என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, November 16, 2007

மறுபடியும் 'தமிழ்ச் சேவை'!

பல மாதங்களாக நான் இங்கே என் 'ப்ளாக்'கில் எதுவும் எழுதாத காரணத்தால் 'தமிழ்மணம்' வலைத்தளத்திற்கான என் செய்தியோடை (அதாங்க, RSS!) வற்றிப் போய் விட்டது போலும்.

"அடாடா! மறுபடியும் இதைப் புதுப்பிக்க என்ன வழி?"-என்று தமிழ்மண நிறுவன நண்பர் காசியிடம் கேட்டேன்.

"நான் கணினிப் பக்கமே இப்பல்லாம் தலை வைத்துப் படுப்பதில்லையே, எல்லே! அதுவும், தமிழ்மணமா?! ஹும்ம்ம்... ஆனாலும் ..." என்று அவர் சொன்ன உபாயத்தைக் கடைப்பிடித்து முயற்சிகள் சில செய்து வருகிறேன்.

காசிலிங்கம் இப்போது கோயம்புத்தூரில் ஒரு 'சேவை' செய்து வருகிறார். மிகவும் உருப்படியான சேவை. இது பற்றி இன்னும் சில நாட்களில் இங்கே தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.

இப்பொதைக்கு இது ஒரு சின்ன 'டேஸ்ட்'டுக்குத்தான்!

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

7 comments:

dondu(#11168674346665545885) said...

மீண்டும் வருக எல்லே இளங்கிளியே. ரொம்பவும் உறங்குதியோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வணக்கம் டோண்டு ராகவன்! வரவேற்புக்கு நன்றி.

கொஞ்சம் 'ப்ளாக்'கையெல்லாம் விட்டு விலகி, மற்ற ஆக்கபூர்வமான வேலைகளைப் பார்க்கலாம் என்று சிறிது காலம் ஒதுங்கி இருந்தது உண்மை தான்.

ஆனாலும் இவ்வளவு 'கேப்' கொடுத்திருக்கக்கூடாது தான்.

இனிமேல் இப்படி ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன்.

'நெட்'டினால் நான் பெற்றிருக்கும் பல இனிய நண்பர்களுக்கு நான் செய்யவேண்டிய கட்டாயக் கடமை இது!

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு: ஆ.வி.தீ. மலரில் என் 'பத்தாயிரப் பிரபந்தம்' படித்தீர்களா?

துளசி கோபால் said...

வாங்க. வாங்க, வாங்க.

இன்னும் உறங்குதியோன்னு கேட்கவா?

ஓடை என்றும் வற்றுவதில்லை:-))))

லக்கிலுக் said...

வணக்கம். நீங்களெல்லாம் கும்மியடித்த காலத்தில் நான் வலைப்பூக்களை வாசித்துக் கொண்டு மட்டுமே இருந்தேன். மீண்டும் தாங்கள் எழுத வந்தது குறித்து மகிழ்ச்சி!!!

நல்வரவு!!!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள துளசி,

ஆஸ்திரேலியா அடிவார அடிலேய்ட், ஏன், டாஸ்மேனியா வரைக்கும் கூட வந்துட்டு உங்க ஊர்ப் பக்கம் எட்டிப் பார்க்க முடியலை. ஹூம்ம். இந்தத் தடவை நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான்!

சும்மா சொல்லக்கூடாது. அட்டகாசமான ஊர்கள், ஆசையாப் பழகு்கிற மக்கள்- ரொம்ப ஜாலியா இருந்த மூன்று வார வெக்கேஷன் ஓடியே போச்!

அதுக்குன்னு இங்க வந்தா 'எல்லே'ப பக்கம் எட்டிப் பார்க்காம போயிடாதீங்க!

-'எல்லே' ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
This comment has been removed by the author.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள லக்கிலுக்,

"நீங்களெல்லாம் கும்மியடித்த காலத்தில் ..." என்று எழுதி அந்தப் பண்டைக்காலத்தை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி. அந்த வார்த்தைப் பிரயோகத்தை ரசித்தேன்.

ஹூம்ம். அது ஒரு பால் நிலாக் காலம். தமிழோவியம், ராயர் காப்பி கிளப், மரத்தடி, யாஹூ குழுமங்கள், தமிழ்நெட் என்று பல இடங்களிலும் பாய்ந்து பாய்ந்து எழுதிய காலம். அடிதடி, கரைச்சல், இரைச்சல், குலாவல்கள் என்று ராகளையாகப் போய்க்கொண்டிருந்த ரசனையான காலம். 'மஞ்சள் யானைகள்', 'மூங்கில் காடு' என்று நானும் சாரையாய்ச் சீறிக் கொண்டிருந்தேன்.

கோடம்பாக்கத்தில் சொல்வது மாதிரி 'மீண்டும் ஒரு ரவுண்டு' வரத்தான் வேண்டும் ;-)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்