என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, August 16, 2005

இராம காதை தொடர்கிறது!

இராம காதையில் ஏன் இப்படி ஒரு திடீர்ச் சுணங்கல்? எனி மாரீசன் பிசினஸ் ஹாப்பெனிங்?

எந்த விதமான இலக்கியப் பாவ்லாவையுமே சமீபத்தில் காணோமே? அப்பாடா. ஆனாலும் ...

இந்த எல்லே ஆள் இருக்கிறாரா? அல்லது அலாஸ்காவிலேயே 'ஜில்'லென்று செட்டிலாகி விட்டாரா என்று யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

என்னைப் பற்றிய 'காணவில்லை' விளம்பரச் சுவரொட்டிகள் எதையும் யாருமே எங்குமே கண்டதாகவும் செய்தி இல்லை.

'அண்ணன் தொடர்ந்து 'பிறந்தகப் பெருமை' பேசாவிட்டால் பட்டப் பகலில் பட்டமங்கலத்தெரு மணிக் கூண்டின் அடியிலெயே விசிறிப் படையோடு யானும் தீக்குளிப்பேன்' என்று மாயவரத்து மக்கள் யாரும் சூளுரைத்த சப்தம் என் காதுக்குக் கேட்கவில்லை.

இருந்தாலும், உண்மை நிலை விளம்புவது என் கடமையாகிறது.

'தமிழ் மண'த்தின் முதன் முதல் இருவார நட்சத்திரமாக மினுக்கோ மினுக்கென்று மினுக்கியதில் ஏற்பட்ட கழுத்துச் சுளுக்கு, தொடர் இலக்கியத் தொண்டினால் ஏற்பட்ட விரற் களைப்பு, வீடு மாற்றல் வைபவத்தில் ஏற்பட்ட ஜெனரல் சிராய்ப்புகள், முழங்கால் முட்டி சேதாரங்கள், இன்ன பிற அலுப்புகளைக் களைய அலாஸ்கா வரை சென்று குளிர் பனிக் கட்டிகளின் மீதமர்ந்து தியானம் செய்து முடித்து விட்டுத் தற்சமயம் எல்லே திரும்பியிருக்கிறேன்.

எல்லேயிலிருந்து சியட்டில் வழியே ஆன்கரேஜ் வரை விமானப் பயணம், அங்கிருந்து அலாஸ்காவின் உட்பகுதிகளுக்குப் பனிப் பாறைகள் தேடிக் 'க்ரூயிஸ்' என்கிற நீண்ட நெடும் கடற் பயணம், வான்கூவர் நகரில் சற்றே ஓய்வான ஊர் சுற்றல், மீண்டும் எல்லே திரும்புதல் ஆகிய பரவலான நிகழ்ச்சி நிரல்களுக்கிடையேயும் நான் என் அன்புசால் வாசக அன்பர்களை மறந்தேனில்லை.

வெகேஷனில் இருந்து திரும்பிய களைப்பு, புது வீடு, சாமான், சச்சா, கண்டாமுண்டான்ஸ் பேக்கிங்ஸ், அன்பேக்கிங்ஸ், அரேஞ்சிங்ஸ், ரீஅரேஞ்சிங்க்ஸ், காலில் போட்டுக்கொண்டு பேண்ட் எய்டிங்க்ஸ், சிராய்ச்சிங்க்ஸ், புது நெட் கனெக்ஷன் (நாளை தான் வருகிறது), நோ தொலைபேசி (மொபைல்கள் இருப்பதால் கதை கந்தலாகவில்லை), நோ தொலைக்காட்சி தொடர்புகள் (அப்பாடா!) ...இப்படியாகத்தானே ராம காதை தற்சமயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விரைவில் சந்திப்போம்!

7 comments:

துளசி கோபால் said...

நல் வரவு!!!!!

எங்கே, ஆரம்பியுங்கள் சீக்கிரமாய்!

என்றும் அன்புடன்,
துளசி.

சீமாச்சு.. said...

அண்ணே, ராமண்ணே..
//புது நெட் கனெக்ஷன் (நாளை தான் வருகிறது), நோ தொலைபேசி...
//அலாஸ்காவிலேயே 'ஜில்'லென்று செட்டிலாகி விட்டாரா
இந்த ஃபோன் இதெல்லாம் இல்லாததனால்தான் நான்,
"பிறந்தகப்பெருமை எழுதாவிடில் தீக்குளிப்பேன்"-னு போட்ட சபதம் உங்களை
இன்று வரையில் சென்று சேர்ந்த்தாகத் தெரியவில்லை... நல்ல வேளை கோயிந்து சொன்னான்..
"தீயெல்லாம் குளிக்காதீங்கண்ணே... எப்படியும் நல்லத்துக்குடி/எல்லே ராமண்ணன் நம்ம ஊரைப்
பத்தி எழுதுவாரு" அப்படின்னு என்னை மண்ணெண்னை வாசனையோட (பெட்ரோல் விக்கிற விலையில..
பெட்ரோல்ல தீக்களிக்கிறது நமக்குக் கட்டுப்படியாகாது சாமி..) நியூ ஜெர்சிக்குப் பேக் பண்ணி அனுப்பிச்சான்...

சொல்ல மறந்துட்டேனே.. இந்த மாதம் 6-ந் தேதி, மயூரா லாட்ஜில் காபி குடித்தேன்.. நீங்கள் சொன்ன மாதிரியே..
"அண்ணாவுக்கு ஸ்ட்ராங்கா ஒரு டிகிரி காப்பி" ன்னு, வேட்டியை மடித்துக்கட்டி..காதில் அழுக்கு பென்சிலுடன் சர்வர்
கத்தினார்... உங்கள் (நமது) பிறந்தகப் பெருமை தான் நினைவுக்கு வந்தது..
இவர்கள் மாறமாட்டார்கள்.. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும்..

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

வானம்பாடி said...

மற்ற 'ங்க்ஸ்' எல்லாம் முடிந்தவுடனே 'ரைட்டிங்க்ஸை' தொடங்கி விடுங்கள்! வெல்கம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

துளசியக்கோவ்!

நெட் கனிக்சன் வந்திரிச்சி. இன்மேல்பட்டு வூடு கட்டி ரவுண்டு அடிச்சி அடாசு தேங்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சீமாச்சு,

மயூரா லாட்ஜெல்லாம் மாறவே கூடாதுங்கண்ணா. மாறிப்போனா அல்லாம் மக்டொனால்ட்ஸ் மாதிரி ஒரே மாதிரி போர் அடிச்சித் தள்ளிரும். நம்மால தாங்க முடியாது.

என்ன நாஞ் சொல்றது?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சுதர்சன் சார்,

அல்லாம் ஒண்ணொண்ணா முடிஞ்சிக்கிட்டே வரிங்க்ஸ். இப்பத்தான் நேர்லயே வந்து வூட்ல நெட்டு கனிக்சன் கொடுத்துட்டான் ஒரு கருப்பண்ணசாமி. டவுன்லோடு இஸ்பீடு 4 மெகாபைட்டுக்கும் மேல, அப்லோடு ஒரு 384 கேபி.

இன்னாங்க அங்க எதோ பொசுங்கற நாத்தம்? 'கப கப'ன்னு பொகை வேற வருது;-)

Anonymous said...

'அண்ணன் தொடர்ந்து 'பிறந்தகப் பெருமை' பேசாவிட்டால் பட்டப் பகலில் பட்டமங்கலத்தெரு மணிக் கூண்டின் அடியிலெயே விசிறிப் படையோடு யானும் தீக்குளிப்பேன்'BY Tholkappian of Mayiladuthurai (presently in Dubai)