Friday, July 15, 2005
ப்ரிய ஸகி -1
'வாசக அன்பர்களுக்கு வணக்கம்.
அமெரிக்க வாழ்க்கையின் அவசர, அவசியங்கள் பற்றி உங்களில் பலருக்கு நன்றாகவே தெரியும். வார முழுவதும் நாங்கள் உழைத்து, அலுத்து, வார இறுதிகளில் கூடி மகிழும் நேரங்களில், கவிதைகள் படிக்கின்ற வழக்கத்தை நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாகத் துவங்கினேன்.
முதலில் வேடிக்கையாக ஆரம்பித்த இந்த வழக்கம் முதிர்ச்சி அடைந்து கவிதா ரசனையாக வேர் விட்டது. வார இறுதிகளில் மட்டுமன்றி வேறு பல விதங்களிலும் வளர ஆரம்பித்தது. 'கவிஞன்' என்கிற புது அந்தஸ்து தந்து தமிழ் அன்பர்கள் பெருமளவில் ஆதரவு தர ஆரம்பித்தார்கள். அந்த நல்ல நண்பர்களை நான் இந்த இடத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
...........................................
..........................................
..........................................
..........................................
கோவைத் தமிழர்கள் தான் பழகுவதற்கு இனிமிஅயானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தத் தஞ்சைத் தமிழர், பழகுகின்ற தன் பாங்கிலும், உபசரிப்பிலும், மரியாதையிலும் என்னை மிகவும் கவர்ந்தவர். தன்னுடைய பல்வேறு அரசியல், இலக்கியப் பணிகளுக்கிடையே சற்று நேரம் எனக்காக ஒதுக்கி, 'ப்ரியஸகி'யைச் சிறப்பித்து எழுதியமைக்கு மிகவும் நன்றி.
நான் பல வருஷங்களாகப் பார்த்து, பிரமித்து, பல சமயம் மோகித்து நிற்கும் பிரபல எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் இந்தத் தொகுப்பை வெளியிட இசைந்ததற்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய திறமையான, புதுமையான தமிழ் ஆளுகையில் ஒரு சதவீதமேனும் என்னால் செய்ய முடிந்தால் அதுவே எனக்குப் போதுமானது.
வெளியீட்டு விழாவில் பங்குபெறுகின்ற, நான் பெரிதும் மதிக்கின்ற கவிஞர் திரு. வைரமுத்து அவர்களுக்கும், இலக்கிய, திரப்பட உலகைச் சார்ந்த அனைத்துப் பிரமுகர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.
டாக்டர் விக்கிரமன், பாவை சந்திரன், துவாரகாநாத் மற்றும் 'தமிழ் அரசி' நிர்வாக அன்பர்களுக்கும் என்னுடைய நன்றி. பிரமாதமாகப் படங்கள் வரைந்து என் மனத் தாக்கங்களையும், எண்ணங்களையும் பட வடிவில் கொண்டு வந்துள்ள ஓவியர் பாண்டியன் அவர்களுக்கும் நன்றி.
இன்னும் உங்களைப் போலவே முகம்றியா எண்ணற்ற பல வாசகர்களுக்கு இந்தப் 'ப்ரிய ஸகி' நல்ல நண்பனாக இருப்பாள் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்"
இப்படித்தான் 'ப்ரிய ஸகி'யின் முகவுரையில் நான் எழுதி இருந்தேன். சென்னையில் திரு. சுஜாதா அவர்கள் இந்தக் கவிதைத் தொகுப்பை '93ல் வெளியிட்டார்கள்.
இனி, 'ப்ரிய ஸகி'யிலிருந்து சில கவிதைகள்:
---------------------------------------------------------
சமர்ப்பணம்
---------------
என்னில் அவளும்
அவளில் நானும்
இரண்டறக் கலந்து நிற்கையில்
எனக்கே இதை நான்
அர்ப்பணம் செய்தால் என்ன?
இருந்தாலும்
ஒரு மரியாதைக்காக
அவளுக்கு இதை
சமர்ப்பணமாக ...
என்
ப்ரிய ஸகிக்கு!
சோம்பேறி மேகம்
------------------------
இலக்கிய வானில்
இன்னுமொரு தாரகையாய்
நான்
இன்னும் ஆகாவிட்டாலும்
சோம்பேறி மேகமாகவாவது
சற்று நேரம்
சுற்றி விட்டுப் போகின்றேனே!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//ஆனால் இந்தத் தஞ்சைத் தமிழர், பழகுகின்ற தன் பாங்கிலும், உபசரிப்பிலும், மரியாதையிலும் என்னை மிகவும் கவர்ந்தவர்//
யார்
சார்
அவர்
(அட... கடைசி எழுத்து எல்லாமே 'ர்'-ல முடியுது... கவிதை?!)
திருப்பதியிலயும், பழனியிலயும் மொட்டையை தேட முடியுமா? அதே போல தஞ்சாவுற் தமிழருன்னாலே பழக இனிமையானவங்க தான். அதனால... என் கேள்வியை மீண்டும்
ப
டி
க்
க
வு
ம்
(அடடா... மாயவரத்தான்..(என்னை சொல்லிக்கிட்டேன்!) எங்கேயோ போய்க்கிட்டிருக்கடா!)
சின்னம்மான்னு சொன்னா தமிழ்நாடே நடுங்குது. நீங்க அவரு வீட்டுக்காரரு பேரு சொல்லச் சொல்றீங்களே ;-) அவருதான் இந்த புஸ்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருக்காரு.
- அலெக்ஸ்
Post a Comment