என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, March 13, 2013

India Made Phone!


"காலையில 7 மணிக்கு ஃப்ளைட். என்ன, ஒரு 5.30க்கு ஏர்போர்ட்ல இருந்தா போதுமில்லையா? லோக்கல் ஃப்ளைட்தான?”

“போதும்” என்றேன் நான்.

“ஏர்போர்ட்டும் ரொம்ப பக்கம்”

“ஆமா”

லாஸ் ஏஞ்சல்சில் படிக்கும் பெண்ணுக்கு டென்னெஸ்ஸி வரை ஃப்ளைட்டில் போய் அங்கிருந்து 200 மைல் டாக்சியில் போய் ஏதோவொரு தக்கணாமுட்டி குக்கிராமம் அருகே மெடிகல் காலேஜ் இண்டவியூ என்று என் நண்பன் சென்னையிலிருந்து வந்து இறங்கி இருந்தான். பெண்ணுக்கு இன்னமும் டிரைவிங் சொல்லித்தரவில்லை, கூடவே ஸ்கூல்வரை கை பிடித்துச்சென்றால் நல்லது என்று அப்பா நினைத்ததும் ஒரு காரணம்.

அவள் டாக்டரான பிறகும் இவன் ஸ்டெதாஸ்கோப்பைத் தாங்கிப் பிடித்தபடி செல்வானோ என்று எனக்கு ஒரு மனப்பிரமை.

நானெல்லாம் ஓடுகிற ஃப்ளைட்டை ரன்வேயில் டேக் ஆஃப்பில் பிடிக்கிற ரகம்! ஒன்றரை மணி நேரம் முன்னால் போனால் போதுமா என்று அவன் கேட்டதே எனக்கு ஆச்சரியம். வழக்கமாக முதல் நாளே ஏர்போர்ட்டில் போய் உட்கார்ந்து கொள்ளும் முன்ஜாக்கிரதை முத்தண்ணா அவன்.

“ஏற்கனவே ரெண்டு ஐபோன் தொலைச்சுட்டா. இந்த தடவை சீப்பா இந்தியாவுல இருந்து அவளுக்கு ஒரு போன் வாங்கிட்டு வந்துட்டேன்”

“Dad, I didn't lose them. Somebody stole them" என்று முறைத்தது எதிர்கால எம் டி.

“அதெப்படி? There is a big difference. When you leave them in the dorm kitchen or in the community hall, that is not somebody stealing from you. You lost them"

அப்பா சொல்வது டெக்னிகலாக சரியென்றாலும் அவசரமாக நான் தலையிட்டு சமாதானக்கொடி நாட்டினேன்.

“அட விடுப்பா, அதுதான் இந்தியா போன் வாங்கிட்டு வந்துட்டியே”

“அப்ப காலையில 4 மணிக்கே அலாரம் வெச்சுடறேன்” என்றபடி என் விருந்தாளிகள் தூங்கப் போனார்கள்.

விடியற்காலை 2 மணி வாக்கிலேயே கிச்சனில் கடாமுடா சத்தம் கேட்டு முழித்தேன். 7 மணி ஃப்ளைட்டுக்கு, அதுவும் பக்கத்திலேயே இருக்கும் ஏர்போர்ட்டுக்கு 5 மணி நேரம் முன்னதாகவா?  ஈதென்ன சோதனை, ஆண்டவா!

மாடியிலிருந்து கண்ணெரிச்சலுடன் கீழிறங்கிப்போனால் ...

”நான் 2 மணிக்கே எழுந்து குளிச்சிட்டேன்” என்றான் நண்பன்.

‘’ஏன் அவ்வளவு சீக்கிரம்?”

இந்தியாவுல இருந்து வாங்கிட்டு வந்த போனுக்கு உங்க daylight savings பற்றி எதுவும் தெரியல. இன்னமும் பழைய அமெரிக்க லோக்கல் நேரத்துல இருக்கு. அலாரமும் சீக்கிரமே அடிச்சு, நாங்க சீக்கிரமா எழுந்து ...”

சில பல ஐட்டங்களை அமெரிக்காவில் வாங்குவதே சிறப்பு!