என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Saturday, September 04, 2004

நீயும் 'Blog', நானும் 'Blog' ...

நீயும் 'Blog', நானும் 'Blog', நெனச்சுப் பாத்தா எல்லாம் 'Blog' !
==================================================

"இந்த 'ப்ளாக்' சமாச்சாரமெல்லாம் நமக்கு ஆவாது, இது 'சுய தம்பட்டம்', 'தனிப் புலம்பல்', ' சொந்த, சோகக்கதைங்களைச் சொல்லி அழுவுற இடம்' " என்றெல்லாம் நான் 'ப்ளாக்'குகளைக் கேலி மிகச் செய்திருக்கிறேன். பல த்ருணங்களில். பல இடங்களில்.

'தான், தன் நாய்க்குட்டி போட்டோக்கள், தனக்கு இன்ன தேதியில் இன்னாரால் நேர்ந்துவிட்ட இன்ன பிற சோகங்கள் பற்றிய அவலப் பிரஸ்தாபங்கள் என்ற கணக்கில் தான் பல 'ப்ளாக்'குகள் இருக்கின்றன என்பதை இன்னமும் மறுப்பதற்கில்லை. தனக்குப் பிடிக்காதவர்களை வகையாகத் திட்ட சொந்தத்தில் 'மைக்+லவுட்ஸ்பீக்கர்+ஓசி கரெண்ட்+ஜமுக்காளம்+சோடா' வசதியுடன் ஒரு புதிய இணையத் தொழில்நுட்ப 'செட்டப்' பாகத்தான் அவை திகழ்கின்றன.

ஆக, இந்த் 'ப்ளாக்' சமாச்சாரம் நமக்குத் தேவையே இல்லை என்று தான் நான் 'தேமே'யென்றிருந்தேன்.

என்னை மதியாத வெகுஜன விரோதக் குழும உலகங்களில் எழுதுவதையும் தவிர்த்து வந்தேன். என்னால் மிக வளர்ந்தும் கூட, என்னைக் காயப்பட்டுத்தி மகிழும் வியாபாராதிக் குரோத கேந்திரங்களாக மாறி விட்ட அவல கிளப்புகளையும், கலைந்த ஓவியங்களையும் ஒதுக்கி, அவ்வப்போது 'மரத்தடி' போன்ற அன்புசால் குழுமங்களில் மட்டும் எழுதி வந்தேன். அதுவும் ஆடிக்கு ஒன்றும் அமாவாசைக்கு ஒன்றுமாய்.

ஆனால் வலிய விதி என்னை விடுவதாயில்லை! 'இப்போதெல்லாம் ஏன் அடிக்கடி எழுதுவதில்லை? என்ன ஆயிற்று உங்களுக்கு?' என்ற அன்பான, பாசமான கேள்விகள் மட்டும் ஓய்வதாயில்லை.

'நம்ம தோஸ்த் எல்லே ராமுக்கென்று பாந்தமாக ஒரு நாலு கிலோபைட்டிலாவது சொந்த ப்ளாக் வேண்டும்' என்று சில மாதங்களாகவே கொடி பிடித்து வந்த நல்ல நண்ப, நண்பிகளிடம் "இப்ப எனக்கு எதுக்கு அதெல்லாம்? வேண்டாம், ஆள விட்ருங்கப்பா. நான் வேற என்னென்னவோ செஞ்சிட்டுக்கேன்" என்று கெஞ்சினேன். அவர்கள் விடுவதாயில்லை.

என் பாய்ச்சல்கள், பாவ்லாக்கள், சால்ஜாப்புகள் எதுவுமே அவர்களிடம் பலிக்கவில்லை. நல்ல எழுத்தை மட்டும் ரசிக்கத் தெரிந்த நண்பர்கள் அவர்கள். சில இடங்களில் நடக்கின்ற பம்மாத்து வேலைகளைப் பார்த்தும் நான் பாராமுகமாக இருப்பதில் அவர்களும் வேதனை அடைந்தவர்கள்.

"அதென்னவோ தெரியலீங்கண்ணா. 'கால் காசானாலும் கவருமெண்டு காசு' மாதிரி செண்டிமெண்டலா இது ஒரு 'இது'ங்கண்ணா. நாங்க முடிவு செஞ்சிட்டம். இதுக்கு மேல சும்மா தொண தொணன்னு படுத்தாம மரியாதையா உருப்படியா எதுனாச்சியும் எழுதற வேலையப் பாருங்கண்ணா" என்று பதில் சொல்லி, 'லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ப்ளாக்' க்கு மனை வாங்கிக் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து, யுனிகோடில் வெள்ளையடித்து, ஆங்காங்கே சரி செய்து ....அதான் உள்ள வந்துட்டீங்களே. நீங்களே பாருங்க.

நல்லாதான் செஞ்சிருக்காங்க. இந்த சாக்ரமெண்டோ சுந்தர் அண்ணனும், டொராண்டோ மதியக்காவும், மாயவரம் பரிமேல்ஸ் மாமாவும், இன்னும் பேர் சொல்லக்கூடாதுண்ணு தடுத்துட்ட பல சகாக்களுமா இவ்வளவு உறவுக்காரங்க பக்க பலமா இருக்கும்போது நாம எதுக்காகத் தயங்கணும்ணேன்? நாமளும் இந்த 'ப்ளாக்' மேட்டர ஒரு கை பாத்திருவம்ணேன். நமக்குத்தான் மடியிலயோ தலையிலயோ கனமே கெடையாதேண்ணேன்.

'சும்மா இருப்பதே சுகம்'னு ஒண்ணும் எழுதாம யோக நிஷ்டையில கெடந்தாக்க, எங்க இருக்க வுடறாங்கண்றேன்?

போன்லயும், சாட்ல்யும், மெயில்லயும் புடுங்கல் தாங்கலை. 'அய்யா ஒரு நிமிஷம். நில்லுங்க. நீங்கதான் ஆப்பய்யாவா? இல்லையா? அட, அப்ப அப்பத்தா யாரு, அவரா, இவரா?'ன்னு வேற ஆளுங்க விலாசமமெல்லாம் கேட்டு என்னியக் குடையறாங்கப்பா.

எனக்கு எதுக்குங்க மொகமூடியும் முக்காடும்? ஆப்போ, ரிவிட்டோ வெக்கணும்னு நா முடிவு பண்ணிட்டாக் 'கெட்-அவுட்'டான எழுத்து வியாபாரிங்க தாங்குவாங்களா? 'டாலர் மேட்டர்', 'எடைக்கு எடை ரூவா', 'நீயும் கவி, நானும் கவி' எல்லாம் எடுத்து வுட்டாக்க நாக்கப் புடுங்கிக்கிட்டில்ல சாவணும்? ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரிய வெரட்டுன கதையெல்லாம் ஒரு நாளைக்குக் சாவகாசமா சொல்றன்.

அது கெடக்குங்க பீடைங்க. வுட்டுத் தள்ளுங்க. நாம வேலையப் பாப்பம். என்ன நாஞ்சொல்றது?

யோவ், மைக்செட்டு, அந்த 'லஜ்ஜாவதி'ய போடுவே. இன்னா லிரிக்சு, இன்னா ரிதம்! கூட்டம் வர ஆரம்பிக்குதில்ல? அவுங்க சந்தோஷம் தான் நம்ம சந்தோஷம்.

*********************************************

அய்யா, வாங்க, அண்ணே வாங்க, அக்கா, தங்கச்சி அல்லாரும் வாங்க. வாங்க வாங்க சார் வாங்க, எல்லாரும் வாங்க. நீங்கள்லாம் வந்ததில ரொம்ப சந்தோஷம்.

வாசல்ல வாழமரம், தோரணம், பூ வேலைப்பாடெல்லாம் அட்டகாசமா செஞ்சிருக்காங்க பாருங்க. நா ரொம்பக் கொடுத்து வெச்சவங்க. நண்பர்களோட அன்பைப் பாருங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஜமுக்காளம் புதுசு, நாற்காலிகள்லாம் புதுசு. மேசையில சக்கரை, சந்தனம், பூ, பன்னீர் எல்லாம் வச்சிருக்கம்ல? எடுத்துக்குங்க. வீடு பிடிச்சிருக்கா? இன்னும் என்னென்ன செய்யணும்னு ஐடியா சொல்லுங்க, செஞ்சிடறேன். ஏசி போடப்பறம், செவத்துல எல்லாம் போட்டோங்க போட்ருவேன். கோப்புங்களுகுத் தனித்தனி ரூம்...அய்ய, ஒரு பேச்சுக்குச் சொன்னங்க. நான் என்னத்தக் கிழிக்கப் போறேன்? நான் தான் மேனேஜ்மெண்டடுனு சொல்லிக்கிட்டு வெறுமன மீட்டிங் மேல மீட்டிங்காப் போட்டு அடுத்த மீட்டிங் எப்பன்னு மட்டும் முடிவு பண்ற ஆளாச்சே! எல்லாம் அவிங்க அல்லாரும் சேர்ந்து செய்வாங்க.

அப்புறம் சொல்ல மறந்திடப் போறேன். இருங்க, உக்கிராண-உள்-இன்-சார்ஜ் சமையக்கார அய்யரைக் கூப்பிடறேன். சமையக்காரரே, யோவ்! ஜாரிணிக் கரண்டியால அக்குள்ல சொறிஞ்சிக்கிட்டு அழுக்கு வேட்டியோட நிக்காதய்யா. இங்க வந்திருக்கறதெல்லாம் யார் யாருன்னு தெரியுதில்ல? பெரிய பெரிய ஆளுங்கய்யா. யாராருக்கு என்னென்ன மெனு ஐட்டம் பிடிக்குமின்னு கேட்டுசக் கேட்டுச் செய்யணுமையா. மறந்துராதீங்க. இங்ஙன கவிச்சி சமாச்சாரமே கெடயாது, சுத்தமா பசுநெய்ல தான் அம்புட்டும்னு அவிங்களுக்கும் தெரியும்யா. உன் சமையலுக்குன்னே நாக்கச் சப்புக் கொட்டிக்கிட்டு நாங்க நிக்கறம்ல.

அட, இந்தா பாருங்க, நம்ம தோஸ்துங்க. இவிங்களை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யவே தேவையில்ல. இருந்தாலும் ஒரு மரியாதைக்குச் சொல்லிடறேன். கைலிய மடிச்சுக் கட்டிக்கிட்டு 'மாங்கு மாங்கு'ன்னு வேலை செய்யறான் பாருங்க, நம்ம 'மெயலாப்பூர் கபாலி'- பயங்கரமான கலக்கல் பேர்வழி தான் போங்க. அப்பால அந்தா பாருங்க, தமிழ்ப் பொலவர் ஆதிமந்தி, அரை ப்ளேடு பக்கிரி, பீட்டரு, மஸ்தான் எல்லாருமே ஒரு ஜமா சேர்ந்துட்டாங்கய்யா, சேர்ந்துட்டாங்க. அய்யா பாத்ரூம் பாகவதரு என்னா குஷியா கச்சேரிக்கு ரெடி பண்ணிக்கிட்டிருக்காரு பாருங்க. கூடவே அவுங்க வூட்டம்மாங்கவெல்லாம் வந்திருக்காப்ல. புதுப் ப்டவை சரசரக்க என்னமா ஓடியாடி வேலை செய்யறாங்க, பாருங்க.

'அமெரிக்க அரசியல்' மறுபடி கிண்டுவம். 'ஆஹா, என் ரதியே'ல புதுசாக் கிளுகிளுப்பா ஜாலியாப் பேசுவம்.

அப்பால நீங்க இத்தினி நாளாப் பாக்காத புதுமொகம்லாம் கூட இங்க வரதாச் சொல்லியிருக்காக.

இங்ஙனயே தங்கியிருந்து வேளாவேளைக்கு நல்லா மூக்கப் புடிக்கச் சாப்பிட்டுச் சந்தோஷமா இருங்க. இதெல்லாமே உங்களுக்காவத்தானே!

சந்தோஷமுங்க, வணக்கம். இதோ வந்துடறேன்.

என்றும் அன்புடன்,

எல்லே ராம்


20 comments:

Kasi Arumugam said...

வாங்க, வாங்க, படையோட வாங்க. பட்டையக் கெளப்புங்க.

ரசிகர் மன்றத்தலைவன்
(யாரும் பதவியைப் பிடுங்கும்குமுன் போட்டுக்கறேன்)
-காசி

க்ருபா said...

¬¬, ¬«, ¬«! þýÉ¡ º¡÷ «ôʧ ´ì¸¡ñð¼? §¸ð¼ §¸ûÅ¢ìÌ À¾¢ø ¦º¡øÄ¢¼Ïõ, ¦º¡øð§¼ý, «ì¸¡íì. «Ð ºÃ¢, ±í¸ÕóÐ §¸ì¸ÈÐ? þýÉ¡ Ò çÎ ¸ÊìÌÈ¢§ÂýÛ À¡ì¸ Å󧾡õÛ ¦Åî¸ º¡÷, «ôʧ ÅóÐ À¡òÐðÎ §À¡öðȾ¡? ÅóÐ ¸¦ÁñðÎ, ¦„¡ðÎ, ¦ÅðÎ ±øÄ¡õ §À¡¼ò ¾¡ÅøÄ? «òÐ ÁýÍÄ ¦ÅîÍ ¾¡ý feedback ¦À¡ðÊ ¸£Ð. çðÎ ¯ûÇ ÅóÐ †§Ä¡ ¦º¡øÄ çðÎì측ý¡ñ¼ åõ Òì Àñ½ ¦º¡øÏÁ¡ º¡÷? ¿¡ÂÁ¡? þýÉ¡ ÀñÏõÉ¡, anonymous feedback §À¡ðÈ Åº¾¢Â ÌÎ º¡÷. þøÄ¡í¸¡ðÊ «øÄ¡Õõ bulaag faatÄ þÐìÌÛ «ì¸×ñÎ ¸¢Ã¢§ÂðÎ ÀñÉÛõ.

ìÕÀ¡

Vanthiyathevan said...

அப்படியே தமிழ்மணத்தில பதிவு செய்யலாமில்ல? படிக்கவும் தொடரவும் ஈஜியா இருக்கும்ல...

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அசத்திட்டீங்க ராம்.

பாருங்க காசி எல்லாருக்கும் முந்தி துண்டு விரிச்சுட்டு உக்காந்திருக்கிறத. காசி, ம்ம்ம்ம்ம் கொஞ்சம் தள்ளி உக்காருங்க. எனக்கும் கொஞ்சம் இத்தனூண்டு இடம் குடுங்க.

இன்னும் நிறைய எதிர்பார்க்கும்,
மதி

எம்.கே.குமார் said...

appadiyee namma meenaa machchini kathai, soniyaa akarvaal kathai illaam solluppaa. taangkSppaa.

இராஜ. தியாகராஜன் said...

அப்படி போடுங்க ராம்,
சும்மா விருந்தோம்பல் சூப்பருங்க. யூனிகோட்/ டிஸ்கி பத்தியும் எதுனாச்சும் ஒரு இழையும், மரபிலக்கிய டியூட்டர் பத்தி ஒரு இழையும் போடுவீங்கன்னு ஆவலுடன் எதிர்பார்க்கும்,
நண்பன்
இராஜ.தியாகராஜன்

Mookku Sundar said...

ராம்...வருக.வருக.

கலக்குங்க.

Anonymous said...

/தனக்குப் பிடிக்காதவர்களை வகையாகத் திட்ட சொந்தத்தில் 'மைக்+லவுட்ஸ்பீக்கர்+ஓசி கரெண்ட்+ஜமுக்காளம்+சோடா' வசதியுடன் ஒரு புதிய இணையத் தொழில்நுட்ப 'செட்டப்' பாகத்தான் அவை திகழ்கின்றன/

என்னய்யா நீரும் அதையேதான் செய்ய போறீர் போல இருக்கே..

/'கெட்-அவுட்'டான எழுத்து வியாபாரிங்க தாங்குவாங்களா? 'டாலர் மேட்டர்', 'எடைக்கு எடை ரூவா', 'நீயும் கவி, நானும் கவி' எல்லாம் எடுத்து வுட்டாக்க நாக்கப் புடுங்கிக்கிட்டில்ல சாவணும்? ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரிய வெரட்டுன கதையெல்லாம் ஒரு நாளைக்குக் சாவகாசமா சொல்றன்/

ம்ம்.. இங்க எழுத வந்த நோக்கம் இப்போ புரிஞ்சிட்டுது.

Anonymous said...

«ýÀ¢ý þáõ,

Å¡úòиû!! ¾¡Á¾Á¡¸§ÅÛõ ¦¾¡¼í¸ ÁÉÍ ¨Åò¾£÷ì§Ç?!Å¡ú¸!!

À¨Æ "¸¨¾¸¨Ç" ±øÄ¡õ ±ÎòÐ ÅîÍ ±ýÉ ¦ºöÂ?
§À¡ÉÐ §À¡¸ðÎõ Å¢Îí¸.. ÒÐÍ Òк¡ Å¢ºÂí¸¨Ç ¯í¸ ¾É¢À¡½¢Â¢Ä ¦º¡øĢ츢𧼠þÕí¸.

¯í¸¸¢ð¼ «¾ò¾¡ý ±¾¢÷À¡÷ì̧ȡõ.

¬º¢ô Á£Ã¡ý

Unknown said...

வாங்கைய்யா ஐயா வரவேற்க வந்தோமய்யா. சரி அடுத்தவங்க எல்லாம் மைக் செட்டு போடுறாங்கன்னு சொல்லிட்டு நீங்களும் அதே செய்யிற மாதிரி இருக்கு.

எது எப்படியோ இராமாயணம் எல்லாம் இல்லாம நல்லா இருந்தா சரி :-)

Sundar Padmanaban said...

எல்லே அண்ணாத்தே,

தினமும் ஒரு Block வைத்து Blog Mahal-ஐக் கட்ட மனமார்ந்த வாழ்த்துகள். "பழைய" 'இத்துப்போன" ஐட்டமெல்லாம் தூரக் கடாசிட்டு புதுசா மேட்டரு கொடுங்கன்னு கேட்டுக்கறேன்.

Fahrenheit 9/11-க்கான உங்கள் விமர்சனத்தைப் படித்துவிட்டு, படமும் பார்த்துவிட்டு கனத்துப் போன மனதின் பாரம் இன்னும் நீங்கவில்லை. அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் சடலக் காட்சி இரவுத் தூக்கத்தைத் தினமும் துரத்துகிறது.

நிறைய எழுதுங்கள். ஆடிக்கொன்றும் அமாவாசைக்கொன்றுமாக இல்லாமல் தொடர்ந்து எழுதுங்கள் - பேராசைதான் எனக்கு.

அன்புடன்
சுந்தர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

«ýÀ¡É ¿ñÀ÷¸Ç¢ý À¡ºÁ¡É ÅçÅüÀ¢ø ±ý þ¨Á¸û Àɢ츢ýÈÉ. ¾É¢ Á¼ø¸Ç¢ø Å¡úòÐ ¦º¡ýÉÅ÷¸ÙìÌ ´Õ ¾É¢ §¾íìŠ.

¸ñÊôÀ¡¸ô À¨Æ Ìô¨À¸¨Çì ¸¢ÇÈ¢î §ºü¨È Å¡È¢ þ¨ÈôÀÐ ±ý §¿¡ì¸Á¢ø¨Ä. ±ýÉ¢¼õ ±ý ¿ñÀ÷¸û ±¾¢÷À¡÷ôÀÐõ «Ð þø¨Ä.

¯í¸Ù¨¼Â ¬ì¸ â÷ÅÁ¡É À¾¢ø¸û ±ÉìÌ °ì¸ ¼¡É¢ì ±ýÀ¨¾ ÁðÎõ ÁÈÅ¡Áø ¦¾¡¼Õí¸û.

Å¡í¸, ¿ÁìÌ §Å¨Ä ¾¨ÄìÌ §ÁÄì ¦¸¼ì¸¢øÄ! ¬ÃõÀ¢ôÀõ.

±ýÚõ «ýÒ¼ý ¾¡ý,

±ø§Ä áõ

Anonymous said...

>> 'தான், தன் நாய்க்குட்டி போட்டோக்கள்,<< தனக்கு இன்ன தேதியில் இன்னாரால் நேர்ந்துவிட்ட இன்ன பிற சோகங்கள் பற்றிய அவலப் பிரஸ்தாபங்கள் என்ற கணக்கில் தான் பல 'ப்ளாக்'குகள் இருக்கின்றன என்பதை இன்னமும் மறுப்பதற்கில்லை.

அய்யா அதி மேதாவி அவர்களுக்கு

வணக்கம்.

எனக்கு தெரிந்து தமிழ் வலைப்பதிவுகளில் “நாய்க்குட்டி” போட்டோ போட்டவன் நான் மட்டும் தான்...இதில் என்ன தவறு..?
உமக்கு என்ன வலி..!! அக்குளில் நாய்முள்ளா..?

எங்களுடன் குறுகிய காலம் வாழ்ந்துவிட்டு இறந்து போன ஒரு நல்ல ஜீவன் பற்றி எழுதியிருந்தேன், பல மாதங்களுக்கு முன்பு..ரொம்ப நாட்களாக இருந்து வரும் இணையக்கூற்றான ”அவரவருக்கு அதது“ என்பது உமக்கு மறந்து போய்விட்டதோ..?

நீர் வேண்டுமானால்,மீனாவுக்கு பேன் எடுத்தேன்,சோனாவுக்கு காது அழுக்கெடுத்தேன்,நீனாவுக்கு கால் நகம் வெட்டினேன் என்று எழுத வேண்டியதானே..அதுதானே மக்களுக்கும் பிடிக்கும்..? யார் என்ன சொல்ல போகிறார்கள்..?

லோஸ் ஏஞ்சலஸ்ராம்.ப்ளாக்ஸ்பாட் என்கிறதை விட a-tamil egoistical megalomaniac.blogspot எனும் பெயர் கன கச்சிதமாயிருக்கும் உமது வலைப்பதிவுக்கு.


வாசன் பிள்ளை
அல்புகர்க்கி,புது மெக்சிக்கொ

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

«ýÒûÇ Å¡ºý,

¿ÄÁ¡¸ þÕ츢ȣ÷¸Ç¡? ±ò¾¨É ¿¡Ç¡Â¢üÚ ¯í¸Ù¼ý §Àº¢? Å£ðÊø ±ø§Ä¡Õõ ¿ÄÁ¡? þí§¸ ¿£í¸û Åó¾¢Õó¾§À¡Ð ¾ó¾ ¸Ê¸¡Ãò¨¾ þýÉÓõ ¨Åò¾¢Õ츢§Èý.

«ó¾ '¾¡ý, ¾ý ¿¡öìÌðÊ' §Áð¼÷ ̓¡¾¡ ¦º¡ýÉÐ. «¨¾ «ôÀʧ §À¡ðÊÕó§¾ý. ¿£í¸û ŨÄôÀ¾¢× ¨Åò¾¢ÕôÀÐõ «¾¢ø ¿¢ƒÁ¡¸§Å ¯í¸û Å£ðÎ ¿¡öìÌðÊ ÀüÈ¢Ôõ ±Ø¾¢Â¢ÕôÀÐ ¦¾Ã¢Â¡Ð. ¦¾Ã¢Â¡Áø ¯í¸¨Çì ¸¡ÂôÀÎò¾¢Â¢Õó¾¡ø ÁýÉ¢Ôí¸û.

±í¸û Å£ðÊÖõ ´Õ ¦ƒ÷Áý ¦„ôÀ÷Î ¿¡öìÌðÊ þÕ츢ÈÐ. ¿¡ý þô§À¡Ð þ¨¾ ±ØÐŨ¾ìܼ ±ý „¥¨Åì ¸Êò¾Àʧ À¡÷òÐì ¦¸¡ñÊÕ츢ÈÐ. ¦ºý¨É¢ø 'ÁŠ¾¡ý' ±ýÚ ´Õ ¿¡öìÌðʨ ÅÇ÷òÐÅ¢ðÎ «¨¾ô À¢Ã¢Â §¿Ã¢ð¼§À¡Ð ¿¡ý Àð¼ ÅÄ¢ þÕ츢ȧ¾, þýÚõ «¨¾ ¿¢¨ÉòÐìܼô À¡÷ì¸ ÓÊÂÅ¢ø¨Ä.

ÀÄ ¿¡ð¸û ¸Æ¢òÐ ¯í¸Ù¼ý ¦¾¡¼÷Ò ¦¸¡ûž¢ø ±ÉìÌ Á¢Ìó¾ Á¸¢ú.

±ýÚõ «ýÒ¼ý ¾¡ý,

±ø§Ä áõ

Arun Vaidyanathan said...

Welcome LA.RAM for the Blog world :)

PKS said...

Welcome to Tamil Blog World and all the very best! - PK Sivakumar

Vassan said...

எல்லே ராம் அவர்களுக்கு:

சுஜாதா ரங்கராஜன் சொன்னது போல எனும் குறிப்புடன் சொல்லியிருந்திருக்கலாம்,நீங்கள்.நானும் கால்முட்டியில் அடிபட்டது போல குரைத்திருந்திருக்க மாட்டேன்.சுஜாதா
சொன்னால் மறுபேச்சு கிடையாது எனவெண்ணி நீங்கள் எழுதியது எங்கோ கொண்டுபோய்விட்டு விட்டது.

சொற்களை கொட்டி விட்டேன்.பொறுத்தருளுங்கள்.

அரசலாற்றில் தண்ணீர் வேகத்தோடு சுழித்துக் கொண்டோடிய காலத்தில்,அதில் விளைந்த அரிசியை சாப்பிட்டதன் பயன் சில சமயங்களில் வெளிப்பட்டுவிடுகிறது.மன்னிக்க...

Vassan said...

எல்லே ராம் அவர்களுக்கு:

சுஜாதா ரங்கராஜன் சொன்னது போல எனும் குறிப்புடன் சொல்லியிருந்திருக்கலாம்,நீங்கள்.நானும் கால்முட்டியில் அடிபட்டது போல குரைத்திருந்திருக்க மாட்டேன்.சுஜாதா
சொன்னால் மறுபேச்சு கிடையாது எனவெண்ணி நீங்கள் எழுதியது எங்கோ கொண்டுபோய்விட்டு விட்டது.

சொற்களை கொட்டி விட்டேன்.பொறுத்தருளுங்கள்.

அரசலாற்றில் தண்ணீர் வேகத்தோடு சுழித்துக் கொண்டோடிய காலத்தில்,அதில் விளைந்த அரிசியை சாப்பிட்டதன் பயன் சில சமயங்களில் வெளிப்பட்டுவிடுகிறது.மன்னிக்க...

வாசன் பிள்ளை
அல்புகர்க்கி

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அடாடா, விட்டுத் தள்ளுங்க பிரதர்!

'ஜெனரிக் ப்ளாக்' பற்றிய சுஜாதா கமெண்டைப் பல முறை பல இடங்களில் நீங்களும் படித்திருப்பீர்கள். சமீபத்திய விகடன் ஒன்றில் கூட இது பற்றி எழுதியிருந்தார்.

உங்களை எனக்கு நன்றாகவே தெரியும்.

இங்கே ஏதாவது வம்பு கிடைக்காதா என்று அலைபவர்களைப 'பசித்த புலி தின்னட்டும்' :-)

என்றும் அன்புடன் தான்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Anonymous said...

yes. thank you for this .