என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, December 13, 2004

எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ?!

"அப்படி என்னய்யா கும்பகர்ணனாட்டம் ஒரு பேய்த் தூக்கம்? எழுதி எவ்வளவு நாளாச்சு? மார்கழி மாசம் போறக்கப் போவுது, எழுந்திரிச்சுப் பல் வெளக்கிட்டு வாய்யா. சூடா ஒரு பொங்கல், வடை அடிக்கலாம். அப்புறமாச்சியும் உனக்கு சுறுசுறுப்பு கிறுகிறுப்பு வருதான்னு பாக்கலாம்" என்று ஒரு வாசக அன்பர்- பெயர் 'டோண்டு"வாம், செல்லமாக மிரட்டி இருக்கிறார்.

அதென்னங்கண்ணா பேரு 'டோண்டு'ன்னு? சின்ன வயசில எதுக்கெடுத்தாலும் அவங்க வூட்ல "ஏய், டோண்ட் ஸ்டாண்ட் ஹியர், டோண்ட் ஸ்டாண்ட் தேர், டோண்ட் டு திஸ், டோண்ட் டு தட்"ன்னு ரொம்ப மிரட்டி விரட்டினதுல தன் பேரே இனிமே 'டோண்டு'ன்னு அவரே நெனச்சுக்கிட்டார் போல!

(At 11/23/2004 02:45:17 AM, Dondu said... என்ன ஒன்றும் புதிதாகக் காணோம். எல்லே இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ? .....அன்புடன் டோண்டு)

இதோ விழித்துக்கொண்டு விட்டேன்.

ஜெயேந்திரர் விவகாரம், எம்.எஸ். மறைவு என்று சென்னைச் செய்திகள் சோக ராகம் இசைத்தாலும், 'அமெரிக்க அரசியலி'ன் போக்கு கவலை அளித்தாலும், இஷ்ட தேவதைக்கு ரகசியக் கல்யாண்ம் என்று யாரோ புரளி கிளப்பினாலும் ...

எமக்குத் தொழில் எழுத்து.

அதை சிறப்புறச் செய்வோம். டிசம்பர் 'அமுதசுரபி'யில் வெளிவந்த 'ஜாக் அய்யர்' இங்கேயும் சீக்கிரமே வலம் வருவார்.

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

6 comments:

Mookku Sundar said...

சரி சரி..வாங்க ஸார்.

கட்டியம் சொல்ல தனியா ஆள் ஏதாவது போட்டுட்டு, எழுதற வேலையை பாக்கறீங்களா..??

அது சரி..யாருக்கு ரகசிய கல்யாணம்..??

மீனுக்கும், ரப்பருக்குமா..?? :-)

Nambi said...

Òý¿¨¸¨Â ¸¡ó¾õ þØì̾¡?. þôÀò¾¡ý ²§¾¡ ¦¸¡ïºõ ¾¢È¨Á ¸¡ð¼ ¬ÃõÀ¢îº¡÷. «ÐìÌûÇ ¸ñ½¡ÄÁ¡?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

மூக்கன் சார்,

ரப்பர் கிப்பரெல்லாம் தொய்ஞ்சு போய்ப் பல நாளாச்சுங்களே! இது கொஞ்சம் லேடஸ்ட் சமாச்சாரம்.

-எல்லே ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இல்லீங்க பிரதர்.

புன்நகையும் பொத்திக்கிட்டுது, காந்தத்தையும் கரெண்ட் கட் பண்ணி வுட்டுட்டாங்க வூட்ல.

அதனால அந்தப் பக்கம் இனிமே கவலையில்ல.

ஏனுங்க இஷ்ட தேவதைன்னா இளிச்சதேவதை மட்டும் தானா?

-எல்லே ராம்

Mookku Sundar said...

நீங்க இஷ்டதேவதைன்னு சொன்னா, சரஸ்வதியையும், லக்ஷ்மியையுமா நினைக்கத் தோணுது...:-)

மீன், மான், 3ஷா, Rose, ஸ்நேஹம் இப்படித்தான் நினைக்கத் தோணுது.

"நம்ம" profile அப்டி செட் ஆயிப்போச்சு ஸார்..விடுங்க..

dondu(#11168674346665545885) said...

எல்லே இளங்கிளியே,
என் பெயரைப் பற்றி இன்னும் தெரிந்துக் கொள்ள பார்க்க: http://dondu.blogspot.com/2004_11_07_dondu_archive.html
நிற்க. உறக்கம் முடிந்ததில் மகிழ்ச்சி.
அன்புடன்,
ராகவன்