என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, July 12, 2005

கிழக்கே ஓடாத ரயில்

மிகச் சமீப காலம் வரை கூட அந்த ரயில் ஓடிக் கொண்டு தான் இருந்தது. சின்னஞ்சிறு ரயில், அதிவேகமெல்லாம் இல்லை. ஆடி அசைந்து தான் அது போகும். ஆங்காங்கே கொஞ்சம் நின்று, சமயத்தில் இளைப்பாறவும் செய்யும்.
சிக்கனமாக ஆறே ஆறு பெட்டிகள். அல்லது சில நாட்களில் மூன்றோ நான்கோ தான். வயதான, ஆனாலும் கடமை தவறாத, ஆஸ்துமாக்காரன் மாதிரி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது, மயிலாடுதுறை ஜங்ஷன்-தரங்கம்பாடி ரயில்,

லீவெல்லாம் போடாது. சமத்து.

ரயில் என்றால் ரயில் தான். கூட்ஸ் இல்லை. கூட்ஸ் வண்டி ஒரு ஜடம். ஒரே ஒரு டிரைவர், ஒரு கார்டு தவிர வேறு உணர்ச்சிகளேயற்ற ஜட கூட்ஸ் வண்டி இல்லை இது. ரத்தமும் சதையுமான மனிதர்களைச் சுமந்து கொண்டு வரும் பாசஞ்சர் வண்டி. எத்தனை பெண்கள், எத்தனை குழந்தைகள், சின்னப் பையன்கள். ஒரே சிரிப்பும் கும்மாளமும் தான்.

தரங்கம்பாடியில் இருந்து மீன், கருவாடு, பொறையாரில் இருந்து கத்தோலிக்கப் பாதிரிகள், திருக்கடையூரில் இருந்து மாலையுடன் கல்யாண ஜோடிகள், ஆக்கூரிலிருந்து கொடிக்கால் வெற்றிலைக் கூடைகள், செம்பனார்கோவிலில் இருந்து காய்கறி, மன்னம்பந்தலில் இருந்து கல்லூரி மாணவ மாணவிகள் என்று அழகழகான ஜெயலட்சுமிகளையும், ராமநாதன்களையும் சுமந்து கொண்டு சிரித்துக்கொண்டு தான் தினமும் வலம் வரும். சோம்பலே கிடையாது.

எங்கள் வீட்டுக் கொல்லையில் இருந்து சிறு பிள்ளைகளாக நாங்கள் கை அசைக்கும்போது டிரைவர் அங்கே தொலைவில் இருந்து பதிலுக்குக் கை அசைப்பதாகத்தான் எங்களுக்குத் தோன்றும். காலையில் எட்டே முக்கால் என்றால் எட்டே முக்கால் தான். குளக்கரையில் துவம்சம் பண்ணிக் கொண்டிருக்கும் எங்களை 'டேய் பசங்களா, ஸ்கூலுக்குப் போவணும், கெளம்புங்கடா' என்று ஒரு உசுப்பல் உசுப்பி ஒரு விசில் அடிக்கும். தரங்கம்பாடிப் பக்கம் வேலையெல்லாம் முடிந்து மாலையில் மயிலாடுதுறை ஜங்ஷனுக்குத் திரும்புகையில் ஜாலியாக ஒரு 'கூக்கூ'

ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு டிரிப் தான். அதற்கு மேல் கேட்டாலும் கிடைக்காது.

கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு, பேருந்தையும் சைக்கிளையும் புறக்கணித்து, மாயவரம் டவுன் ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷனான மன்னம்பந்தலுக்கு ரயிலில் பயங்கர கலாட்டா செய்தபடி சென்றிருக்கிறோம். ஒரு 'பெட்'டுக்காக எம்.எஸ். வெங்கடரமணி செயினைப் பிடித்து இழுத்து செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறான். எம்.எஸ்சி (பௌதிகம்) படிக்கக் கான்பூர் போனான். அமெரிக்காவில் நாஸாவில் இருக்கிறானோ? தெரியவில்லை.

ஆக்கூர் ராமலிங்கம் தும்பைப்பூ வேட்டியுடனும், 'பளீர்' சிரிப்புடனும் தான் வருவான். வக்கீலுக்குப் படிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மா கட்சியோ, அய்யா கட்சியோ இப்போது?

அவசரத்தில் டிக்கெட் வாங்காமல் ஏறிக்கொண்டாலும் பரிசோதகர் அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார். ஏதாவது கட்சிப் பூசல், அரசியல் கலாட்டா காலங்களில் மட்டும் இரும்புத் தொப்பிப் போலீஸ்காரர் முறைப்பார். மற்ற நேரங்களில் செக்கிங் கூட அபூர்வம்.

சாயங்கால வேளைகளில் ரயில்வே டிராக்கில் காலாற நடந்து போகின்ற சுகமே தனி. சூரிய அஸ்தமனத்தில் நெடுந்தூரம் சென்று மறையும் தண்டவாளக் கொடுகளை வரைய ஒரு ரவிவர்மா வேண்டும்.

அந்த ரயில் பெட்டியிலேயே கூட ஒரு தடவை கொலை நிகழ்ந்திருக்கிறது என்று ஒரு முறை படித்தேன். இப்போது உயிரையே விட்டு விட்ட எங்கள் பக்கத்து வீட்டுச் சின்னப் பையன் அந்த ரயில்வே டிராக்கில் தான் முதல் சிகரெட்டை இழுத்துப் 'பொக் பொக்' என்று இருமினான். டவுன் ஸ்டேஷனிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், ஆழமான இருட்டுக் 'கர்டர்' பாலத்தில் ஒரு முறை ஒரு முண்டத்தைக் கண்டெடுத்தார்கள். இருட்டிய பிறகு அங்கே கொள்ளிவாய்ப் பிசாசு உலவுவதாக எங்கள் வீட்டு நடேசன் சொல்வான்.

சில வருடங்கள் முன்பு எல்லாமே நின்று விட்டது.

டெல்லி ரயில் பவனில் எதோ ஒரு இந்தி பாபு, இந்திய ரயில்வே பட்ஜெட்டின் பல கோடிப் பற்றாக்குறையைச் சமன் செய்வதற்காக, எங்கள் தரங்கம்பாடி ரயிலின் கழுத்தைப் பிடித்து நிறுத்தி விட்டான்.

இப்போது பழைய டிராக்கெல்லாம் துருப் பிடித்து விட்டது. பல இடங்களில் இந் நாட்டு மன்னர்கள் இரும்பைத் துண்டித்து அவரவர் வீட்டுக்கு எடுத்துக்கொண்டே போய் விட்டார்களாம்.

ரயில்வே கிராசிங்குகளில் கோரைப் புல்லும் சாரைப் பாம்பும் நிரந்தரமாகக் குடியேறி விட்டன. மாயவரம் டவுன் ஸ்டேஷனில் விளக்கில்லாத இருட்டில் யார் யாரோ 'டிரக்' அடிக்கிறார்கள். பார்க்கவே பயமாக இருக்கிறது. மற்ற ஸ்டேஷன்களைப் போய்ப் பார்க்க மனசு இடம் கொடுக்கவில்லை.

அநியாயமாக ஒரு ஜீவன் உயிரோடு கொலை செய்யப்பட்டு விட்டது.

13 comments:

dondu(#11168674346665545885) said...

இந்த ரயிலை வைத்துத்தானே "ஒரு தலை ராகம்" படம் சமீபத்தில் 1980-ல் வந்தது? அதை மறந்து விட்டீர்களே எல்லே இளங்கிளியே. வண்டி சிக்னலுக்காக நிற்கும்போது ஒரு டான்ஸுடன் கூடியப் பாட்டு வேறு அந்த படத்தில் இருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

´ù¦Å¡Õ Ó¨È þÈíÌõ§À¡Ðõ
¿¢¨ÉòÐì ¦¸¡û¸¢§Èý
Å¢ÀòÐ ²ÐÁ¢ýÈ¢ â¨Ä¦ºÖò¾¢
°ÕìÌì ¦¸¡ñÎÅóÐ §º÷ìÌõ
âø ð¨ÃÅÕìÌ ¿ýÈ¢ ÜÈ
¬É¡ø ´ù¦Å¡Õ Ó¨ÈÔõ
ÁÈó§¾ ¾¡ý §À¡¸¢§Èý...

¯í¸ µ¼¡¾ âø ÀÊîºÐõ ±ÉìÌû
±Øó¾ §º¡¸ì ¸Å¢¨¾..
«ýÒ¼ý
¨„ă¡

ஜெ. ராம்கி said...

I think, i could write atleast 40 pages regarding Mayiladuthurai Townstation which is on the way to my home. I could still remember the last train between the track in 1984 when i was studying 4th standard in Puthutheru elementary school. Right now there is no evidence of railway track, southern railway itself taken back all the materials. Town Station building is entirely collapsed. I will be back with more news with latest pictures.

In the recent budget session, Laloo has ordered to reconsider the plan bringing the railway track between Mayiladuthurai - Nagoore via Tharangampadi & Karaikaal

வானம்பாடி said...

ராம், அருமையாக எழுதுகிறீர்கள். நட்சத்திரமான பின்னர் இவ்வளவு எழுதி குவிக்கும் நீங்கள், மற்ற சமயங்களில் எங்கே அஞ்ஞாதவாசம் செய்யப் போய்விடுகிறீர்கள்? இதற்காகவே உங்களை நிரந்தர நட்சத்திரமாக அறிவித்துவிடலாம் போலிருக்கிறது. ;-)

வானம்பாடி said...

Ramki,
// in 1984 when i was studying 4th standard //
Before June or after June? Just trying to guess if you are of my batch. :)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள டோண்டு,

நான் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை. அதை விடவும் ஞாபகங்களை மறக்க முடியவில்லை ஸ்வாமி;-)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ராம்கி,

லாலு அதை செய்து விட்டால் நான் என் பெயரை லாலு ராம்கி என்று மாற்றிக் கொள்ளத் தயார்! அப்படியே மறக்காம தற்சமய மாயவரம் போட்டோக்கள அனுப்புங்கண்ணா. எல்லாத்தயும் இங்கயே வலையேத்திடறேன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வா சார் சுதர்சன்,

எய்தறவனுக்கு ஒரு ஊக்கம் தான சார் பிசுக்கோத்து? வாசகன் ஸொல்றான், நாம எய்தறான்.

அட, இந்த பர்மணெட் இஷ்டாரு ஐடியாவும் நல்லாத்தான் கீது! வுய வேண்டிய காதுங்கள்ல வுயுந்தாச் செரிதாங்;-)

துளசி கோபால் said...

//அட, இந்த பர்மணெட் இஷ்டாரு ஐடியாவும் நல்லாத்தான் கீது! வுய வேண்டிய காதுங்கள்ல வுயுந்தாச் செரிதாங்;-)//

வுயுந்தாச்சு!!! அதான் நீங்க இப்பலேந்து எப்பவுமே இஷ்டாரு!!!!

ஜமாயுங்க.

என்றும் அன்புடன்,
துளசி.

dondu(#11168674346665545885) said...

என்னது? ஒரு தலை ராகம் படம் பார்க்கவில்லையா? அப்புறம் நீங்கள் மாயவரக்காரர் என்று எப்படி சொல்லிக் கொள்கிறீர்கள்? முதலில் எங்காவது சி.டி. கிடைத்தால் பார்க்கவும். அருமையான பாட்டுகள், காட்சிகள் - அதுவும் இந்த ரயிலை வைத்து. அதைப் பார்த்தால் அதற்காகவே ஒரு தனி பதிவு போடுவீர்கள் எல்லே அவர்கெல்லே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜெ. ராம்கி said...

ராம் ஸார்,

அதுக்கென்ன போட்டோவா அள்ளி விட்டுட்டா போச்சு...

சுதர்சன்,

அதெல்லாம் ஞாபகமில்லை... நீங்களும் அந்த ஸ்கூல்லதான் படிச்சீங்களா?

டோண்டு ஸார்,

படிச்ச காலேஜ், போன கோயில், பக்கத்து தெரு, வயக்காடு... எல்லாத்தையும் ஒரு தலைராகத்துல பார்த்துட்டு மறக்க முடியுமா? எப்படி இருந்த இடம் இப்படி ஆயிடுச்சேன்னு ஒரு மேட்டர் பண்ணி கலக்கிடலாம்.. விரைவில்!

Sethu Subramanian said...

This account brings in nostalgic memories for me. I have traveled in that tarangambADi "express" so many times taking the train from Mayavaram town station to AkkUr (from here it is a one mile walk to my village மாத்தூர்). I was studying 10th and 11th standards in Mayuram National High School which was considered a top notch school in those days in the whole state. There were actually three daily round trips from Mayavaram Junction to tarangambADi. Even today such memories are so sweet. by the way eating at KALiyAkudi club was a luxury for me--very rarely some adult would take me there for a taste of their alvA, pakODA, and their coffee.

Sethu Subramanian said...

This account brings in nostalgic memories for me. I have traveled in that tarangambADi "express" so many times taking the train from Mayavaram town station to AkkUr (from here it is a one mile walk to my village மாத்தூர்). I was studying 10th and 11th standards in Mayuram National High School which was considered a top notch school in those days in the whole state. There were actually three daily round trips from Mayavaram Junction to tarangambADi. Even today such memories are so sweet. by the way eating at KALiyAkudi club was a luxury for me--very rarely some adult would take me there for a taste of their alvA, pakODA, and their coffee.