அந்த முகமறியா வில்லந்நியனுடன் பேசும்போது நான் கலவரப்பட்டதற்கு மிகத் தெளிவான காரணங்கள் இருக்கின்றன.
தொலைந்து போன என்னுடைய மாஜி 'லேட்டஸ்ட் அண்ட் க்ரேட்டஸ்ட்' செல் போனில் என் அருமை இந்திய/அமெரிக்க/இதர துணைக் கண்ட நண்பர்களின் முகவரிகளும், பால் வடியும் முகங்களும், ஈமெயில் முகவரிகள், ஏன், இன்னும் சில அந்தரங்கக் குறிப்புகள், சாட் மெசேஜ்கள் கூடத் தெரியும். வில்லங்கத்தனமாக அவன் ஏதேனும் செய்ய முற்பட்டால் என்ன செய்வது?
"ஒரு பிசாத்து போனுக்கு இவ்வளவு காசு குடுத்து வாங்கறதுக்குப் பதிலா அந்த மாங்கா மாலைக்கு மேட்சா ப்ளாட்டினத்துல ஒரு ஒட்டியாணமாவது பண்ணிண்டிருக்கலாம். நாட்ல அவனவன் ஃப்ரீ போன் வாங்கிண்டிருக்கும்போது உங்களுக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியான போன்? அப்படி யார் கிட்டத்தான் அவ்வளவு நேரம் பேசறேள் ஹி ஹின்னு? ஆனாக்க நான் எப்பக் கூப்பிட்டாலும் ஏன் அது உடனேயே டிஸ்கனெக்ட் ஆயிடறது?" -மூன்று மாதத்திற்கு முந்தையக் குடும்ப் வசனம் மனதில் ஓடியது.
என் மனசு என்னென்னவோ எதிர்காலக் கற்பனைகளில் பயந்தது.
*********
ஏவிஎம் மூன்றாவது ஃப்ளோரில் சரியான மழை. மேலேயிருந்து பொத்துக்கொண்டு கொட்டுகிறது. குடும்பப் பாங்கான ரேஷன் உடையில் நனைந்தபடி மணாளனை நினைத்து முனகிக் கொண்டிருக்கிறாள் அவள். ஹீரோயினுக்கு மட்டும் வெந்நீர் கொட்டுகிறது. தோழிப் பெண்களெல்லாம் ஜலதோஷம் பிடிக்குமளவுக்குக் காலையிலிருந்து நனைந்து வெடவெடக்கின்றனர்.
செட்டுக்கு வெளியே அந்தப் பெண்ணுடைய பிரத்தியேக செல் அடிக்கிறது. ஊஹும், அவள் போன் அடிக்காது. என் போனிலிருந்து கூப்பிட்டால் ஒரு பிரத்தியேக ரிங் டோனில் கொஞ்சும், கொஞ்சிப் பாடும்.
"அந்த போன் மட்டும் ரொம்ப ஸ்பெஷல். எப்ப அடிச்சாலும் உடனே என் கிட்ட எடுத்தாந்து கொடுத்துரணும், தெரியுதா? ஷாட்ல இருந்தாக்கூட நடுவுல எடுத்துட்டு வா" என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கும் டச்-அப் பெண் பவ்யமாகப் போனை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு உடல் பதறியபடியே 'ஷாட்' நடுவில் நுழைகிறது.
"யக்கா, யக்கா! அவர் கிட்டேருந்து போனு"
30,000 வாட் வெளிச்ச வட்டத்தில் கையில் போனுடன் டச் அப்.
முனகல் நிற்கிறது. கதாநாயகி சிவந்து போகிறாள். "அவர் கிட்டேருந்தா? சீக்ரம் குடு"
"ஏய் யாருப்பா அறிவில்லாம ஷாட்டுக்கு ஊடால பூர்ரது? கட், கட், கட். அந்தக் குட்டிய செவிள்ல அறைடா"
"லைட்ஸ் ஆஃப்"
"ஃபேன் ஆன்"
"சாரி மேடம், உங்க டச்சப்பா? அதனால பரவாயில்லை. இன்னோரு டேக் போயிருவம். நீங்க பேசிக்குங்க. டேய், ஜூஸ் குடுத்தியாடா?"
"மாஸ்டர், இன்னிக்குள்ளார முடிச்சிருவமா? கந்துவட்டிக்காரன் ஸ்டுடியோ வாசல்லயே சேர் போட்டு உக்காந்திருக்கான். கழுத்துல துண்டு போட்ருவான்"
எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த ஈரக் கிளி போனில் கொஞ்ச ஆரம்பிக்கிறது. ஹேர் டிரஸ்ஸர் ஓடி வந்து தலையைத் துவட்டுகிறார். இன்னொரு எடுபிடி ஃப்ளாஸ்கைத் திறக்கிறது.
வெட்கத்துடன் சிரித்தபடி, "என்னங்க, வேற ஆக்செண்ட் எல்லாம் போட்டு இன்னிக்கு அசத்தறீங்க? என்ன ஆச்சு இன்னிக்கு உங்க தொண்டைக்கு?"
வில்ல மகா மெக்சிகப் பாவி என்னென்னவோ கேட்க ஆரம்பிக்கிறான். "சீச்சீ. போப்பா, அய்யோ, எனக்கு வெக்கமாயிருக்கு"
அய்யகோ, ஈதெல்லாம் எனக்குத் தேவையா? எங்கு போய் முட்டிக் கொள்வேன்?
சைனா டவுனுக்கு வர நினைத்ததே தப்பு. வந்தது ம்கா முட்டாள்தனம். ஏற்கனவே லஜ்ஜாவதியிலிருந்து முருகன் வரை காரணம் கேட்டுக் கொல்லுகிறார்கள். தனி மெயிலில் காதைத் திருகுகிறார்கள். இந்த அழகில், எத்தனை பேருக்கு நான் என்ன காரணம் சொல்லி, எப்படி சமாளிக்கப் போகிறேன்?
உண்மையைச் சொல்லி விடவா? சிம்பிள் மேட்டர் தானே இது? எல்லோருக்கும் தேவையான, தெரிந்த காரணம் தானே? வில்லிவாக்கத்தில் இருந்தால் என்ன, ஐரோப்பாவில் குப்பை கொட்டினால் என்ன, இது வாழ்வின் ஆதாரத் தேவை தானே?
ஊஹும். வேண்டாம். நல்லதுக்குக் காலமில்லை.
'எடுக்கவோ, கோர்க்கவோ?' காலமா இது? இல்லையே. இண்டர்நெட் கலி காலமாயிற்றே. 'சாட்'டில் ஒரு பெண் கூப்பிட்டாலே 'அலிமனி' கொடுக்கவேண்டும் என்பார்களே? நான் எவ்வளவு பெரிய நிரபராதி, வடி கட்டின சமர்த்து என்பதை எப்படி என் நண்ப நண்பிகளுக்கும், ரசிக, ரசிகைகளுக்கும் தெரிவிக்கப் போகிறேன்?
காலம் வரும். காத்திருப்போம்.
**********
செல் போன் என்பது விளையாட்டுத்தனமானச் 'சாட்'டும் சாதனம் இல்லை. அது ஒரு செய்திச் சுரங்கம், ரகசியப் பெட்டகம் என்பது புரிய ஆரம்பித்தது.
கோபம், எரிச்சல், கெஞ்சல் என்று கலங்கலாகப் பேசினேன்.
"செல்லெல்லாம் செண்பகப்பூ தானே, எந்தப் ப்ரெட்டி கேர்ள்ரா? குறிப்பா யாரச் சொல்ற மவனே, வெளயாடாத. போன வெச்சிரு. இல்ல. இல்ல. போனை வெச்சிராத. ஹலோ சார், என் போன எங்கிட்ட திரும்பக் கொடுத்திருங்கோளேன் சார். அதுல உங்களுக்கு என்ன தயக்கம்? நீ தான்பா அப்பீட்டு, நீ தான் ஜெயிச்சே. நான் அவுட்டு. தோப்புக்கரணம் போடறேன். துட்டு தர்ரேன்பா. என் கண்ணோல்லியோ ராசா, நீ போற ஃப்ரீவேயில எல்லாம் எல்லேயில இனிமேக் கூட்டமே இருக்காதுன்னு வாழ்த்துறேன், வாழ்த்துறேன், வஞ்சமில்லா வாழ்த்துறேன்"
மறுமுனையில் அவன் லைனைத் துண்டித்தான்.
அவசர அவசரமாக நான் என் நம்பரைத் திருமப்த் திரும்பத் தொடர்பு கொள்ள முயற்சித்ததெல்லாம் வீண். செல்லை ஆஃப் செய்து விட்டான் போலும்.
கோழை வில்லனுடன் இனிமேல் மெனக்கெடுவதில் பயனில்லை. போன் கம்பெனியை அவசரமாகத் தொடர்பு கொண்டேன். அதாவது தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஏகப்பட்ட ப்ரீ-ரெகார்டிங்குகள், வாய்ஸ் மெயில்கள், விளம்பரங்கள், டிஸ்கனெக்ஷனுக்களுக்குப் பிறகு ஒரு வழியாக ஏதோ ஒரு கால் செண்டருடன் இணைப்பு கிடைத்த்து.
என் சோகக் க்தையைச் சொல்லி அழுதவுடன், அந்தப் பெண் மிகவும் அனுசரணையாக, இதமாகப் பேசினாள்:"உங்களுக்கு எங்களுடன் இரண்டு வருட காண்டிராக்ட் இருக்கிறது. அதைத் துண்டிக்க நினைத்தால் நீங்கள் 300 டாலர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்"
"அடியே கிராதகி, ஏற்கனவே நான் நொந்து நூலாகி நிற்கிறேன். என் போனை எவனோ சுட்டு விட்டான் என்கிறேன், நீ கேட்கிறாயா அதிகப்படித் துட்டு?"
"ஒன் மினிட் ப்ளீஸ்" என்று என்னை 'ஹோல்டி'ல் போட்டு விட்டு அவள் ஆறு மாதப் பிரசவ விடுப்பில் சென்று விட்டாள்.
ஏழெட்டு முயற்சிகளுக்குப் பிறகு ஒரு கனிவான பாட்டி லைனில் வந்தாள். போனிலேயே அவள் காலில் விழுந்தேன்.
"பிதாமகி, முஜே ஜீனே தோ" என்றேன்.
"போனால் போகிறது. அழாதே. பேராண்டி. ஒரு புது போனை நாளையே அனுப்பி வைக்கிறேன்"
ஐந்து நாட்கள் கழிந்து ஒரு புது போன் வந்தது. ஆனால், ஒரு புத்தம் புது நம்பருடன். என்னுடைய பழைய நம்பரைத் தாற்காலிகமாகத் துண்டித்து விட்டார்களாம். அடுத்த நாளே இன்னொரு 500 டாலருக்கு என்னென்னவோ சொல்லிக்கொண்டு பில்கள் வந்தன. "மறுபடியும் மறுபடியும் புதுப் புதுப் போனா?" என்ற என் மனைவியின் பிரேரணைகள், அதற்கு நான் அவ்வப்போது சொல்லிச் சமாளித்த பதில்கள் அவற்றை எல்லாம் இங்கே எழுதினால் பாண்ட்விட்த் பத்தாது.
என் பழைய நம்பரைத் திரும்பக் கேட்டு கவர்னரிடம் கருணை மனு கொடுத்திருக்கிறேன்.
லேப்டாப்பையே பேக்அப் செய்யாத நானா போன் நம்பர்களை பேக்அப் செய்திருப்பேன்? ஆஃபீஸ் சம்பந்தப்பட்ட அத்தனை நம்பர்களையும் எல்லோரையும் கெஞ்சிக் கூத்தாடி மறுபடியும் வாங்கிக் கொள்ள ஒரு பத்து நாட்கள் ஆகி விட்டன.
ரொம்பவும் வேண்டியவர்களின் நம்பர்களைப் புது போனில் உடனேயே பதிந்து விட்டேன். அதில் எந்த சிரமமும் இல்லை. மறந்தால் தானே நினைவு படுத்திக் கொள்வதற்கு?
டிர்ர்ரிங், டிர்ர்ரிங்.... உங்கள் போன் அடிக்கிறது பாருங்கள். உங்கள் நண்பன லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தான் கூப்பிடுகிறேன். "என்ன சௌக்கியமா?"
-அப்பாடா, முடித்து விட்டேன்!
Friday, June 03, 2005
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
இந்த 'முடிச்சிட்டேன்' கதையெல்லாம் வேணாம், சைனா டவுன் போன காரணத்தைச் சொன்னாத்தான் கதை முடியும்! சொல்லிப்புட்டேன் ஆமாம்!!!
«ôÀʧÀ¡Î(í¸) «ôÀÊô§À¡Î(í¸)
Ðûº¢§Á¼õ!
º£É¡ ¼×ý §À¡ÉÐì¸¡É ¸¡Ã½ò¨¾
¦º¡øÄ¡Á Á¨Èì¸ ¨¿º¡ Š§É†¡
À¼ò¨¾ô¦ÀÕº¡ §À¡ðÎ ¿õÁ ¸ÅÉò¨¾ò
¾¢ÕôÀôÀ¡÷츢ȡ÷.
ôÕó¾¡ÅÉ º¡Ãí¸¡Å¢ø «í¸§À¡ÉÐõ,¦À¡(§À¡)ý ´ýÚ
¸ñ§¼ý ¦Àñ «íÌ þø¨Ä'ýÛ À¡Êì
¦¸¡ñÎ þÕó¾¢ÕôÀ¡÷!
§À¡ý ¬É¡ø §À¡¸ðÎõ ±ýÚ Åó¾¢Õì¸ §ÅñÊÂо¡§É?
áÁý ±ò¾¨É áÁÉÊ!
«ýÒ¼ý
¨„ă¡
அய்யோ துளசியக்கா,
நீங்களுமா! உங்க தம்பி பேர்ல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? பி. ம. நோ. பேராண் சிங்கமில்லையா நான்?
இந்த லஜ்ஜாவதி தான் ராகத்தின் பெயரையெல்லாம் போட்டுக் கலாட்டா பண்றாங்கன்னா நீங்களும் இப்படி ஏமாந்து போகலாமா? 'ஆபோகி'யில் 'மனசு நில்ப சக்தி லேக போதே'யென்று கரைந்துருகிப் பாடிக் கொண்டிருப்பவன் அல்லவா நான்?
சென்னையில சைனா பஜாருக்கு எதுக்குப் போவோம்? கிலுகிலுப்பை, ப்ளாஸ்டிக் பூந்தொட்டி, சூட்கேஸ்... இப்படி ஏதாவது வாங்கலாம்னு தானே? அதே மாதிரி தான் இங்கேயும் சைனா டவுன்.
நான் கொஞ்சம் புதுமையாக ஒரு பூனைக்குட்டி வாங்கப் போனேன்!
//நான் கொஞ்சம் புதுமையாக ஒரு பூனைக்குட்டி வாங்கப் போனேன்! //
சைனா டவுனாச்சே, பூனைக்குட்டி சமைச்சதா, சமைக்காததா?
:)) :)) :))
இது பயங்கரமான கிண்டல்பா. விழுந்து விழுந்து சிரிச்சேன்.
மொத்ததிலே நல்லா இருந்தது ராம். திரைக்கதை அம்சங்களெல்லாம் நிறைந்திருக்கிறது - முக்கியமாக கந்துவட்டிக்காரன்!
//'அலிமனி' கொடுக்கவேண்டும் என்பார்களே? //
'அலிமனி' - தமிழில் என்ன? 'வாழ்க்கைப்படி?
//செல் போன் என்பது விளையாட்டுத்தனமானச் 'சாட்'டும் சாதனம் இல்லை. அது ஒரு செய்திச் சுரங்கம், ரகசியப் பெட்டகம் என்பது புரிய ஆரம்பித்தது.
//
இணைப்பைத் துண்டித்தாலும் உங்கள் ரகசியப்பெட்டகம் இன்னமும் வில்லனின் கையில் உள்ளதே, மீட்க வேண்டாமா? செல்பேசி மீட்ட சுந்தர-ராமன் என்று பட்டப்பெயர் காத்திருந்தது, இப்படி டாமால்னு முடிச்சுட்டீங்களே?!
¸À¡Ä¢ «ñ½¡ò§¾,
¿£ ÒÄ¢ ÒÊì¸¢È «ñ½¡ò§¾Û ¦¾¸¢Ã¢ÂÁ¡
þÕó§¾ýÀ¡. ¸§¼º¢Â¡, â¨ÉÔõ ÒÊ측¾,
ÒûÇâîº¢Û ¸¢¨ÇÁ¡ìÍÖ Ã×Í Å¢ðÎðʧÂÀ¡.
«ÐìÌ ´Õ ¬ñÊ-¸¢¨ÇÁ¡ì…¡, ´Õ Å£Ãì
¸¨¾ ¼À¡øÛ §À¡ðÎ, ±ýÉ Á¡¾¢Ã¢ §¸¡¼¡Û
§¸¡Ê º£¼Õ즸øÄ¡õ, ¦¾¸¢Ã¢Âõ ÌÎÀ¡.
¬ñÊÉÐõ ¿¢Â¡À¸õ ÅÕÐ. Ðûº¢Â측
ÝôÀ÷ ¸¦ÁñÎ ÌðÐ츢ȡí¸.. «×í¸ÙìÌ
´Õ ¦ÁõÀ÷º¢ô §À¡ðÎ, ¿õÀ ¦ÁöÄ¡ôâ÷ º¨ÀÄ
¦¸×ÕÅ ¦ºöÄ¡Ç÷ À¾Å¢ ÌÎÀ¡.:-)
«ýÒ¼ý
ºø§À𼡠ºóÐÕ
//சைனா டவுனாச்சே, பூனைக்குட்டி சமைச்சதா, சமைக்காததா?//
துளசியக்கா விழுந்து விழுந்து சிரிச்சி என் கீ போர்டு உடைஞ்சிருச்சிக்கா
ஜீவா,
இப்படிப் பட்டமெல்லாம் கொடுத்துப் பாராட்டப்போறீங்கன்னு மொதல்லியே தெரிஞ்சிருந்தாக்க, ஸ்டோரி அவுட்லைனையே மாத்தியிருப்பேன். திரைக்கதை அம்சம் நல்லா இருக்குங்கறீங்க. ஒரு படமா எடுத்துருவமா? 120 % வட்டி கொடுத்துரலாமா?
ஆனாக்க ஒண்ணு ப்ரொட்யூசர் சார். ஒரு 400 பேர் விசிட் பண்ணிப் படிச்சதா டெக்னிகல் குறிப்பு தெரிவிக்குது. அல்லாமே சைலண்ட் ஜனம். நாலஞ்சு பேரு தான் என்கரேஜிங்கா எழுதறாங்க. இவங்கள வெச்சுக்கிட்டு என்னாத்த ஃபிலிம் காட்றது? ஆஸ்கரச் சுருட்றது?
மிகுந்த கவலையுடன்,
டைரக்டர்
மெய்லாப்பூர் எட்டாம் நம்பர் கடை தலிமெய்க் கயகக் குறிப்பு 420/2005/6/5:
(Released through Reuter's, CNN, Al Jazeera and Samachar- For Immediate International Release)
நிலை-மிக அவசரம்
எழுவத்தி எட்டாம் வட்டச் செயலாளர் சல்பேட்டா சந்துரு முன் மொழிந்ததையே வழிமொழிந்து பல கோடி மெய்லாப்பூரன்பர்கள் எம்முடன் டெலிபதி மூலம் தொடர்பு கொண்டிருப்பதால், துள்சியக்கா அவர்கள் இன்று முதல் கெவுரவக் கொல்கை பசப்புச் செயலாளராக நியமிக்கப் படுகிறார்.
அன்னாரைக் கெவுரவப் படுத்த தலிமெய்க் கயகத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை விபரங்கள்:
பூங்கொத்து- ரூ. 128
ரோசா மாலை- ரூ. 253.50
காடாத்துணி சால்வை ரூ. 501
பொன்னாடை ரூ. 1001
காஞ்சியிலிருந்து பிரத்தியேக ஜவ்வாது மாலை+ரோஜா மாலை+பிரசாதங்கள் -விலை மதிப்பற்றவை. (செல்லில் தொடர்பு கொல்லவும்.)
சார்ஜ் கார்டுகள் வரவேற்கப்படுகின்றன.
இங்ங்னம்
(கைநாட்டு)
மெய்லாப்பூர் கபாலி
எட்டாம் நம்பர் கடைத் தலிமெய்ச் செயலகம்
´Õ Å¡º¸Á¡É¡Öõ ¾¢ÕÅ¡º¸Á¡ ¦º¡øÄ¢ô À¾Å¢ ¦ÀüÚÅ¢ð¼ Ðûº¢ì¸¡
Å¡ú¸ Å¡ú¸! «ÅÕìÌ ¦Àí¸é÷ ú¢¸÷ ÁýÈ º¡÷À¡¸ ºó¾ÉÁ¡¨Ä «ÛôÀôÀθ¢ÈÐ!(þýÉ¡ôÀ¡ ¨ÁÄ¡ôâ÷ ¸À¡Ä¢! ¸ñÎ츢ɢ¡?)
Ðûº¢§Á¼õ ±É즸øÄ¡õ ¯í¸ ÐǺ¢¾ÇòÐÄ þôÊ Š§É¸¡Àì¾Ã¢ý ŨÄò¾ÇòÐÄ Ñ¨ÆÅЧÀ¡Ä ÅóÐ ¸¦ÁñðŠ ¦¸¡Îì¸ ÓÊ¡ЧÀ¡Ä¢Õ째! ²Ðõ ÅÆ¢ ÀñÏí¸ ôÇ£Š.
«ýÒ¼ý
¨„ă¡
சிநேகாபக்தானந்த சமாஜ ஜோதியில் ஐக்கியமாகும் லஜ்ஜாவதிக்கும் ஒரு சிறு குறிப்பு:
மாலை மேட்டர் கவனிக்கப்பட்டது. உரிய தருணத்தில் தங்களுக்கும் பதில் மரியாதை செய்யப்படும்.
தாங்களும் யுனிகோடைப் பாவித்தால் வலைப் பக்கத்தில் பூச்சி பறக்காது. அதாவது, ஆல்ட்+2 அமுக்கி அனுபூதி பெறுக.
தம்பிங்களா, தங்கைகளா,
பதவியெல்லாம் குடுத்து இப்படி கவுரதைப் பண்ணிப் போட்டீங்க!!!ம்ம்ம்ம் இதுவும்
நல்லாத்தான் கீது.
ஆனா ஒண்ணுபா, இந்த 'கொல்கை ப(வ)ரப்புச் செயலாளர் பதவி ஒண்ணும் லேசுபட்டதில்லைபா!
இப்படித்தான் ஆரம்பிக்கும். அப்புறம் எங்கியோஓஓஓஓஓஓஓஓ போயிரும்! கொஞ்சம் பின்னாலே
திரும்பிப் பாத்தாப் புரிஞ்சிருக்குமே, ஒரு காலத்துக் 'கொல்கை பரப்புச் செயலாலர்' இப்போ எங்கே
குந்திக்கினு இருக்காங்கன்றது!!!
சந்தனமாலை இப்போ ஈஸியாக் கிடைக்குது போல! ஹாங்...அதான் வீரப்பனைப் போட்டுத்தள்ளிட்டாங்கல்லே!!!
சும்மாச் சொல்லக்கூடாதுபா, இந்த அக்கா மேலே காட்டற பாசத்துலே மனசு அப்படியே 'சல்'லுனு குளுந்துருச்சுபா!
உங்களையெல்லாம் அப்பாலே கண்டுக்கறேன்பா!!!!
//ஒரு 400 பேர் விசிட் பண்ணிப் படிச்சதா டெக்னிகல் குறிப்பு தெரிவிக்குது. அல்லாமே சைலண்ட் ஜனம்//
I am one of the "சைலண்ட் ஜனம்", with at least 20 - 30 views.
with my dialup speed, when I click on the Post a comment, it takes just 2 hours before this dialogue box opens!
I enjoyed the spontaneous flow of humaor but i could not enjoy the time delay for posting a comment.
துள்சியக்கோவ்!
அல்லாம் ஒரு ப்ளானோட தான் காய்ங்கள் நவுத்தறோம்!
நீங்க கொ.ப.செ ஆனப்பறம் அடுத்து எங்க போவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதாங்காட்டியும்!
நாங்க வெறுமன ஏணியா இருந்து, ஏதோ ஒரு நாலு காசு பாக்கற வழியப் பாக்குறோம். நீங்க டெய்லி ஒரு அறிக்கைன்னு போட்டுத் தள்ளுங்க. ஸர்வே ஜனா சுகினோ பவந்து!
அன்புள்ள சுரேஷ்,
'டயல் அப்'பில் இப்படி ஒரு கஷ்டம் இருப்பது எனக்கு இது வரை தெரியாது! இருந்தாலும் தொடர்ந்து போராடுகின்ற உங்களுக்கு என் பாராட்டுகள்!
கூடிய சீக்கிரமே உங்களுக்கு ஒரு ஹை ஸ்பீடு DSL அமைய நான் பிரார்த்திக்கிறேன்.
I'm also one of that 400 silent janam..!!
- Manjula (Yet to create blogger account!)
Antha 400il nanum adakkam. I really enjoy the humour in your blogs.
andha 400 la naanum adakkam!
en sis shylaja solli unga blog ippothan padithen rasithen...atuththu edhaith tholaikka poringa?:)(china town la mattum tholachitathinga..indha penkal ithukkaaga ungala idakkumatakka kelvi kettu
maativituvaanga!!:))
mikka anbudan
Rajarishi(venkatesh)
அய்யோ, சைலண்ட் ஜனம் 400ன்னு தப்பாச் சொல்லிட்டேன் போல இருக்கு. அதுவே ஒரு நாலாயிர திவ்யப் பிரப்ந்தமாயிருக்கும் போல!
மஞ்சுளாவென்ன, அநாமதேயமென்ன, ராஜரிஷியென்ன்... சரி, இதுக்கே ஒரு புது போஸ்டிங் போட்டாகணும், அதை மொதல்ல செய்யறேன்.
Post a Comment