என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, April 22, 2005

நானும் பில் கேட்சும்!

என் பணக்கார நண்பர்களைப் பற்றி நான் இங்கெல்லாம் அவ்வளவாகச் சொல்லி அலட்டிக் கொள்வதில்லை. என் அடக்க சுபாவம் வேறு உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

அதிலும் உலகப் பெரும் கோடீஸ்வரரைப் பற்றி நான் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது?



'என்ன ஃப்ரெண்டு நீங்க, எப்படியாவது எனக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்க. ப்ளீஸ், ராம்' என்று அவர் என்னைப் படுத்தும்போதெல்லாம் இத்தனை காலம் மறுத்து வந்தேன். பல மாதங்கள் அவரும் முணுமுணுத்தார். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். தொடர்ந்து தொணதொணத்தார். நான் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம் போல் என் பாணியில் -சின்ன அளவில், 'தமிழ்க் குடிதாங்கி' அளவுக்கெல்லாம் அல்ல- தமிழ்த் தொண்டாற்றி வந்தேன்.

சியட்டிலில் பில் கேட்ஸ் தரையில் புரண்டு அழுதார். அடம் பிடித்தார். உண்ணாவிரதம் இருந்தார். அலகு குத்திக் கொண்டார். மண் சோறு சாப்பிட்டார். ஊஹும், நான் இது வரை மசியவே இல்லை. கூப்பிட்டபோதெல்லாம் 'தமிழ் இணையத்தில் பிசியாக இருக்கிறேன். கால்ஷீட்டே கிடையாது' என்று சொல்லி விட்டேன்.

'சரி, அட்லீஸ்ட் என் சின்னக் கம்பெனிக்காவது ஒரு சின்ன மாடல் பண்ணுங்க. அதுவும் இல்லாட்டி நான் என் பணத்தையெல்லாம் கொண்டு போய் அந்தமான், நிகோபாரில்...' என்று அவர் ஒரு நாள் பயமுறுத்திப் பயங்காட்டி அழுது தொழுது நின்றதால், நானும், வேறு வழியில்லாமல், ஒரு சின்ன 'சரி' சொல்லும்படி ஆயிற்று.

எத்தனை காலம்தான் நானும் அவருக்குத் தொடர்ந்து சால்ஜாப்பு சொல்லுவது? மனம் இரங்கினேன்.

அதன் விளைவுதான்: http://lab.msdn.microsoft.com/express/sql/default.aspx

வருங் காலத்தில் அவருடைய நச்சரிப்புக்காக, ஒரு பயாஸ்கோப்பு படத்துக்கு நான் ஓக்கே சொல்லும்படியாகவும் ஆகி விடலாம். ஆனாலும் கூட, நம்ம ஸ்நேகா கால்ஷீட்டுதாங்க இன்னும் கிடைக்கலை.

-என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

8 comments:

Mookku Sundar said...

இந்த வயசான காலத்துல நீங்க மைக்ரோசாஃப்டுக்கு மாடலாயிட்டீங்களா..??

வாவ்..ரே ..வாவ்

era.murukan said...

Dear Ram,

Congrats!

Sundar, yaarukku vayasana kaalam?Microsoft-kka?

Alex Pandian said...

when I rightclick and do save picture as, name comes as SQL Hero ! eppavum second-hero vaa thaana varuveenga ? :-)

- Alex

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

நன்றி, முருகன். கரெக்டாப் புடிச்சீங்க. எப்படியாச்சும் பு. பு. அரசியோட நான் நடிக்காம இருக்கணும்னு மூக்க்ர் வழக்கம் போலச் குசும்பு பண்றாரு!

அலெக்ஸ், SQL Hero-ங்கறத வெச்சு வார்த்தை வெளையாட்டா? பலே பாண்டியா! எப்படியோ ஹீரோ ஜீரோவாகாம இருந்தாச் சரி.

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Anonymous said...

(Maddy Ram?) மல்லே ராம் அவர்களே,

இத்தனை நாட்களாக MSDE மட்டுமே பயன்படுத்தி வந்தேன். Express Edition 72 MB இருக்கும் போலருக்கே. ஏதோ உங்க படம் எல்லாம் போட்டு இருக்கே, தரமான மென்பொருளா இருக்கும்னு நெனச்சேன், ஆனா 72 எம்.பி. (MB சொன்னேன், MP இல்லை) எல்லாம் இந்தியால டிஅல்-அப்-ல டௌன்லோட் பண்றது ரொம்ப கஷ்டம்.

விரைவில் SAPIஇல் தமிழ் வந்தால் உங்கள் குரலை மாடலாகக் கொடுத்து என்னைப் பரவசப்படுத்தவும். :-))

Anonymous said...

http://thatstamil.indiainfo.com/specials/cinema/interview/meena1.html :-)

Ungal Nanban !

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க க்ருபா வாங்க்!

இந்தியா முழுக்கவே ஃபைபர் ஓட ஆரம்பிச்சிருக்கு. இந்த 72 MB ஜுஜுபி இல்லையோ? 72 MP என் கையில இருந்தாக்க் நான் இந்நேரம் தயாநிதி சீட்ல இல்ல இருப்பேன்?! நமக்கு எதுக்குங்க பகற்கனவு?

லாஸ் எஞ்சல்ஸ் ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அய்யா அநாநிமஸ்ஸு!

மீனாட்சி எங்கிருந்தாலும் வாழ்க!

எல்லே ராம்