால் இன்று சும்மா விடுகிறேன். நாளையே வரவேண்டும் நல்ல பதில்.

இல்லாவிட்டால் நானும் திருக்குறளுக்கு ஒரு உறை பாக்கெட் போட்டு விடுவேன், ஜாக்கிரதை!

இராம்/Raam said...

டகிளூ சும்மா பிச்சி உதறீங்க போங்க.... :))

டகிள் பாட்சா said...

ஹல்லோ ராம்!

அதாருங்க அரண்மனை புலவர் ஆதிமந்தி? ஒரு வேளை 'கவிப் பேயரசை' சொல்றீயளோ! Is இன்னோரு controversy brewing?
கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா இன்னொரு skitஐ தயார் பண்ணிருவோமில்ல!

இத பாருங்க நமக்கு எல்லாமே டமாஸுதான். No one is untouchable or above controversy. நம்ம பகுத்தறிவு பாசறைகள் கடவுளையே விட்டு வைகாத் போது, after all mortal மனுஷர்களையும் அவர்கள் ஆடும் ஆட்டங்களையும் நாம் விமரிசிக்காமல் இருந்தால் எப்படி?
அடுத்த ரவுண்ட ஆரம்பிக்கலாமா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அட தேவுடா!

என்னுடைய 'கலக்கல் கபாலி' தொடரை நீங்கள் படித்ததில்லையா? (இப்பொழுதும் கணேஷ் சந்திராவின் 'தமிழோவிய'த்தில் இருக்கிறதென்று நினைக்கிறேன்.)

அந்தத் தொடரின் திருக்கோஷ்டியில் தமிழ்ப் புலவர் ஆதிமந்தியும் ஒரு முக்கிய அங்கத்தினர். அவரைத்தான் அழைத்திருந்தேன், வைரமுத்துவை அல்ல!

கூடிய சீக்கிரம் 'மெய்லாபுர் கலக்கல் கபாலி புரொடக்சன்ஸ்' படம் தயாரித்து ஃபிலிம் காட்டப் போகிறார்கள், தெரியுமா?!

டகிள் பாட்சா said...

இல்லை! படிக்க மிக ஆர்வம். வலையகங்களை தேடித் தேடிப் பார்த்தேன். அகப்படவில்லை. லிங்க் தரமுடியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

என்னுடைய 'கலக்கல் கபாலி' தொடர் தமிழோவியத்தில் 2003-ல் வெளிவந்து கொண்டிருந்தது. தற்சமயம் அவை அங்கே 'கோப்பு'களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, பார்க்க: http://www.tamiloviam.com/html/Kabali12.asp

அவை யாவுமே கூடிய சீக்கிரம் யூனிகோட் ஃபான்டில் மாற்றப்பட்டு மறு பிரசுரம் ஆகும், 'கலக்கல் கபாலி' தொடரும் மறுபடி தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுவரை பொறுக்க முடியாத அவசரக் குடுக்கைகள் கொஞ்சம் தட்டுத் தடுமாறி, TSCII ஃபான்ட்களை www.suratha.com மென்பொருள் உதவியுடன் Unicode-ல் மாற்றிப் படிக்கலாம்!

Good luck!

முரளிகண்ணன் said...

பின்னூட்டங்கள் கலக்கல்.

முரளிகண்ணன் said...

பின்னூட்டங்கள் கலக்கல்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க முரளிகண்ணன். நன்றி!

enRenRum-anbudan.BALA said...

ராஜா அப்படிப் பேசியது தவறு தான். அதற்கு பதிலாக அவருக்கு அளிக்கப்பட்ட வசை ஆயிரம் மடங்கு போல் தெரிகிறதே.

காழ்ப்பு தெறிக்கிறதே :(

ராஜாவிடம் இருப்பதாக சொல்லும் குறையும் குற்றமும், நம்மில் பலரிடமும் மலிந்து கிடக்கிறதே.

This is like "Eye for an eye" / Enjoying someone being stoned to death and this is simply not on.

Karthik Nagarajan said...

This column is equally humorous

http://adikkadi.blogspot.com/