என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, August 14, 2009

எழுதுவதே சுகம்

'எழுதாததும் சுகம்' என்று பாரா போன்ற ஜாம்பவான்கள் சற்றே இளைப்பாற நினைக்கலாம்.

ஓடிக் களைத்த ரேஸ் குதிரைகள், ஒவ்வொன்றாய்க் கோப்பைகள் வென்ற குதிரைகள், கொஞ்சம் ஓரமாய் நின்று, சற்று நேரம் அசை போட நினைக்கலாம். மண்ணில் புரண்டு அசதி போக்கலாம். தப்பில்லை!

வெற்றியால் வந்த அசதி அது. அடுத்த ரவுண்டு ஓடுவதற்கும், இன்னொரு கோப்பையை எட்டிப் பறிப்பதற்கும் அந்த ரேஸ் குதிரைகளுக்குத் தேவையான ஓய்வு அது. ஓய்விலும் அந்த இரும்புக் குதிரைகளின் சிந்தனை ஓயாமல் அடுத்த இலக்கைப் பற்றிய சிந்தனையில் தான் இருக்கும். இதைப் புரிந்து கொள்ள ஒரு ஓஷோ தேவை இல்லை!

"அதைப் பார்த்து நாமும் சோம்பி விடலாகாது. குப்புறப் படுத்து குறட்டை விடலாகாது. நாம் இன்னமும் ஓட வேண்டிய தூரம் மிக அதிகம். பறிக்க வேண்டிய கோப்பைகள் பலப்பல. அவர்கள் நாலு கால் பாய்ச்சலில் ஓடினால் நாம் எட்டு கால் பாய்ச்சலில் பறக்க வேண்டியிருக்கிறது" -என்று எனக்கு நானே உற்சாகப்படுத்திக் கொள்கிறேன்.

என்ன செய்வது, நாம் சோம்பித் திரிந்த காலத்தில் அவர்கள் சாதித்து விட்டார்களே!

சோம்பலை ஒழி!
யாக்கை திரி!
ஜீவன் சுடர்!
எழதுவதே பணி!
4 comments:

டகிள் பாட்சா said...

ராம்
Thats the spirit. சத்தியமாக சொல்லுகிறேன், எழுத்துலக பிதாமகர் சுஜாதாவிற்கு பிறகு நான் மிகவும் ரஸித்துப் படித்தவை உமது எழுத்துக்களே! சும்மா நான் ஐஸ் வைக்கவில்லை. கதைதான் எழுத வேண்டும் என்பதில்லை. உங்கள் blogல் நீங்கள் எழுதிய அனுபவங்களையும், சிந்தனை சிதறல்களையும் ரொம்ப அனுபவித்து படித்திருக்கிறேன். உங்களின் நகைச்சுவை இழையோடும், எழுத்துக்கள் எனக்கு பிடித்தமானவை.

ஆனால் தடாலென்று நீங்கள் வனவாசம் போனது கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. I hope everything is OK என்று என் மனது ப்ரார்த்தித்திருக்கிறது.

I am really really glad that you are back with a bang. ரஜினி ரஸிகர் மாதிரி போஸ்டர் ஒட்டலாமா! பால் அபிஷேகம் செய்யலாமா என்று யோசிக்கிறேன்.

மீண்டும் வருக! தமிழ் தொண்டு புரிக!

surge forward!
வாழ்த்துக்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

நானும் சத்தியமாகவே சொல்கிறேன் டகிள், இந்த மாதிரி ரசிகர்களுக்காகத்தான் நான் எழுதுவது.

அகத்தியர் டாக்டர் ஜெயபாரதி என்னைப் பாராட்டுவது போல், "இதெல்லாம் ஒரு சரஸ்வதி கடாட்சம்". உங்களைப் போன்ற நல்ல சில நண்பர்களும் அடிக்கடி இதையே தான் சொல்கிறார்கள்.

ஒன்று தெரியுமா உங்களுக்கு? நீங்கள் சொல்லும் அதே எழுத்துலகப் பிதாமகர் அவருடைய புத்தகங்களில் எனக்கு ஆட்டோகிராஃப் போட்டு வழங்கியிருக்கிற பர்சனல் அட்வைஸ்: 'அடிக்கடி எழுதுங்கள்!'

என்னவோ மூட்-அவுட் ஆகி, எதற்காகவோ எழுதாமல் 'உம்'மென்று இருப்பது எவ்வளவு முட்டாள்தான்ம் என்பதை உணர்ந்து விட்டேன்.

இனிமேல அப்படி வனவாசம் போக மாட்டேன்.

எழுதவேண்டியது எக்கச்சக்கமாக இருக்கிறது.

நன்றி. You made my day!

ஆயில்யன் said...

//ரஜினி ரஸிகர் மாதிரி போஸ்டர் ஒட்டலாமா! பால் அபிஷேகம் செய்யலாமா என்று யோசிக்கிறேன்//


மீ 2 :)))))

துளசி கோபால் said...

நாமெல்லாம் கடமை கண்ணாயிரங்கள் ஆச்சே......
குதிரையா ஓடணுமுன்னா குதிரையாப் பிறந்துருக்கணும்:-)))))

ஓடமுடியலைன்னா தவம் செய்யுங்க. எழுத்தே ஒரு தவ(மா)ம்.

இனிய வாழ்த்து(க்)கள்.


நானெல்லாம் ஆமை. மெள்ள மெள்ள நிதானமா நடை போடறேன். எழுத்துப்பணிக்கு என்னை அர்ப்பணிச்சாச்சு( கொஞ்சம் இருங்க. அடுப்பில் குழம்பு கொதிக்குது. தாளிச்சுட்டு வரேன்)