நண்பர்களே,
ஆனந்த விகடன் 2007 தீபாவளி மலரில் என் 'பத்தாயிரப் பிரபந்தம்' வெளிவந்திருக்கிறது என்று விகடன் பிரசுரத்தார் சொல்கிறார்கள். நான் இன்னமும் அந்த இதழைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.
பார்த்துப் படித்து புண்ணியம் தேடிக்கொண்ட பரமாத்மாக்கள் கதை பற்றி நாலு வரி எழுதிப் போட்டால் மகிழ்ச்சி அடைவேன்.
என்றென்றும் அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Monday, November 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அடிச்சக்கை.
அதுலெ ஒரு ரெண்டாயிரம் எங்களுக்குக் கிடைக்குமா?:-)
ஹைய்யா வாங்க! வாங்க! (சீனியர் உங்கள, இப்ப முளைச்சவன் நான் வரவேற்கறது கொஞ்சம் ஒவர்தான் இருந்தாலும் நீங்க வந்து வாழ்த்துங்கள் வளர்கிறேன்)
பிறந்தகப் பெருமை - 7 என்னைக்கு ரீலீஸ்?
ரொம்ப நாளைக்கு காக்க வைச்சுடாதீங்க!!!!!
துளசியம்மாவுக்கு வெறும் ரெண்டாயிரமா? மொத்தப் பத்தாயிர்முமே உங்களுக்குத்தான் சமர்ப்பணம்!
அன்புடன்,
எல்லே ராம்
ஆயில்யன்,
அட! பெயர் சூப்பரா இருக்கே?!
இது வரை 'பிறந்தகப் பெருமை' எவ்வளவு எழுதி இருக்கேன்ங்கறது எனக்கே மறந்து போச்சு.
நினைவு படுத்தியமைக்கு நன்றி.
கூடிய சீக்கிரம் மறுபடி ஆரம்பிச்சுடுவம்!
அன்புடன்,
எல்லே ராம்
படித்தேன். மிகவும் நன்றாக உள்ளது. நான் ரசித்த வரிகள்:
"என் சகதர்மிணி சாரைப்பாம்பு மாதிரி சைடாக வந்து என் தினசரியைத் திடீரென்று பிடுங்கினாள்"
"நான் இன்னமும் வளர்கிறேனே மம்மி என்பது போல ஆங்காங்கே இன்னமும் அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள்".
"பக்கத்து பெட்ரூமிலிருந்து மெல்லிதான சிரிப்பு கலந்த குறட்டைச் சத்தம் உங்கள் காதிலும் விழுகிறதா"?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள ராகவன்,
மிக்க நன்றி.
எல்லே ராம்
Post a Comment