என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, July 12, 2005

என் கோபங்கள்

என் கோபங்கள்
பாத்திரப் பிரசித்தம்

இரண்டு வயதில்
நசுக்கின
வெள்ளிக் கிண்டி
இன்னமும் சிரிக்கிறது

ஏழெட்டு வயதில்
எடுத்து வீசிய
இரண்டு மூன்று
சொம்புகள்
அடிக்கிணற்றில்
ஆழப் பாசியில்

விடலை வயதில்
வீசிய தட்டுகளா¡ல்
ஒரே அமாவாசையில்
ஓட்டில் உதயமானவை
இரண்டு மூன்று
பௌர்ணமிகள்

என்ன இது சமையலென்று
எடுத்து வீசிய எவர்சில்வரை
பறக்கும் தட்டோவென்று
பார்த்தவர் வியந்தனர்

கோபத்தையெல்லாம்
சிரிப்பில்
சுருக்கி விட்டேன்

இப்போதெல்லாம்
பாத்திரங்கள்
நசுங்குவதில்லை
மனசு தான்
கசங்குகிறது
மற்றவர்கள் கோபித்தால்

5 comments:

பரி (Pari) said...

ஹா ஹா ஹா... :)

ரா.சு said...

//விடலை வயதில்
வீசிய தட்டுகளால்
ஒரே அமாவாசையில்
ஓட்டில் உதயமானவை
இரண்டு மூன்று
பௌர்ணமிகள்//

அருமை!

Anonymous said...

manasai paper aaka vachrukkinga polrukku
adhaan kasangkuthu?:)

anbudan
shylaja

அன்பு said...

கோபத்தையெல்லாம்
சிரிப்பில்
சுருக்கி விட்டேன்


உங்களுக்கு கைவந்துவிட்டது. எனக்கு நான் எப்படித்தான் வெளியில் சிர்ப்பில் சுருக்கினாலும்...
வீட்டில் பௌர்ணமி வந்துகொண்டேதான் இருக்கிறது:)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

நன்றி பரி, ரா.சு, அன்பு!

அன்பு சார்! கோவம் இர்க்குற எடத்துல தாங் கொணமும்பாய்ங்க! கொஞ்சம் ரோசிச்சீங்கன்னா உங்க ஓட்லயும் அம்மாவாசை ஒதயாகும்ணேன்;-)