என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, October 04, 2010

எந்திரன், ஒரு மந்திரத் தந்திரன்!

ஷாருக், கமல், ஐங்கரன், சன் பிக்சர்ஸ், கிளிமஞ்சாரோ, 150 கோடி, தீபாவளி ரிலீஸ் தான், இல்லை இல்லை அதற்கும் முன்பே என்று மீடியாவில் ஏதாவது எல்லோருக்கும் தினந்தோறும் தீனி போட்டுக் கொண்டிருந்த 'எந்திரன்' வந்தே விட்டது!

இரண்டு மூன்று நாட்களாக, வழக்கமான கட்அவுட் பாலாபிஷேக கோலாகலங்கள் தமிழ்நாடெங்கும் நன்றாகவே நடைபெற்று முடிந்ததாகப் பத்திரிகைகள் சொல்கின்றன. ‘எல்லே’யில் வழக்கமாகப் படத்தை ஓட்டும் நபர்கள் கிட்டக்கூட நெருங்க முடியாத அளவுக்குப் படத்தின் வெளிநாட்டு விநியோக விலை ஏற்றப்பட்டதாகவும், அதைச் சரிகட்டும் முயற்சியாகவே டிக்கெட் விலைகளும் ஏற்றப்பட்டதாகவும் சால்ஜாப்பு சொன்னார்கள். நியூயார்க்கில் $50, லாஸ் ஏஞ்சல்சில் $30 என்று டிக்கெட் விலைகள் எக்குத்தப்பாய் இருந்தாலும், எந்திரன் பார்க்காமல் என்னால் இருந்துவிட முடியுமா?

Enthiran1

ஞாயிறு இரவு ஷோ என்பதாலா அல்லது மேற்சொன்ன டிக்கெட் விலை காரணமா, தெரியவில்லை: தியேட்டரில் 30 பேர் கூடத் தேறவில்லை. மற்ற தியேட்டர்களிலும் கூட்டம் குறைவென்றே சொன்னார்கள்.

”நீர் பட்டர் பாப்கார்ன் சாப்பிட்டது, பாத்ரூம் போனது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், படம் எப்படி?” என்கிறீர்களா?

வருகிறேன், வருகிறேன். அங்கேதானே வந்து கொண்டிருக்கிறேன்!

ஹிந்திக்காரர் ஒருவர் கௌண்டரில் “ஹிந்தி வர்ஷன் பார்க்கத்தானே நான் வந்தேன், அது எப்படி தமிழ் ப்ரிண்ட் ஆனது? சப் டைடில் உண்டா? ஆர் யூ ஷ்யூர்? அது என்ன மொழியில்?, ஏன் எல்லாமே ஆனை விலை, குதிரை விலை? இதெல்லாம் ரஜினிக்குத் தெரியுமா? யஹான் க்யா ஹோ ரஹா ஹை?” என்று அனத்தோ அனத்தென்று அனத்தி, சத்தம் போட்டு, வெள்ளைக்கார கௌண்டர் கிளார்க்கிடம் மயிர்பிடி சண்டை + அவர் மனைவி தலையில் அடித்துக்கொண்ட கலர்ஃபுல் ட்ரெய்லர் பார்த்தபோதே எனக்கு சந்தோஷம் பீறிட்டுக்கொள்ள ஆரம்பித்தது.

எல்லா ஜனங்களும் ‘ஹா’வென்று இந்த ஃப்ரீ ஷோவைப் பார்த்திருக்கையில், “உமக்கு வேண்டாமென்றால் அந்த டிக்கெட்களை என்னிடம் கொடும்” என்று என் மனைவி அந்த அனத்தருக்கு முன்னால் பாய்ந்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, மிஸஸ். தலையடியுடன் அவர் ஹிந்தியில் தொடர்ந்து திட்டியபடியே உள்ளே நுழைந்தார்.

ரிஷி தாடியுடன் ரஜினி ரோபோவை ரிப்பேர் செய்வதாக பாவ்லா, சந்தானம், கருணாசின் சப்பை காமெடி என்று படம் ஆரம்பத்தில் நத்தையாய் நெளிந்தாலும், ஐஸ் வந்தவுடன் திடீரென்று ஒரு ஜிலீர் சுறுசுறுப்பு பெற்று அதிர ஆரம்பித்தது.

அப்போது ஆரம்பித்த வேகம் தான், கடைசி வரையில் அந்த வேகம் குறையவே இல்லை. போலீஸ் மீட்டிங்கள், கோர்ட் காட்சிகள் என்று தமிழ் சினிமாவின் அரதப்பழசு இழுவை காட்சிகளைக்கூட ஸ்பீட் ராம்பிங், ஃப்ரேம்ஸ் அட்ஜஸ்ட்மெண்ட் மூலம் வேகமோ வேகப்படுத்தி இருப்பதே ஒரு விஷுவல் ஸ்டைல். ரத்னவேலுவுக்கு ஒரு சபாஷ்!

இது முழுக்க முழுக்க ரஜினி படம், ரஜினியின் ஸ்டைலே வேகம், எனவே எல்லாமே படு ஃபாஸ்ட் என்று முதலிலேயே இயக்குனர் ஷங்கர் புத்திசாலித்தனமான முடிவெடுத்திருக்கிறார். எடிட்டிங்கிலும் அதுவே தாரக மந்திரம்.

சுஜாதா அடிக்கடி சொல்லுவார்: “திரைக்கதையை What if? என்று ஒரே வரியில் சுருக்கிச் சொல்லமுடியுமானால் அது வெற்றி பெற சாத்தியம் அதிகம்” என்று.

எந்திரனில் What If: ஒரு ரோபோவுக்கு மனித உணர்ச்சிகளை உண்டாக்க முடிந்தால் என்ன நடக்கும் என்பதே. அப்பாவி சமர்த்து மெஷின் அசகாயசூரன் ஆகிறது, அடிதடி சாம்பியன் ஆகிறது. “நானே நினைச்சாலும் என்னால என்னை கண்ட்ரோல் பண்ணமுடியாது” ரேஞ்சுக்கு ஆட்டம் போடுகிறது.

அழுத்தமான களம் அமைந்துவிட்டதால் CGI, VFX என்று சீனுக்கு சீன் அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராயை ஏதோ ஒரு ஊறுகாய் மாதிரி ஓரமாகக் காட்டாமல், படம் முழுக்கவே காட்டி இருப்பதில் படம் நிறைவாக இருக்கிறது. “அதெப்படி இந்தப் பொண்ணு மட்டும் இன்னும் அப்படியே இருபது வருஷமா இளமையாவே இருக்குது?” என்று பெண் ரசிகைகளின் காதிலெல்லாம் பொறாமைப் புகை!

க்ளைமேக்ஸ் காட்சிகள் சற்றே அதிகமென்று நினைத்தாலும், அந்த விருவிருப்பு, அவசரம், தடாலடி, நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது.

ரஹ்மானின் இசையில் இன்னும் எதிர்பார்த்து ஏமாந்தேன். சண்டைக்காட்சிகளில் பின்னணி இசையில் கிளிமாஞ்சாரோ, கிளிமாஞ்சாரோ என்றெல்லாம் கத்தி இப்படி ஒரு கற்பனை வரட்சியைக் காட்டவேண்டுமா?

படம் முழுக்கவே திகட்டத்திகட்ட ரஜினியும் ஐசும் தான்! வேறென்ன வேண்டும் ரஜினி ரசிகர்களுக்கு? அக்டோபரிலியே தீபாவளி!

பல வட இந்திய, மற்றும் தமிழ் பத்திரிகைகளில் எந்திரனுக்கு 5 க்கு 3 அல்லது 3.5 என்று மார்க் போட்டிருந்தார்கள். ஏன் இந்த கஞ்சத்தனம்?

படம் சூப்பர், பாஸ்! 90 சதவீதத்துக்கும் மேலே!

9 comments:

ஆயில்யன் said...

//அக்டோபரிலியே தீபாவளி!//


அதான் கொண்டாடிட்டோம் - கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்:))))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆயில்யன் said...
//அக்டோபரிலியே தீபாவளி!//


அதான் கொண்டாடிட்டோம் - கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்:))))

ரிப்பிட்டேஈஈ....

துளசி கோபால் said...

டிவிடி வந்தாப் பார்க்கலாமுன்னு இருக்கேன்.

ராவணன் வாங்கி வச்சு மாசம் மூணாச்சு. இன்னும் நேரம் கிடைக்கலை. போதாக்குறைக்கு அந்த டிவிடி, நம்ம ப்ளேயரில் வேலை செய்யலை.

நம்ம லேப் டாப்பிலும் டிஸ்க் ட்ரைவ் மண்டையைப் போட்டுருச்சு.

இன்னும் எதுக்கு இந்த வேர்டு வெரிஃபிகேஷன்?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

தேங்க்ஸ் ஆயில்ஸ், பாலகுமாரன்!

ஹாய் துளசி! ஃபிலிப்ஸ் ஒரு ப்ளேயர் பண்றாங்க, அதுல எந்த ஊரு டிவிடியும் வேலை செய்யும் (DVDs are regionalized into 5 major types. They will not play a DVD from a different region) டீடெய்ல்ஸ் தனி மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

ஆனால், ஒரு ரிக்வெஸ்ட்: எந்திரன் லாப்டாப்பிலோ டிவிடியிலோ பார்த்தால் அதன் முழு பரிமாணம் (Sound Effects and VFX) உங்களுக்குக் கிடைக்காது. தியேட்டரிலியே பாருங்கள்!

"தலைவா, தலைவா!” ஆர்ப்பரிப்பெல்லாம் இப்போது கொஞ்சம் குறைய ஆரம்பித்திருக்கும்!

துளசி கோபால் said...

சண்டிகர் வாசம் இப்போ. தியேட்டருன்னா ஹிந்தியில்தான் பார்க்கணும்:(

RVS said...

எல்லே ராம் சார்! "தலைவா தலைவா" அப்படின்னு கோஷம் போடும்போது, உடுக்கை அடிச்சு பூசாரி மந்திரிக்கற மாதிரி சிலபேருக்கு சாமி வந்து ஆவேசமா ஆட ஆரம்பிச்சுடறாங்க. பக்கத்துலே இருக்கறவங்க மேலே விழுந்து ஆடும்போது பல்லு மோரை பேந்து போய்டுது.
ஃபாரின்ல கூட ரெண்டு வாரத்துக்கு ஃபுல்லுன்னாங்க, நீங்க காத்தாடுதுன்னு சொல்றீங்க.
ரஜினியோட கோட்டையான சென்னையில் டிக்கெட் கிடைக்க மாட்டேங்குது. எப்படியாவது இந்த வாரத்துக்குள்ள டிக்கெட் கிடைக்கனும்னு கபாலிக்கு வேண்டிகிட்டேன். சன்ல பத்து நிமிஷத்துக்கொருதரம் எந்திரா...ரா.. அப்படின்னு வெளம்பரம் போடும்போது பசங்க என்னை பார்த்து மொறைக்குது. என்னது... என்ன கோட்டையா.. சார் அரசியல் கோட்டை இல்லை சார்... ரசிகர்களின் கோட்டை.. அவர்தான் எப்ப வருவார் எப்டி வருவார்ன்னு யாருக்குமே தெரியாது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள RVS,

ரிலீஸ் தேதிகளில் கூட்டம் இருந்தாலும், இரண்டு வார ஹவுஸ்ஃபுல் நியூசெல்லாம் கப்சா! ‘என்வழி’, ‘தட்ஸ்டமில்.காம்’ இவற்றில் கூட அமெரிக்காவில் வசூலில் எந்திரனே முதல் இடம் என்றெல்லாம் காதில் பூவைக் கூடை கூடையாக சுற்றியிருந்தார்கள்!

எந்திரனுக்கோ, ரஜினிக்கோ இந்த மாய்மாலமெல்லாம் தேவை இல்லை. இந்த வார அமெரிக்க கலெக்‌ஷன் நிலவரம் உண்மை நிலையைச் சொல்லி விடும். அது பற்றியும் எழுதுகிறேன்.

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty

கானகம் said...

அமெரிக்காவில் கூட்டம் கமின்னா ரஜினி ஏன் வருத்தபடனும்..? நம்மாளுகளுக்கு யு.எஸ் டாப் 10ல இருக்கு, யூ.கேவுல 12ம் இடத்துல எந்திரன்னு பூச்சூத்துறாங்க..இங்கையும் ( கத்தார்ல) பட்டையக் கெளப்பிருச்சி. 30ம் தேதி சாயந்திரமே பாத்தாச்சு..கூட்டத்துல கோவிந்தா வேணாமேனு விமர்சனம் இல்லை..