என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, October 17, 2005

திங்கள் காலையும், கொஞ்சம் கவலையும்!

ஒரு கையில் காலைக் காஃபி, மறு கையில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைகள். இன்னமும் தூக்கம் கலையாத கண்களோடு, இன்று காலை என் கணினியை உசுப்பினேன்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஹார்டு டிஸ்க் பயங்கர எரிச்சலோடு, 'வந்துட்டான்யா, வந்துட்டான்' என்று மெஷின் பாஷையில் எனக்கு அர்ச்சனை செய்து முணுமுணுத்தபடி வேலை செய்ய ஆரம்பித்தது.

வழக்கமான 'ஸ்பாம்' செய்திகள். மன்மத மாத்திரைகள், இனாம் பணம், இலவச ஐபாட், தையல் மெஷின், 'மிக்க சந்தோஷம், உங்கள் கடன் அப்ளிகேஷன் அப்ரூவ் ஆகிவிட்டது' போன்ற அபத்தங்களுக்கிடையே யாஹு IM-ம்மில் நண்பர் ஹரிகிருஷ்ணனிடமிருந்து இன்பாக்சில் காத்திருந்த செய்தி என் பார்வையில் பட்டது:

harikrishnan61: Forwarding an importatnt msg receivd by me from Ganesh Haiku: somebody by name of Vivekabarathi@yahoo.co.in may add you. dont accept it. Its a virus. Tell everyone on your bulletin because if somebody on your list adds them, you get the virus too. Tell everyone on your list not to open anything from Vivekabarathi. It is a hard drive killer and a very horrible virus.pass this letter to everyone on your buddy list. . Right click on the group name of your buddy list and click Send Message to all

முன்பு ஒரு தடவை இப்படி ஒரு எச்சரிக்கைச் செய்தி வந்தபோது நான் யாஹு நண்பர் ஐயப்பனைப் பெங்களுரில் தொடர்பு கொண்டேன். யாஹு மூலம், அதுவும், குறிப்பாக, IM மூலமாக எத்தகைய வைரஸையும் யாரும் பரப்புவது சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொன்னார்.

என் கணினி கர்ண கவச குண்டலங்களோடு வருமுன் காப்போனாக விளங்கினாலும், நண்பர்கள் யாருக்காவது இத்தகைய வார்னிங் செய்தி, பாதிப்புகள் ஏதேனும் உண்டா?

கொஞ்சம் கவலையாக இருக்கிறது. குளிக்கப் போகுமுன் ஒரு போஸ்டிங் போட்டு விடலாமே என்று தான் ...!

3 comments:

J. Ramki said...

யாகூ குழுமங்களுக்கு யூனிகோட் சப்போர்ட் கொடுக்கிற விஷயம் எந்தளவுக்கு இருக்குன்னு புதுமாப்பிள்ளை ஏதாவது செப்பினாரா?

Unknown said...

Increase your Adsense Earnings

I noticed you have adsense ads on your page, Would you like to increase your earnings from them, Free and Legitimate way to make your clicks increase.
Come see my Blogger blog and it will tell you more.

Manmadan said...

எனக்கும் இது மாதிரி நிறைய செய்திகள் வருவதுண்டு.. ஒருவேளை நாம ஆட் பண்ணி, சாட் பண்ணும் போது அந்த குறிப்பிட்ட நபர் 'send file' மூலமாக வைரஸ் அனுப்புவார் போல........