என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Sunday, January 31, 2010

ப்ளாகரா, வோர்ட்ப்ரஸ்ஸா?

இரண்டு பெண்டாண்டிக்காரன் மாதிரி இது ஒரு அவஸ்தை என்று தெரியாமல், வோர்ட்ப்ரஸ்ஸிலும் www.writerlaram.com என்றொரு குடித்தனம் போட்டாயிற்று.

இத்தனை நாளாய் இங்கே வருபவர்களை அங்கே வாருங்கள் என்றும் அலைக்கழித்தாயிற்று. இதை இப்படியே ’அம்போ’ என்று விட்டுவிடுவது சரியல்ல, நம் வாசகர்களுக்கு அது நாம் செய்யும் துரோகம் என்று அந்தராத்மா இடித்துரைக்கிறது.

காலைச் சிற்றுண்டி கோபாலபுரத்தில், மதியச் சாப்பாடு சி.ஐ.டி காலனியில் என்றெல்லாம் முதல்வர் மாதிரி சமர்த்தாக வகுத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. அங்கே இருந்தால் இந்த ஞாபகம், இங்கே வந்தால் அந்த நினைவு என்று அல்லாடுகிறேன்.

இரண்டு இடத்திலும் அதே சாப்பாடு என்று வைத்துக்கொண்டால், அஜீரணமாகி விடாதோ?

இங்கே எந்த மாதிரி மெனு, அங்கே எப்படி எப்படி என்று ஒரே குழப்பம்.

‘ரொம்ப குழப்பமாக இருக்கும்போது, ஜோக்கரைக் கீழே போடு’ என்று ரம்மியில் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அப்படி ஏடாகூடமாகப் பண்ணி, இந்தப் பக்கத்து ஆள் முறைக்க, அந்தப் பக்கத்து ஆட்டக்காரர் தொடையில் கிள்ள, ஆட்டமே ரணகளமான நினைவுகளும் என்னை பயமுறுத்துகின்றன.

ஜெயகாந்தனின் பிரபல சிறுகதை தலைப்பு ஒன்றுதான் ஞாபகம் வருகிறது:

நான் என்ன செய்யட்டும், சொல்லுங்கோ?!

4 comments:

Vassan said...
This comment has been removed by the author.
Tech Shankar said...

வேர்ட்ப்ரஸ்ஸில் ஹோஸ்டிங் வாங்கி போட்டிருக்கீங்க. அதையே தொடரவும்.

ப்ளாக்கரின் ஃப்ரீ சர்வீஸ், வேர்ட்ப்ரஸின் ஃப்ரீ சர்வீஸைக் காட்டிலும் ஸ்க்ரிப்டிங் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், ஹோஸ்டிங் வாங்கிய பிறகு வேர்ட்ப்ரஸ் மட்டுமே தலை சிறந்தது... இ.எ.இ.?

Anonymous said...

very good naina,
shai bathe.....

Anonymous said...

ஒவ்வொன்றிற்கும் ஒரு genere வைத்துக்கொள்வது சரிப்படும். உதாரணத்திற்கு,writerlaramஇல் உங்கள் இலக்கிய (!?) கட்டுரைகள், பிளாகரில் ஆத்து அலம்பல்கள் என்று !!