மந்தவெளி எட்டாம் நம்பர் கடை (மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் ஒயின்ஸ்) வாசலை ஒட்டிய மண் மேட்டில் சிஷ்யகேடிகளான பீட்டர், மன்னார், முனுசாமி, தமிழ்ப்புலவர் ஆதிமந்தி சகிதம் மெய்லாப்பூர் கபாலி கொலு வீற்றிருந்தான். மன்னிக்கவும். வீற்றிருக்கவில்லை.
குந்தி உட்கார்ந்தபடியே கூர் மழுங்கிய புழுக்கைப் பென்சிலால் போஸ்ட் கார்டு ஒன்றில் ஏதோ அவசரமாக எழுதிக் கொண்டிருந்தான்.
அரைத் தூக்கத்தில் பொறைக் கனவு கண்டிருந்த சொறி நாய், மணி 'விலுக்'கென்று எழுந்து நின்றது. பாதி மடங்கிய இடது காதுடன் உத்தேசமான கிழக்கு நோக்கி சந்தேகாஸ்பதமாகக் குறைக்க ஆரம்பித்தது.
"முன்சாமி அண்ணாத்த, ஆரு வர்ரதுனு பாரு. தெர்தா, பாகவதரு" என்றான் பீட்டர்.
'சுள்'ளென்னு கிளம்பிக் கொண்டிருந்த சூரியனை அழுக்குப் பீச்சாங்கையால் மறைத்தபடி பீட்டர் காட்டிய திக்கில் பார்த்தான் முனுசாமி.
பாத்ரூம் பாகவதர் தான் வந்து கொண்டிருந்தார். பாரித்த சரீரத்தைச் சுமந்தபடி அறுபத்து மூவர் மாதிரிக் கொஞ்சம் ஆடி ஆடித் தான் ஒயின் ஷாப்பை நோக்கி அவர் முன்னேறிக் கொண்டிருந்தார். வழக்கமாக அவர் ஆரோகணித்து வரும் ரிக்ஷ¡வைக் காணோம். இன்று நடராஜா சர்வீஸ் தான் போலிருக்கிறது.
"கச்சேரியெல்லாம் முடிஞ்சிச்சில்ல, காஜியெல்லாம் ஓஞ்சி போயி காலி பாட்டில்காரன் கிட்ட நேத்து சில்லுண்டி யாவாரம் பண்ணிக்கிட்டு, சில்லறைக்கு மாரடிச்சிட்டிருந்தாரு. எதுனா கை மாத்து கேக்க வாராருன்னு நெனிக்குறன்"
அருகில் நெருங்கி விட்ட பாகவதரிடம் திடீர் மரியாதை பீறிட, எழுந்த நின்றவர்களின் மடித்த கைலிகள் உதறி விடப்பட்டன.
"சலாம் சார். மோரு, ஜோடா எதுனா சாப்ட்றியா?"
"இல்லப்பா. இப்ப வேணாம். என்ன கபாலி, யார் கேட்டாலும் தான் அம்மா இப்பல்லாம் அள்ளிக் கொடுக்கறாளேன்னு நீயும் கோட்¨டக்கு ஒரு பெட்டிஷன் எழுதறியா?"
கபாலி பாத்ரூமை இப்போது தான் கவனித்தான். "வா சார் வா. நல்ல நேரத்துல தான் வந்துக்கிற. நம்ம எல்லே சாருக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதிட்டிருந்தன். படிக்குறன், கேக்குறியா?"
"எல்லேயா? அந்தாளு இப்பல்லாம் எழுதறாரா என்ன? ஏதோ படம் எடுக்கறேன்னு யார் பின்னாடியோ சுத்தறதாத்தானே நான் கேள்விப்பட்டேன்"
"சேச்சே. அப்பப்ப கொஞ்சம் பெனாயில் போட்டுக்குனு அது பெனாத்தினாலும், ஆளு தங்கம் சார். அதான் அன்பா நாலு தட்டு தட்டிக்குறன். தோ, படிக்குறம் பாரு"
கபாலி தொண்டையைச் செருமிக் கொண்டான்.
'யோவ் பிசாத்து எல்லே, எயுதினா ஆன லத்தி கணூக்கா மூட்ட மூட்டயா எய்திக்குனே கீற, அல்லாட்டிக் கவுந்தடிச்சிக் கொறட்டை வுட்டு மாசக் கணுக்குல தூங்கிக்கினே கீற, மவனே, உனுக்கு மன்சுல இன்னாதான் நெனிப்பு? இந்த அக்குருமத்தக் கேக்குறதுக்கு ஆருமே ஆளில்லேன்னு நென்சுக்கினியா? அம்மா கிட்ட இத்தப் போட்டுக் குடுத்தன்னா குண்டன்ஸ் ஆக்டுல வேலூர் கொசுக்கடி படுவ. அந்த சரசுவதியே வீணயக் கீழ எறக்கிட்டு வந்து நறுக்குன்னு ஒந் தலையில ஒண்ணு வெச்சாத்தான் எயுந்திருப்பியா?
'எய்ந்திரி ராசா', 'அட எந்திரி சார்', 'எல்லே இளங்கிளியே ப்ளீஸ் கெட்டப்பு'ன்னு மணியாட்டிப் பாத்துப் பாத்து ஜனமே அலுத்துப் பே¡ச்சு. சுறுசுறுப்பா எதுனாச்சியும் பயாஸ்கோப்பு காட்டத் தாவலை?
பாசமா எதுனாக் கேட்டாக்க 'ஜெயேந்திரர் மேட்டர், சுனாமி, சுனேகா கொயந்தைக்கு ஜலதோசம்'னு பீலா வுடுவ. அதெல்லாம் தப்பு ராசா. எய்துறவன் எய்திக்கிட்டே இர்க்கோணும், படிக்குறவன் படிச்சிக்கினே இர்க்கோணும்னு உனுக்குத் தெர்யாது?
இந்த 'ப்ளாக்சு'க்குனு ஒரு எலிக்கணம் இர்க்குது தெர்தா, தலிவா? சும்மா மொசமொசன்னு தெவச மந்திரமாட்டம் தெனிக்கும் எய்திக்குனே கெடக்கத் தாவலை. மூக்கரு மேறிக்கு அப்பப்ப ஒரு நாலு லைன் -சாட்டிங்க்ஸ்ல குட்டிங்களோட சதாய்க்குறியே அத்§தமேறித்தான்பா - எய்திப் போட்டாத்தான் உனுக்கும் மருவாதி, படிக்கறவனுக்கும் மருவாதி. ரசிகங்க பட்டாஸ¤ கொள்த்துவாங்கோ.
ரஜிகன், சொல்றத சொல்லிட்டன். அக்காங். மருவாதிய எதுனா எய்திப் போடு. அல்லாட்டி ரசிகங்க கொதிச்சி எய்ந்திருவம். பேஜார¡ய்டும்.
இப்டிக்கி,
கலக்கல் கபாலி,
தலிவர், எட்டாம் நிம்பர் கடை வசக வாட்டம்"
******** ********* *********
"இன்னா சார், நானு எய்திக்குறது சரியா?"
"பிரமாதம்டா கபாலி. நான் மனசுல நெனச்சேன். மரத்தடியிலேருந்து எழுதிப்டாய்"
"மரத்தடியிலேருந்து இல்ல சார். மண் மோட்ல இருந்து. மரத்தடி தான் மதியக்கா போனதுலேர்ந்து களையே இல்லாமக் கெடக்குதே. ஹ¤ம்ம்ம்."
"இன்னாது இது, புதுக் கரடி வுடற, அந்தம்மா அங்கன இல்லியா இப்ப? ரிஜைனா?" என்றான் பீட்டர், பதறிப் போய்.
புலவர் ஆதிமந்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ஓய்வில்லை ..."
"பொலவரே, காலிலயே ஆரம்பிச்சிட்டியா, ஆ·ப் பண்ணுய்யா. மணி பயப்படுதில்ல?"
"நல்லவாளுக்கெல்லாம் காலம் இல்லைப்பா இப்ப. ஒண்ட வந்த பிடாரன்ஸ் ஊர்ப் பிடாரியத் தொறத்தறதெல்லாம் சகஜமான்னா போச்சு. ராகாகியில நடக்காத கூத்தா? 'சந்திரன்' இல்லைன்னா மானத்துக்குத்தான் அவமானம். மதியில்லைன்னா மரத்தடிக்குத்தான்
நஷ்டம். டென்ஷன் இல்லாம கொழந்தை இப்ப நிம்மதியா இருக்கும். அதை விடு. நான் வேற ஒரு காரியமா ஒங்கிட்ட வந்தேன்"
"இன்னா பண்ணணும் ஸொல்லு சார். அப்டியே குந்து. டேய் நாயர் கிட்ட ரெண்டு பெசல் டீ ஸொல்றா. பாகவதர் சாருக்கு சக்கரை §பாடாத. இன்னா சார் பண்ணலாம், அய்டியாவ அவுத்து வுடு"
********* ******** *********
பஞ்சகச்சத்தை நாசூக்காகத் தூக்கியபடி பாத்ரூம் பாகவதர் மண் மேட்டில் சம்மணமிட்டு அமர்ந்தார்.
ஒரு கணம் தன் நண்பர் குழாத்தைக் கண்ணால் அளந்தார். அன்பும் வாத்ஸல்யமும் மேலிட, தழதழத்த குரலில், "அம்பிகளா, நமக்¦கல்லாம் நல்ல நேரம் பொறந்துடுத்துடா. நாம படம் எடுக்கப் போறம்" என்றார்.
"இன்னா சார் ஸொன்ன, நாமள்லாம் சேர்ந்து படம் எடுக்கப் போறமா?" -ஒரே கோரஸாக அத்தனை பேரும் கேட்டார்கள். நாயர் மட்டும் "ஞானும் உண்டில்லா?" என்றார். மணி " லொள், லொள், லோள்" என்றது.
"ஆமாம்பா. விஜய் கால்ஷீட் கெடச்சுடுத்து. படத்துக்கு டைட்டில் கூட ரெடி பண்ணிட்டேன்."
"விஜய் கால்ஷீட்டா? ஆஹா, நாம அத்தினி பேரும் இனிமே கோடீஸ்வரனுங்க தான். படத்துக்கு இன்னா சார் டைட்டில்?"
"கலக்கலான படம். இதுவரை இது மாதிரி ரோல்லே விஜய் பண்ணினதே இல்லை. காதல், வீரம், காமெடி, பாசம் எல்லாமே கலந்த புத்தம் புதுக் கதை"
"அய்யோ, அய்யோ. எனுக்கு இப்பயே தாங்கலை சார். படத்துக்கு இன்னா டைட்டில், சீக்ரம் ஸொல்லு சார்"
"அக்கா ரேப்பு, தங்கச்சி நொண்டி, தாடித் தம்பியத் திருத்தறது, தாலி செண்டிமெண்ட், தோப்பனார் பாசம், தொப்புள் டான்ஸ் எல்லாமே உண்டு. இந்த ஊர்க் குட்டிகளே வேண்டாம்னு ஹாலிவுட்லேருந்து ஒரே ஒரு டான்சுக்கு ஜெனி·பர் லோபஸ் கொழந்தை வராள்"
நாயர் கடையில் தேநீர் அருந்தியிருந்த அன்பர்கள் முதல் லேடி மெய்யப்ப செட்டியார் கேர்ள்ஸ் ஸ்கூல் வாசலில் சாக்கடை நோண்டியிருந்த துன்பர்கள் வரை மைலாப்பூர், மந்தைவெளிப் பிராந்தியமே மூச்சு விட மறந்து, ஓடோடி வந்து, பாகவதர் வாயையே பார்த்து நின்றது.
சுனாமி பற்றியே எழுதிக் களைத்திருந்த நிருபர்கள் சுருட்டியடித்தோடி வந்து பாகவதர் முன் நின்றனர்.
"சார், உங்க படத்துக்கு டைட்டில் ப்ளீஸ்"
தான் எதிர்பார்த்த எ·பெக்ட் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் பாத்ரூம் பாகவதர் ஒரு புன்னகை சிந்தினார். பொடி மட்டையை எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினார்.
யார் யாரோ அவரை போட்டோ எடுத்தார்கள்.
"திருமதிப்பாச்சி" என்றார் பாத்ரூம் பாகவதர்.
(எடுப்போம்)
Thursday, February 03, 2005
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
நல்ல நக்கல். எல்லா இடத்தையும் தொட்டு கடசியிலே பிலிம் காட்டறதுல வந்து நிறுத்தினிங்க பாரும்க்க....
அங்கதான் இருக்கு உங்க கலைத்தாகம்...
ம்ம்...நடக்கட்டும்..நடக்கட்டும்
அன்புள்ள எல்லேராம்,
வாங்க வாங்க! எங்கே ரொம்ப நாளா ஆளயே காணொமேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
என்றும் அன்புடன்,
துளசி.
மீண்டும் வருக எல்லே இளங்கிளியே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கீசிட்டபா. வெய்ட் கையா இருந்துகினு ஏம்பா இத்தினி நாளா எய்தாம இர்ந்த...
இன்னா மூக்கரே, கலைத் தாகமா?! வாங்கடி, காவேரிக்காரன் கிட்டயே தண்ணி காட்றதா! ஆஹா, அருமைங்கண்ணா, அருமை. எத்தினி பேருக்கு இதெல்லாம் புரியப் போவுதுன்றீயளா, அதுவுஞ் சரிதான்.
வாங்க, துளசியம்மா. 'தளம்'னு ஒண்ணு போட்டியளே, ஜென்மத்துக்கும் மறக்காத அருமையான பிரயோகம். இனிமேல் பட்டு ஒயுங்கா மொறயா எய்துறம்மா. எல்லாம் அந்த மூர்த்தி தான் காரணம்;-)
யோவ் மூர்த்தி, ஏங்கண்ணு இப்டிக் கொளுத்திப் போடற! நானு கொயந்தபா. எனுக்கு எங்க இதெல்லாம் தெரியிது? இதான வோணாங்கறது. மரத்தடியிலயும் பால்டிக்சுன்னு இன்னிக்குத்தான்பா எனுக்குப் பிரியுது. இர்ந்தாலும் அந்தம்மாவ அவிங்க இந்தப் பாடு படுத்திட்டாங்களாமே, மெய்யாலுமா?!
டோண்டு ராகவன் சார், இனிமேல் பட்டு டோண்டு வொர்ரி. இன்னாமா கீசறம் பாரு. என்னிய அப்பப்ப உசுப்பி வுடறதுக்கு டாங்க்சு சார்.
சுதர்சன் மச்சி, இதெல்லாம் ஒரு வெயிட்டா? தம் புட்சி இன்னமும் எம்மாம் தூக்கறம் பாருமா கண்ணு. அதுக்குள்ளாறயே அல்லா ஏரியாவிக்கும் ஆளுங்க அலை மோதுறாங்கபா.
'திருமதிப்பாச்சி'ய இன்னா 'ஜக்குபாயி'ன்னு நென்சிட்டாங்களா, பாதியில வுட்டு வோடறதுக்கு?!
சர்தாம்பா! கலாசு.
எல்லே சாஆர்,
பழைய தோஸ்த்து நாந்தான் திர்லக்கண்ணி பாய். கானால்லாம் பட்சமே கியாபகம் கீதா சார்.
சுனேகா கொயந்திக்கு ஜலதோஷமா. ஆஹ்ஹா அமிர்தாஞ்சனம் கம்பெனிய எய்தி வெக்கலாம்னா அதுல வேற எதுவோ மேட்டர் இருக்கே.
வருக இனிய ராம்.
அன்புடன்
ஆசாத்
ப்ளாக் வைத்திருப்பவர்கள் பலருக்கும் இப்படி ஒரு அவஸ்தை எப்போதாவது ஏற்படுமென்றே நினைக்கிறேன்.
அழகாக வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு வைத்தால் வழிப்போக்கர்களும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் பார்த்து மகிழ்வார்கள். ஆனால் சில சமயங்களில் ஏதாவது ஒரு அநாமதேயத் தெருப் பொறுக்கி நாய் அங்கே வந்து கோலத்தின் நடுவே அசிங்கம் பண்ணி விட்டும் போகும். அப்படி ஒரு நாய் மேலே அசிங்கம் பண்ணியிருந்ததைத்தான் அழித்திருக்கிறேன்.
மற்றபடி நம் கோலங்கள் தொடரும்.
வாய்யா திர்லக்கேணி ஜேம்சு!
'திருமதிப்பாச்சி'க்கு அவனவன் ஏரியாவுக்கு அலை மோதுறான், 'அய்ய ஒரு பிட்டு ரோலாச்சியும் குடு சாரே, அந்த ஜெனிஃபர் கொயந்த பக்கத்துல ஸொம்னாச்சிக்கும் நின்னுட்டாவது போறேன்'னு கெஞ்சுறான். தலைப்பைப்பத்தி தமிழ்நாட்டுல பட்டிமன்றமே நடக்குது, அல்லாத்தயும் வுட்டுட்டு நம்ம ஆஸ்தான கொயந்தைக்கு அம்ருதாஞ்சன் தேய்க்க வந்துட்டாருய்யா ஆசாத்து பாயி. நாங்கள்லாம் இன்னா பூப் பறிச்சுக்கினா நிக்கிறோம்?!
வாங்க பாய், நீங்க வந்து நின்னாலே ஒரு தனிக் களை தான்!
நாம ஸேர்ந்து ஒரு ஜுகல்பந்தி கானா போடற நேரம் நெருங்கிட்டுது!
அட்டகாசமா இருக்கு!எல்லே
ஆமா 'திருமதிப்பாச்சி' எப்போ வெளியீடு?
தீபாவளிக்கா?இல்லே புதுவருஷத்திற்கேவா!
பாகவதரைக் கேட்டு சொல்லுங்கப்பா
ஒரே பரபரப்பா இருக்கு
வாங்க, கபாலி இல்லாம கச்சேரியே களை கட்டலை. இனிமே ஜாலிதான்.
ஆனா, இந்த பால்டிக்செல்லாம் பொடி வெச்சுப் பேசினா புரியாதுங்க. :(
மீனாம்மா, காசி சார்,
வாங்க வாங்க. 'அந்நியனா?', 'சந்திரமுகி'யா, 'மும்பை எக்ஸ்பிரஸா' இல்லை, 'திருமதிப்பாச்சி'யா?
பாத்துருவம் ஒரு கை!
மீனாம்மா, காசி சார்,
வாங்க வாங்க. 'அந்நியனா?', 'சந்திரமுகி'யா, 'மும்பை எக்ஸ்பிரஸா' இல்லை, 'திருமதிப்பாச்சி'யா?
பாத்துருவம் ஒரு கை!
Post a Comment