என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Sunday, June 05, 2005

கேளுங்கள், கொடுக்கப்படும்!

சாதாரணமாக நான் செய்யும் தான, தரும காரியங்களைப் பற்றி வெளியே பீற்றிக் கொள்வது கிடையாது.

ஒரே ஒரு ஓட்டைத் தையல் மெஷினையோ, உடைசல் குடையையோ கொடுத்து விட்டு, நான் ஊரைக்கூட்டி வைத்துக்கொண்டு, பெரிதாகப் போட்டோ எடுத்து, ஒரு பக்க அளவில் விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்வது கிடையாது. 'மீனம்பாக்கத்தில் தரை இறங்கும்போது எனக்கு டவர் உயரத்தில் கட் அவுட் வைத்தால் தான் நான் மேற்கொண்டு அமெரிக்காவிலிருந்து வழக்கமாக அனுப்பும் பத்து ரூபாய்க் காசோலையைத் தருவேன்' என்று 'உதவும் கரங்களு'க்குத் திகிலூட்ட மாட்டேன்.

சின்ன வயதிலிருந்தே இப்படி ஒரு நல்ல வழக்கம் என் ரத்தத்தில் பின்னிப் பிணைந்து விட்டது.

மூன்றாம் கிளாசில் பக்கத்து சீட் ஷீலாவுக்கு ஒரு பல்ப்பம் கொடுத்ததைக் கூட நான் வாத்தியாருக்குத் தெரியாமல் தான் கொடுத்தேன். அவளும் கண்களில் நன்றியோடு என்னை அன்று நோக்கியதை நான் இன்றும் மறக்க முடியவில்லை.

ஒன்பதாம் வகுப்பில் என் கணித விடைத் தாளை நான் அன்வர் பாஷாவிடம் பகிர்ந்து கொண்டதும் அப்படியே. அவனும் என்னை மாதிரியே ஒரு அழகான முட்டை வாங்கியதில் இருவருமே ஆனந்தித்தோம்.

கல்லூரியிலும் இதே பரோபகார வாழ்க்கை முறை தொடர்ந்தது. ரமாபிரபாவுக்கு நான் கொடுத்த 'இச்' பற்றி அவளும் யாரிடமும் மூச்சு விடவில்லை.

ஆமாம், இதையெல்லாம் எதற்கு இங்கே இவ்வளவு விலாவாரியாக நான் இப்போது சொல்கிறேன்? காரணம் இருக்கிறது. இல்லாமல் நான் செய்வேனா?

தரும் சிந்தனை மேலிட்டதால், என் கொள்கைப் பிடிப்பை- 'வலது கையால் கொடுப்பது இடது கைக்கே தெரியக்கூடாது' என்கிற பாலிசியை- நான் இப்போது சற்றே தளர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதாவது, நான் செய்யவிருக்கும் ஒரு தரும் காரியத்திற்காகக் கொஞ்சம் விளம்பரம் தேவையாகிறது.

கடமையை நன்றாக ஆற்றுவதற்காகக் கொஞ்சம் 'அப்படி, இப்படி' இருப்பதில் தவறில்லை என்று கீதையில் பகவான் சொல்லியிருப்பதாக ரஜினிகாந்த ஒரு முறை என்னிடம் கூறி இருக்கிறார்.

'அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' ரேஞ்சில் இருக்கப் போகிறது இந்த உதவி. ஜாதி, மத பேதமில்லாமல். ஆண்-பெண் வித்தியாசம் பார்க்காமல்.

இது பல்ப்பத்திலும் பெரிது. கணித விடைத்தாளை விட உயர்ந்தது. 'இச்'சினும் இனிமையானது.

ஏழெட்டு பரம்பரைக்குப் போதுமான அளவில் உதவி செய்யப் போகிறேன்.

இப்போது வாங்கிக் கொள்பவர்கள் உடனேயே வாழ்த்தாவிட்டாலும் அவர்கள் குலமாவது என் பெயர் சொல்லி வாழ்த்தும். என்னையே குல தெய்வமாகவும் கொண்டாடும்.

பாடாவதி ஹாட்மெயிலையும், இன்னும் படா பேஜார் ஈமெயில் அக்கவுண்டுகளையும் கட்டிக்கொண்டு மாரடிக்கும் பலருக்கும், ஏன், கணினிஞான சூன்யங்களுக்கும் கூட நான் உதவி செய்வதாக உத்தேசித்திருக்கிறேன். கேட்பவர்கள் அனைவருக்கும் இரண்டு கிகாபைட்டுகள் வரை கொள்ளளவு கொண்ட ஜிமெயில் அக்கவுண்டுகளைத் தாரை வார்க்க நான் உத்தேசித்திருக்கிறேன்.

கேளுங்கள், கொடுக்கப்படும்.

தட்டுங்கள், திறக்கப்படும். கதவு விலாசம்: losangelesram~at~gmail.com

தயவு செய்து எனக்குப் பாராட்டு விழாக்கள் வைக்காதீர்கள். ஏற்கனவே எனக்குக் கூச்ச சுபாவம். ப்ளீஸ். உங்கள் புரிதலுக்கு நன்றி.

9 comments:

Anonymous said...

«ñ½¡ò§¾,

þôÒÊ Àñ½¢ôÒðʧ «ñ½¡ò§¾!
þó¾ ºø§Àð¼¡Å¡ñ¼ ´Õ Å¡÷ò¾
¦º¡øĢ¢Õó¾¢Â¡É, ¨¸Åºõ þÕì¸È
50 ƒ¢¦Á¢øÄ ¯ýÌ ´ýÛ ÌðÐ
¨ºÄñ𼡠¾ÕÁШà ¬Â¢Õô§À§É!
ºø§À𼡠ºóÐÕ§ÄóÐ ¨ºÄñð ºóÐÕ
¬Â¢Õô§À§É. ºÃ¢ ×Î. ¦ÁöÄ¡ôâ÷ ¾Ä¨Á
¦ºÂĸòЧÄóÐ, ¿õÀ ¯¼ýÀ¢ÈôÒ, Ãò¾ò¾¢ý
Ãò¾õ, «øÄ¡ÕìÌõ, ´Õ ¯¼ÉÊ «È¢ì¨¸
Å¢ðÎ, þó¾ ºø§À𼡨Š¸ñÎì¸ ¦º¡øÄ¢
´Õ ¦Á¢ÖìÌ .99 «õâ측 ¸¡Í «ÛôÀ¢¨Åì¸î
¦º¡øÖ «ñ½¡ò§¾! ¿¡Û, ¸¡Í ÌÎò¾
«øÄ¡ÕìÌõ, ƒ¢¦Á¢øÄ ¸ýÀ÷õÎ º£ðÎ
±ÎòÐìÌÎòÐ÷§Ãý.
Å÷ð¼¡,
(ºø§À𼡠§Å¡½¡õ) ºÖ¨¸ ºóÐÕ

Alex Pandian said...

Do not write your mail id in the post - it will lead to spam. write it like emaild at domain dot com etc

- Alex

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

யோவ் சலுகைபேட்டா,

இப்ப இன்னான்ற நீயு? தலிவரே தானம் தருமம்னு சொல்லிகிறார், நீ இன்னாமா கண்ணு சந்துல சிந்து பாடிக்கினு சைலண்டா துட்டு வெட்டுன்ற?

அம்மாவே சைக்கிள் எனாமா குட்தாலும், காத்தடிக்கக் காசு வாங்ற நாடுப்பா இது! காவிரில எப்டியா தண்ணி வரும்? ஒரு நாயம் வோணாம்?

அண்ணன் காதுல் உய்ந்தா இன்னா ஃபீலிங்க்ஸ் ஆய்ரும்? ரோசிம்மா ரோசி.

அண்ணன் எவ்வளி, அவ்வலி செல்லும்,
முன்சாமி,
ஒன் ஆஃப் தி உபதலிவர்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

Alex,

You are right. Thanks for the warning. I will see if I can edit it soon.

LA Ram

Anonymous said...

Alex:
Thanks for the warning. I will be careful.

Kabali annathae:indha uba thaliver Munsami, thalaila rendu pottunu pottu, "innada, ul kachci koyappam pandriannu" eguru egurunu egirantanbaa. pori kalangichchu. manchchu vuttru annathae..

Anonymous said...

Hi Ram ji!
namasthe ji!
aap ke paas itne "G" jaise mail hai! lagtha hai ke aap
bahuth dhayalu honge!
shukriyaa ji..aapke dhayaldhil ko!!
BYE JI!

lajjaavathi ji!

மாயவரத்தான் said...

//பி.கே.எஸ் பதிவில் பின்னோட்டம்...

இந்த 'மாயவரம் மாஃபியா'வில் ஒரு காஃபி ஆற்றுகிற வேலையாவது எனக்குக் கிடைக்குமா?
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்//
இன்னா தலீவா, மாயுரம் மாபியாவுக்கு தலையே நீ(ர்) தானே? அப்பால இப்படி எங்களை கிண்டல் பண்(ணி)னா எப்படி வாத்தியாரே?!

அது சரி.. எங்க காபி ஆத்துற வேலை வேணும்?! 'காளியாகுடி'..'மாயுரா லாட்ஜ்'...'ஐயப்பன்'..?! :)))))))))

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஆஹா! மாயவரத்தான் அவுகளே நேர்ல வந்துட்டாகய்யா, வந்துட்டாக. நானு எங்ங்னயோ ஆத்துன காஃபிய, இங்கே காளியாகுடி அல்வாவோட சுடச்சுடக் கொண்டு வந்துட்டாகய்யா வந்துட்டாக!

என்னாது, நாந்தான் 'தல'யா?! போச்சுடா 'தளபதி'க்கும் நமக்கும் இப்படியா சண்டை மூட்டி விடறது?

ஆனாக்க ஒண்ணுங்கண்ணா. நம்ம மாஃபியாக்காரங்களுக்கு இருக்கற 'இது' மத்த தமிழன் எவனுக்குமே கிடையாதுங்கறேன், நீங்க என்ன சொல்றீக?

மாயவரத்தான் said...

என் கண்ணை டொறந்துட்டே வாத்யாரே.. உங்கள மாதிரியே நானும் தான தர்மம் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன். இப்போதைக்கு கையிலே ஒரு 127 ஜி.மெயில் கொடுக்கலாம்னு வசதி இருக்கு. யாருக்கு வேனும்னாலும் mayiladuthurai@gmail.com தொடர்பு கொள்ளவும். எனக்கும் இந்த போஸ்டர், கட்-அவுட் இதெல்லாம் பார்த்தா அலர்ஜி சொல்லிட்டேன்!!