என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, August 10, 2010

ஐஃபோன், ஐயையோஃபோன்!

எனக்கும் ஆப்பிளுக்குமான பகை இன்று நேற்றல்ல, இருபது வருடத்துக்கும் மேலான ஜென்மப்பகை. மிகுந்த பாரம்பரியம் கொண்டது!

த்ரேதாயுகத்தில் நான் கம்ப்யூட்டர்லேண்ட் என்கிற நிறுவனம் நடத்திவந்தபோது, ஆப்பிளுக்கும் நாங்கள் பல கிளைகளில் டீலர்ஷிப் வைத்திருந்தோம். IBM, Compaq, HP, Zenith, AST, Leading Edge என்று பல கம்பெனிகளுடன் நாங்கள் நல்ல முறையில் வியாபார உறவு வைத்திருந்தாலும், ஆப்பிளுடன் மட்டும் எப்போதும் ‘க்‌ஷணச் சித்தம், க்‌ஷணப் பித்தம்’ தான்!

அவர்கள் அடாவடித்தனத்துக்கு எல்லையே இல்லை. ஹெர்குலிஸ் சைசுக்கு இருந்த IBM கம்பெனியை ’84ல் எதிர்த்த பொடிசு என்பதால் ஆப்பிளுக்கு எப்போதுமே ஒரு ரவுடி இமேஜ்தான். ஆப்பரேடிங் சிஸ்டத்திலிருந்து ஹார்டுவேர் வரை எல்லாமே ஒரு தனி ரூட். ’ஊருடன் ஒத்து வாழ்’ என்பதில் ஸ்டீவ் ஜாப்சுக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை!

திடீரென்று நினைத்துக் கொள்வார்கள், மறுநாளே அத்தனை கிளைகளுக்கும், ஒவ்வொரு கிளைக்கும் $ 50,000 டாலருக்கு உதிரி சாமான்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) வாங்குங்கள் என்று அதிரடி உத்தரவு போட்டுப் படுத்துவார்கள். ஸ்பேர்ஸ் என்ற பெயரில் அவர்களிடன் போணியாகாத அத்தனை கண்டாமுண்டான்களையும் எங்கள் தலையில் கட்டி விடுவார்கள். எதையும் திருப்பி அனுப்ப முடியாது, எதுவும் வியாபாரமும் ஆகாது. விலையோ, ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலை!

”எங்கள் ப்ராடக்சை நன்றாக விளம்பரம் செய்யுங்கள், பணம் தருகிறோம் என்பார்கள். சரி என்று நாம் முன் செலவு செய்து ஆயிரக்கணக்கில் நமக்குச் செலவான பிறகு, அவர்களிடமிருந்து ஒரு பைசா பேறாது. ஏதாவது சால்ஜாப்பு சொல்லி நம்மை அழவைப்பார்கள். HP எல்லாம் இந்த விஷயத்தில் மகா கௌரவமான கம்பெனி. டீலர்களை நஷ்டப்படவே விடமாட்டார்கள்.

‘89 என்று நினைக்கிறேன். ஒரு சுபயோக சுபதினத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, யார் வந்து Macintosh கம்ப்யூட்டர் கேட்டாலும், ஒரு ப்ரிண்டர், மென்பொருட்கள், உபகரணங்கள்- கிட்டத்தட்ட $ 3000 பெறுமான எல்லாமே- மூன்று மாதத்திற்கு இலவசமாகக் கொடுப்பதாக ஒரு பைத்தியக்கார ஸ்கீம்! பிடிக்கவில்லை என்றால் கஸ்டமர்கள் எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்து விடலாமாம்! மிகுந்த கட்டாயப்படுத்தி எங்களை இந்த ஸ்கீமை நடத்தவைத்தார்கள்.

மூன்று மாதம் கழிந்து அவனவனும் கேபிள், ரிப்பன் இல்லாத ப்ரிண்டர்கள், பேக்கிங் இல்லாத கம்ப்யூட்டர்கள், உடைந்த ஓட்டை உடைசல் டிஸ்க் டிரைவ்கள் என்று குப்பை குப்பையாய் திரும்பக் கொண்டுவந்தால் ‘எல்லாவற்றையும் கேள்வியே கேட்காமல் ரிடர்ன் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று எங்களுக்கு ஆப்பிளிடமிருந்து ஆட்டோவில் அன்புத் தாக்கீது! ஆனால், அத்தனை குப்பைகளையும் ஆப்பிளுக்குத் திருப்பி அனுப்பினால் எங்களுக்கு எல்லாவற்றுக்கும் முழு விலையில் சார்ஜ், ஃபைன்! என்ன அநியாயம்!

ஆப்பிள் முறைத்துக்கொள்ளாத டீலர்களே இல்லை. கம்பெனியை விட்டே ஜாப்சுக்கு கல்தா கொடுக்கப்பட்டு, பிறகு அவர் அடித்துப்பிடித்துத் திரும்பவும் அதே ஆப்பிளின் தலைவர் ஆனதெல்லாம் பெரும் பழங்கதை! கேவலம், ஒரு நூறு மில்லியன் கூடக் கையில் இல்லாமல் ஜென்ம எதிரி மைக்ரோசாஃப்டிடமே கையேந்திக் கடன் வாங்கும் நிலைமையில் கம்பெனி அப்போது கேட்பாரற்றுக் கிடந்தது.

ஸ்ட்ரெச்சரில் கிடந்த கம்பெனிக்கு ஐபாட் தான் அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுத்த முதல் தயாரிப்பு. ஆனானப்பட்ட ஐபிஎம், மைக்ரோசாஃப்டெல்லாம் ‘ஹா’வென்று வாய் பிளந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், ஐபாட் ஒன்றை வைத்தே கம்பெனியை ஸ்திரப்படுத்தியது ஜாப்சின் புத்திசாலித்தனம்! ஐபாட் ஆப்பிளில் மட்டுமே ஸ்திரமாக ஒழுங்காக வேலை செய்யும். மற்ற ஆபரேடிங் சிஸ்டம்சுடன் எப்போதுமே சண்டைதான். திடீர் திடீரென்று பாட்டுகள் காணாமல் போகும், அல்லது எல்லாவற்றையுமே அழித்துவிட்டு கல்லுளிமங்கனாய் ஐபாட் ஜடமாய உட்கார்ந்திருக்கும்!

அடுத்ததாக ஐஃபோன் மிகப்பெரிய வெற்றியாம். ஆனால் ஆப்பிள் தன் மூடிய கட்டமைப்பைக் கிஞ்சித்தும் மாற்றுவதாயில்லை. நானும் ஐபோன் வாங்குவதாய் இல்லை! இப்போது ஐஃபோன் 4 ஏகப்பட்ட பிரச்னைகள் என்கிறார்கள்.

HTC Evo 4G உபயோகிக்கிறேன். பிரமாதமான ஃபோன், காமெரா, ஸ்பீட், கூகுள், ஜிமெயில், ஆண்ட்ராய்ட் கனெக்டிவிடி எல்லாமே!

இலவசமாக ஸ்டீவ் ஜாப்சே கெஞ்சிக் கொஞ்சிக் கொடுத்தாலும் அந்த ஐயையோஃபோன் எனக்கு வேண்டவே வேண்டாம்!

9 comments:

ஆயில்யன் said...

//இப்போது ஐஃபோன் 4 ஏகப்பட்ட பிரச்னைகள் என்கிறார்கள்.//

ஆஹா ஐ-போன் சூழல் சரியில்லாம நீங்க வேற சூழலுக்கு மாறிட்டீங்களா? :)

//இலவசமாக ஸ்டீவ் ஜாப்சே கெஞ்சிக் கொஞ்சிக் கொடுத்தாலும் அந்த ஐயையோஃபோன் எனக்கு வேண்டவே வேண்டாம்!//

அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது கொடுக்கற பொருளை வேண்டாம்ன்னு சொன்னா ஸ்டீவ் மனசு என்னா பாடுபடும் வாங்கி வைச்சுக்கோங்க! :))

யாத்ரீகன் said...

இவ்வளவு பிரச்சனைகளா :-(( அப்போ எனக்கு ஓசில கெடச்ச printer ரெல்லாம் dealer தலையில அரச்சதுதானா ? :-( மாணவர்கள் மத்தியிலும், media துறையிலும் Macintosh பிரபலமோ பிரபலம்னு கூவுவாங்கலே.. நெசமில்லையா ? எந்த இங்க்ளிபிசு படமெடுத்தாலும் Apple தான் கணினி மாதிரி அதையே காமிப்பான்களே :-D

apple பற்றி இப்படி ஒரு perspective-இல் குற்றங்களை கேட்க புதுசா சுவாரசியமா இருக்கு

மணியன் said...

ஐஃபோன் 4 பிரச்சனைகள்..
பத்திரிகையாளர் மீட்டில் ஸ்டீவின் பேச்சைக் கேட்டீர்களா ? எல்லாம் பொறாமை பிடித்தவர்களின் கற்பனை ;) என்ன, போனை எப்படிப் பிடிப்பது என்று கூடத் தெரியாதவர்களின் மடு போன்ற குறைகளை மலை போல ஆக்குபவர்கள்.

Innovators என்ற பாராட்டுகள் அவர்களை தலைகால் புரியாமல் ஆட வைத்துவிட்டது என்று புரிகிறது.

RVS said...

எல்லே ராம் சார், ஆப்பிளை நறுக்கி காண்பித்ததற்கு நன்றி!!. :) ஐபாட் மாதிரி பாட்டுக் கேட்கற சமாசாரம் எல்லாம் 1500 ரூபாய்க்கு எம்.பி 3 மற்றும் வீடியோ பிளேயர்ன்னு போட்டு எல்லாரும் இப்ப கடை விரிச்சிட்டாங்க. ஆனா இந்த சாமான்களையும் ஐபாடையும் ஆப்பிள் டு ஆப்பிள் கம்பேர் பண்ண முடியாதுதான்.

பதிவு ரொம்ப இன்டெரெஸ்ட்டிங்கா இருந்தது.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Bruno said...

//ஐபாட் மாதிரி பாட்டுக் கேட்கற சமாசாரம் எல்லாம் 1500 ரூபாய்க்கு எம்.பி 3 மற்றும் வீடியோ பிளேயர்ன்னு போட்டு எல்லாரும் இப்ப கடை விரிச்சிட்டாங்க. //

அது சரி

நான் நோக்கியா மியூசிக் எக்ஸ்பிரஸ் 5130 வைத்திருக்கிறேன்

நான் ஏன் ஐபாட் வாங்க வேண்டும் :) :) :)

Anonymous said...

ரசித்தேன்!!:)

Anonymous said...

ரசித்தேன்னு கூகுள் சாட்சியில் அளித்தது சரியா போகலேன்னு அனானியாய் வந்த உருவம் நாந்தான் ராம் ஜீ:)
ஷைலஜா

Anonymous said...

கட்டுரை "சீ.. சீ.. இந்த பழம் புளிக்கும்.... " என்பது போல் உள்ளது. HTC , டிரய்டு, சாம்சங் etc எல்லாம் ஆப்பிள் ஐபோனை பார்த்து காபி அடித்தவர்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

AN APPLE A DAY..BUSINESS IS AWAY...


ஆர்.ஆர்.ஆர்.
http://betaofbusinessthoughts.blogspot.com/