என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, June 01, 2005

'செல்', கவனி, காதலி! -1

மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது சாவிக்கொத்து, மாண்ட்ப்ளாங்க் பேனா, மணிபர்ஸ், மோதிரம், சீப்பு, குல்லாய் ... இத்யாதி வகைய்றாக்களை நான் தொலைப்பது வழக்கம்.

என் சகதர்மிணி, பாசத்துடன் என் பெயரில் ஒரு அஷ்டோத்திரம் சொல்லிப் பரவசமாகச் சாமியாடி முடித்தபின், தொலைந்த பொருள் எப்படியோ என் கைக்கு வந்து விடும். என் கண்ணுக்குப் புலப்படாத அந்தர்தியான ச்மாச்சாரங்கள் அவள் கண்ணுக்கு மட்டும் ஆச்சரியமாகத் தெரிந்துவிடும். எதிலும் தொலைநோக்குள்ள அவளுக்கு மட்டும் 'ராடார் விஷன்' என்று நான் சந்தேகிப்பதுண்டு.

"இனிமேலேயாவது ஒழுங்கா, பொறுப்பா, சமர்த்தா, பாக்கிப் பேரை மாதிரி ..." என்று பிரசாதத்துடன் அவள் நாமாவளியை முடிப்பாள்.

"சர்த்தான் போம்மா கண்ணு. ஸொம்னா கூவாத" என்று மனசுக்குள் நான் விசிலடித்துச் சந்தோஷப்படுவேன்.

இம்முறையும் அம்மாதிரியே நிகழ்வுகள் அமைந்திருந்தால் இதை நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

சென்ற வாரம் நான் என் செல் போனைத் தொலைத்து விட்டேன். மறுபடியும்.

இது கொஞ்சம் இளசு, சிறுசு, புதுசு, ஒரு தினுசு.

*****************

'எல்லே'யின் ஒரு அங்கமான சைனா டவுனுக்கு அந்த வாரக் கடைசியில் நான் ஏன் தனியே சென்றேன்? அங்கே யாரைப் பார்த்தேன்? என்ன கிழித்தேன்? என்ன சாதித்தேன்? போன்ற விபரங்கள் உங்களுக்கு அநாவசியம்.

தொலைந்ததை மட்டும் இப்போது தேடுவோம்.

வெற்று இடுப்பில் வெறும் கை தடவப்பட்டதால், ஆங்கே ஒன்றும் தட்டுப்படாததால், தொலைத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அது தொலைந்து போனது ஞான திருஷ்டியில் எனக்குத் தெரிந்து விட்டது. மிஞ்சிப் போனால், போன் தொலைந்து போய் ஒரு ஐந்து நிமிடங்கள் தான் கழிந்திருக்கும்.

எங்கே தொலைத்தேன் என்பதும், எப்படித் தொலைத்தேன் என்பதும் கூட நன்றாக நினைவுக்கு வந்து விட்டது.

எங்கே தொலைத்தேன்? -அந்தச் சீன மாது வீட்டில்.

எப்படித் தொலைத்தேன்? -காலணிகளைத் திரும்பப் போடும்போது, பக்கத்தில் வைத்தது மறந்து விட்டதால்.

அலறி அடித்துக்கொண்டு காரைத் திருப்பி, செல்லைத் தவற விட்ட இடத்துக்கே வந்து, அவசரமாகப் பார்க் செய்தேன்.

அந்த வீட்டுக் கதவை நான் மறு முறை தட்டு முன்பே அது தானாகத் திறந்து கொண்டது. எட்டிப் பார்த்தேன்.

**************

இப்போது அங்கே முதலில் நான் பார்த்த அந்த இளம் சீன மங்கையைக் காணவில்லை. அவளுடைய பாட்டி மாதிரி யாரோ ஒரு கெழ போல்ட்டு மட்டும் என்னைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தபடி ஊர்ந்து வந்தது. பாட்டியின் கைகளை நானும் பாசத்துடன் பற்றிக்கொண்டேன். ஆடும் பல் செட்டுடன் பாட்டியும் பாலசரஸ்வதி மாதிரிப் பரவசமானாள்.

"கொய்ங் அபோ டொய்ங் லபோ திபோ?" என்றாள். எனக்கு அது பரிச்சயமில்லை. இருந்தாலும் பலமாகத் தலையை ஆட்டி வைத்தேன். பிறகு, சீன மொழி தவிர, ஒரு பதினோரு பாஷைகளிலாவது நான் என் செல்லில்லா அவல நிலையைப் பாட்டிக்கு விளக்கியிருப்பேன். ஊஹும். பாட்டி தொடர்ந்து பேய் முழி முழித்தாள். அல்லது பினாத்தினாள்.

திடீரென்று "சச்பாங் லிஸோ குயிங்" என்றாள். என்ன இழவுடா இது? 'சூயிங் கம் குடுடா' என்கிறாளா?

'மௌனம் எனது தாய்மொழி' என்று கண்ணதாசன் என்றோ பாடியிருப்பது என் ஆழ் மனதில் பளிச்சிட்டது.

உடனே நான் 1936 சைல்ண்ட் படக்காட்சி மாதிரி ஒரு ஆக்ட் கொடுத்தேன். பாட்டி கை தட்டி ஆமோதித்தாள். தானும் பதிலுக்கு அதே மாதிரி அவளும் ஒரு ஆக்ட் கொடுக்க ஆரம்பித்ததும் என்னால் சிச்சுவேஷனின் தீவிரத்தைத் தாங்க முடியவில்லை. அழுகை வந்தது.

நான் சிம்மக் குரலோன் சிவாஜி மாதிரி, 'செல்லம்மா, செல்லப் பாட்டிம்மா, என் செல்லக் காணும்மா, செல்லக் காணும். நான் செல்லமா வெச்சிருந்த சின்னச் செல்லக் காணும்மா. என் தங்கமில்லியா? என் செல்லமில்லியா? என் பாட்டியில்லியா? எங்கெயானும் எடுத்து வெச்சிருந்தாக் கொடுத்துடுடா கண்ணா, கொடுத்துடு, எனக்கு என் செல் வேணுமில்லியா? செல்லில்லாம நான் என்ன பண்ணுவேன்? செத்தே போயிடுவேனே"என்று நடித்துக் காட்டினேன். பாட்டி சிரித்தாள். செல் மட்டும் வரவில்லை.

கமல் மாதித் தொண்டையிலிருந்து வார்த்தையே வராமல், ஆனால் பெருங் குரலெடுத்து, "மா ம் மே மு ம் மாம்மா மம் மமா ம" என்றேன். சீனத்துப் பாட்டி சிலிர்த்துப் போனாள். கை தட்டினாள். ஆனால் அவள் கைகளில் என் செல் இல்லை.

அஜீத் மாதிரித் "தல் கிட்ட வெச்சுகிற சமாச்சாரம் தாயி. ஆரோட அப்பாவும் எனக்கு வாங்கித் தரல. நானே காசு போட்டு நானே வாங்கி வெச்சது, என் காது இருக்கற தலயில" என்று சொன்னேன். நோ ரியாக்ஷன்.

விஜய் மாதிரி ஒரு 'கில்லி'க் குத்தாட்டம் ஆடிப் பார்த்தேன்:

அய்யாவோட செல்லு அரிச்சந்திரன் ஜொள்ளு
என்னோட தில்லு பொய்க்காது
எதிரியக் கொல்லு இமயத்த வெல்லு
உனக்கொரு வேலை கிடையாது
யாரோ யாரிவளோ
ஒரு தீயோ பேயோ யாரறிவார்
ஆத்தா பேரிளமோ
அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்?

ஊஹும். டயம் வேஸ்ட்.

விக்ரம் ஞாபகம் வந்ததில், 'செல்லில்லாமல் வீடு திரும்பினால் எப்படி என் பெண்டாட்டி என்னை இரும்புச் செயினால் கட்டிப் போடப்போகிறாள், நான் காலைச் சீவிச் சீவிக் குணசீலமாய நடப்பேன், தவிப்பேன், தாடி வளர்ப்பேன், தற்கொலைக்கு முயல்வேன்' என்றெல்லாம் செய்து காட்டினேன்.

சீயானுக்கும் பெப்பே.

கடைசிப் பிரம்மாஸ்திரமாக ஒன்றை யோசித்தேன். சந்திரமுகி பொய்க்காது. இமய பாபா சுருள் குகையிருந்து அருள்வாக்கு தருவார். ஆனந்த விகடனில் கூடப் படம் போட்டுக் கதை சொல்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினி மாதிரி ஸ்டைலாகச் சாய்ந்து 'விடு விடு' என்று நடந்து வந்தேன். சடாரென்று திரும்பித் தலையைச் சிலுப்பி, "தேவுடி தேவுடி, இந்தப் பக்கம் சூடுடி, எங்காத்து செல்லுங்கள் எல்லாமே வைரங்கள், நீ கொஞ்சம் ரிடர்ன் பண்ணுடி" என்று பாடி ஆடினேன். ஜாடையும் காட்டினேன். பாட்டி, கை தட்டிச் சிரித்து, 'ரிபீட்ட்ட்ட்டு' என்றாள்.

கடைசியில் அக்கிழம் பயங்கரமாகச் சிரித்து, 'லகலகலகலகலகலக' என்றது.

'இது வேலைக்கு ஆவாது' என்று நான் ஜகா வாங்க நினைத்தேன். ஆனால் அப்போதுதான், அன்றலர்ந்த இன்னொரு அழகிய இளம் தீ அங்கே மாடியிலிருந்து கீழிறங்கியது.

*************

பேரிளம் பாட்டியின் இன்னொரு பேத்தியோ?

கீழே என்ன கலாட்டா என்று பார்க்க வந்தாள் போலும். இவளும் அழகு தான். சின்னப் பொம்மை மாதிரிச் சிரிப்பு. அவயவங்கள் சின்னதாயிருந்தாலும் செக்கச் செவேலென்று செப்புச் செப்பாக நேர்குத்தாகச் சிறப்புறச் செய்யப்பட்டிருந்தன.

ஆரியக் கூத்தே ஓசியில் பார்த்தாலும், காரியத்தை மறக்கலாமோ?

"Can you speak English?" என்றேன். "Of course" என்றாள் அவள் கொஞ்சம் விரோதமாக. "நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவளாக்கும். உன்னை மாதிரி இல்லை" என்கிற உட்பொருள் அவள் சின்னக் கண்களில் ஒளிர்ந்தது.

"மன்னிக்க வேண்டுகிறேன், எந்தன் செல்லைத் தேடுகிறேன்" என்றபடி அவசரமாக என் கதையைச நான் சொல்லி முடித்ததும், அவள் தன் பாட்டியிடம் சீன மொழியில் ஏதோ வினவினாள்.

பாட்டி முகத்தில் ஆயிரம் வாட் பல்பைப் பார்த்த நான் அக மகிழ்ந்தேன். பாட்டி இப்போது தான் என் சோகக் கதையைப் புரிந்து கொண்டாள் போலும்.

'அப்பாடி, மனைவியிடம் சகஸ்ரநாமாவ்ளி கேட்க வேண்டாம். இன் ஃபாக்ட் அவளுக்கு இது தெரியவே கூட வேண்டாம். அசமஞ்சமாட்டம் எல்லாத்தையும் உடனே உடனே சொல்லி எத்தனை நாள் தான் வாங்கிக் க்ட்டிக்கறது?'

"My grandma says that she found your cell phone"

என் காதில் செந்தமிழ்த்தேன், சோடா, சிங்கிள் மால்ட் ஸ்காட்ச், ஐஸ்கோல்ட் பியர் எல்லாம் பாய்ந்தன. ஒரே நேரத்தில்.

"Very good. Thank her for me. Thank you. Thank you both for not my having to go home empty handed and get an earful."

பிறகு, ஆங்கே நாணம் கலந்த ஓர் சிறு மௌனம் நிலவலாகியது.

தருவாளா, அவள் தருவாளா? இப்போது நான் அவளைக் கேட்க வேண்டுமா? இல்லை, அவள் கேட்காமலே தருவாளா? எப்படித் தருவாள்? எங்கே தருவாள்?

வெட்கத்தை விட்டு நான் தான் அவளிடம் முதலில் கேட்டேன்: "Where is it?"

"She says she gave it to your brother-in-law" என்றது சீனப் பைங்கிளி.

"வாட்?" என்று நான் விழித்தேன். எனக்குத் தெரியாமல், என் பெற்றோரின் சம்பந்திகள், எப்போது ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டார்கள்?

ஈதென்ன மங்காய்? "It is not possible, since I don't even have a brother in law" என்றேன்.

அவ்வழகிய இளந்தீ தன் பாட்டி பக்கம் திரும்பியது. அடித் தொண்டைச் சீன்மொழியில் பாட்டையைத் தகித்தது:

"இன்னா கெழமே, மத்தியானமே குவார்ட்டர ஊத்திக்கினியா? இன்னாங்கடி நூலு வுடுறீங்கன்னு அந்தாளு கொரலு குடுக்கறான். மச்சினன் மாப்பிள மாமியான்னு நீ இன்னாவோ கத வுட்டுக் காது குத்தற, சாடர்னே" -என்பதாக நான் ஓரளவு புரிந்து கொண்டேன்.

பாட்டிக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. என்னை ஒரு முறை புழுப் போலப் பார்த்தாள். பல் செட்டைக் கழட்டி மாடிப் படிக்கட்டின் அடியில் வீசி எறிந்தபடி தீ மிதிப்பது போல் அங்கும் இங்கும் ஓடி ஓடிப் பேத்தியிடம் என்னவோ சொன்னாள்.

சிறு பிராயத்தில் மாயவரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சீன மொழி கற்காத சோகம் என்னைக் கவ்வியது.

-இன்னும் 'செல்'வேன்

15 comments:

ஜெ. ராம்கி said...

சீன மொழியென்ன இந்தி கத்துக்க கூட மாயவரத்துல இன்னும் இடமில்லை. பட்டமங்கலத் தெரு சாரதா வித்யாலாயா இந்திக்காரங்களுக்கெல்லாம் இப்போ பாட்டி வயசாயிடுச்சு!

Mookku Sundar said...

ராம்கி,

அது சாரதா வித்யாலயா இல்லை. சாந்தா ஹிந்தி வித்யாலயம். அது சரி..டீச்சர் பாட்டியானா, உங்களுக்கு ஹிந்தி வராதா...?? டீச்சார் எளசா வேணுமா..??

தமிழே சரியா தெரிலை. இந்தியும் பல்பு வாங்குது. இதுல சீனமொளி மாயவரத்துல படிக்கணுமா..?? கெட்டுது குடி..:-)

எல்லே ராம் சாரு செல் புராணம் எழுதறன்னு, செப்பு அவயப் புராணம் எழுதறாரு. நீர் வேற குறுக்க..

சார்..நீங்க போலாம் ரை..ரைட்...( second part)

Anonymous said...

Kabali Annathae,

innum varum-nu potturukkae. Eppo varumnu podavae illiyaeba..

salpaetta chandru

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள சல்பேட்டா,

கபாலியண்ணன் ரெகுலரா எழுதறதே இல்லைன்னு பல எடங்கள்ல இருந்து தெனிக்கும் ஏகப்பட்ட மட்டையடி நடக்குது அவருக்கு. 'ஜுன் 1-ல இருந்து இனிமே ஒயுங்கா மொறயா ...'ன்னு வாக்குக் குடுத்திருக்காரு அண்ணன்.

அதனால அடுத்த 'செல்'ல இன்னிக்கே எதிர்பாருங்க.

பிச்சுவா பக்கிரி

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

மூக்கருகிட்ட இது தான் எனக்குப் பிடிச்ச விஷயம். கதை, நடை, கருத்து, உட்கருத்து , அல்லாத்தயும் வுட்டுட்டு எதுனா ஒரு அவயவத்த மட்டும் புடிச்சுக்கிட்டுத் தொங்குவாரு ;-) சும்மாவா வெச்சிருக்காரு பேரு, மூக்கருன்னு?!

சாந்தாவா, சாரதாவாங்கற கொழப்பம் எனக்கும் கூட இருக்குங்க! கண்டிப்பா 'சங்கரா' இல்லை.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அட அட அட! தேவுடா, தேவுடா! ரஜினி, அட்டகாசமா இருக்கீங்கண்ணா இந்த போஸ்ல. கன்கிராட்ஸ்!

பட்டமங்கலத் தெரு முனிசிபல் ஹைஸ்கூல் எதிரே ஒரு 'முத்தமிழ் மன்றம்' இருந்துதே, இன்னும் இருக்கா? ஜெயலஷ்மி (ஹும்ம்ம்)சௌக்கியமா?!

துளசி கோபால் said...

அவயவத்தையெல்லாம் விடுங்க! இத்தப் பாருங்க!
//என் சகதர்மிணி, பாசத்துடன் என் பெயரில் ஒரு அஷ்டோத்திரம்
சொல்லிப் பரவசமாகச் சாமியாடி முடித்தபின், //
படிக்கசொல்லவே பரவசமா இருக்கூ!!!!

Anonymous said...

Ä¡Š ²ïºÄŠ ¿¸Ã¢ø «ó¾ º£É¡ ¼×ÛìÌò ¾ýÉó¾É¢Â¡¸ô §À¡É ¸¡Ã½ò¨¾Ôõ,À¡Ð¨¸ «½¢óЦ¸¡ñÎÅó¾ «ó¾ ÀÃÁ¡Ð Å£ðÊø ¿£í¸ûºó¾¢ò¾ þ¾Ã þÇõ º£Éô ¦Àñ¸ûÅ¢ÅÃõ ÀüÈ¢Ôõ( Á¢¸ «Åº¢ÂÁ¡É «Ð ±í¸ÙìÌ «É¡Åº¢Âõ ±ýÚ
¿¢í¸û ¿¢¨Éì¸Ä¡õ ¬É¡ø «¨¾ÀÊò¾
¿¡Æ¢Ó¾ø'¸¡Ã½õ §¸ðÎÅ¡Ê' ±ýÚ
â÷Å¢¸ø¡½¢Â¢ø ºó§¾¸Á¡ö ÁÉÍ À¡Êì ¦¸¡ñÊÕ츢ÈÐ!)
´Ç¢× Á¨ÈÅ¢ýÈ¢ Å¢ÅÃõ ÜȢɡø
ÜðÎôÀ¢Ã¡÷ò¾¨É ¦ºö§Å¡õ ¦¾¡¨Äó¾ ¦ºø§À¡ý ¾¢ÕõÀì ¸¢¨¼ì¸!! º¢í¸¡ì Á¢îº¢í¸¡í(þÐ º£É ¦Á¡Æ¢..†¢†¢! «÷ò¾Á¡?«¨¾
«ó¾ Àø¦ºðº£É¡À¡ðʸ¢ð¼§Â §¸ðÎìÌí¸!!)
«ýÒ¼ý
¨„ă¡

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
This comment has been removed by a blog administrator.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள துளசி,

படிக்கச் சொல்லவே இவ்வளவு பரவசம்னா, கேக்கச் சொல்ல எவ்வளவு பரமானந்தம்னு நீங்களே கணக்குப் போட்டுக்குங்க ;-)

இதுக்கு முந்தின 'கமெண்ட்ஸ்' போஸ்டிங்ல தப்புப் பண்ணி எச்சில் தொட்டு அழிச்சிருக்கறதும் நான் தான்;-)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ஸ்ரீரங்கத்து தேவதையே,

ஸ்ரீவிகல்யாணியில் காரணம் கேட்பது இருக்கட்டும். 'இன்பக் கனா ஒன்று கண்டேனா'கக் கூட இருக்கலாமில்லையா?!

era.murukan said...

Dear Ram,

What took you to China Town? (Don't tell me your toyota camry !)

jeevagv said...

கலக்கறீங்க ராம்!
படித்தது கண்டேன், சிரித்தது கேட்டேன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

முருகன்,

எதிலே சைனா டவுனுக்குப் போனேன் என்பதா முக்கியம்? அங்கே என்ன செய்தேன் என்பதன்றோ?!

லஜ்ஜாவதியிலிருந்து முருகன் வரை இதே பேச்சு. சொல்றேன், சொல்றேன், சொல்லாட்டி விட்டுடவா போறீங்க? இந்தக் கொழந்தை கோவிச்சுக்காம அந்தக் கொழந்தையப் பத்திச் சொல்லணும், அந்தக் கொழந்தை எரிச்சல் படாம, இந்தக் கொழந்தையப் புகழணும். ஒரே டிப்ளமாடிக் க்ரைசிஸ் தான், போங்க;-)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அடேடே, வாங்க ஜீவா, வாங்க! சௌக்கியமா?

ரசிச்சுப் படிக்கறதுக்கு வந்தனம். தொடர்ந்து கலக்குவோம்;-)