என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, July 14, 2005

எங்கேயோ பார்த்த படம்!

நான் ரஜினியுடன் நடித்த 'எங்கேயோ கேட்ட குரல்' படம் ரிலீஸ் ஆனதும், பல இடங்களிலும் வரவேற்பு விழாக்களும் கொண்டாட்டங்களும் நடந்தன.

அவற்றில் ஒன்று, சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிடியில். அந்த விழாவில் நான் பேசுகிறேன். இயக்குனர் S. P. முத்துராமன், கேமராமேன் பாபு, ப்ரொடக்ஷன் மேனேஜர் நாச்சியார்புரம் நாகப்பன் இன்னும் பலருடன் நாங்கள் சென்னையிலிருந்து சென்றிருந்தோம்.

இப்போது வீடு மாற்றுகிற தூசி, தும்மல் கலாட்டா வைபவத்தின்போது எதிர்பாராமல் இந்தப் போட்டோ கிடைத்தது.


Image hosted by Photobucket.com




இது எப்படி இருக்கு?!

25 comments:

Anonymous said...

ஆஹா! சூப்பர் போட்டோ அண்ணாத்தே! சின்னப்புள்ளையா இருந்தப்போ, திருச்சி ராஜா டாக்கீஸ்ல அந்தப்படம் பார்த்த நினைவு. நீங்க எந்த ரோல் பண்ணீங்க அந்தப் படத்துல ? DVD கிடைச்சா, திரும்பவும், பார்க்கணும். உங்க சினிமா அனுபவங்களை ஆரம்பத்துலேந்து எழுதுங்க!

அன்புடன்
மீ.சந்திரசேகரன்

Anonymous said...

Uncle, thanks for visiting my blog. I didn't know, until my dad told me, that you acted with Rajnikanth.

Anonymous said...

ஏம்பா அங்க பப்பு வேகலையா? US ஓடி வந்துட்ட?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இன்னாம்மா சந்துரு,

நானு தான அந்தப் படத்துல செகண்டு ஈரோ? அம்பிகாம்மா தான் ஜோடியா இர்ந்திச்சி. ராதாவும் ரஜினியும் மெயின் பார்ட்டு கட்னாங்கோ.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பப்பு வெந்திச்சிங்கோ அநாநிம்சு. கொம்தம், வெகடன் அல்லாரும் தூக்கித்தான் எய்துனாங்கோ. தோஸ்துங்க் கம்லும், ரசினியும் பொயச்சிப் போவுட்டம்னு ப்ளேனு ஏறிட்டன். அப்பால, ஆலிவுட்டக் கல்க்க ஆளு தாவலை?

துளசி கோபால் said...

நான் இந்தப் படம் பாக்கலியே!
அடுத்தமுறை ஊருக்குப் போகறப்ப கிடைச்சா பாக்கறேன்.
அது சரி, ஜீன்ஸுலே நீங்க என்னவா வந்தீங்க? அதோட கேஸட் கைவசம் இருக்கு.
இன்னுக்குப் பாத்துப்புடணும்.

என்றும் அன்புடன்,
துளசி.

Anonymous said...

You know why Salman Khan is blabbering like this ?
http://www.hindustantimes.com/news/181_1407052,0008.htm?headline=Full~transcript~of~Ash-Salman~conversation

because of envy over L A Ram.

Raja said...

டாக்டரா நடித்தவர் தானே? அம்பிகாவ பிக்கப் பண்ணிட்டு போனவரா

வானம்பாடி said...

ஓ.. மெய்யாலுமே நீ நடிச்சிகிறியாபா.. சோக்காத்தான் கீற..

ஜெ. ராம்கி said...
This comment has been removed by a blog administrator.
ஜெ. ராம்கி said...

ஏகப்பட்ட தடவை பார்த்த படம். முதல் முதலா 1987 வருஷம் வைத்தீஸ்வரன் கோயில் சண்முகா தியேட்டர்ல பார்க்கிறச்ச, நீங்களும் அம்பிகாவும் ஓடிப்போற ஸீன்ல எங்க ஆளு குறுக்கே வந்து அட்வைஸ் பண்ணி, இல்லாட்டா சண்டை போடுவார்ன்னு நினைச்சுட்டிருந்தேன். ஏமாத்திட்டாங்க! படத்துல எனக்கு பிடிச்ச விஷயம் டைட்டில் கார்டும், கிளைமாக்ஸ் காட்சிகளும்தான். உங்களுக்கு நடிக்கிறதுக்கு எங்கே சான்ஸ் கிடைச்சது... குரலில் கொஞ்சம் கிழடு தட்டியிருந்ததை மறைக்காம சொல்லியாகணும். நல்லவேளை ஓரேயடியா உங்களை வில்லனாக்காம இருந்தாங்களே.. அதுவே பெரிய விஷயம். படம் பெரிய ஹிட்டாயிருந்தா, சுமன் ரேஞ்சுக்கு வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்!

பத்மா அர்விந்த் said...

ராம்
நான் இந்த படம் பார்த்திருக்கிறேன். கதை கூட நினைவில் இல்லை. மீண்டும் கிடைத்தால் பார்க்கிறேன்.
பல கலை மன்னன் போலிருக்கிறதே
பாராட்டுக்கள்

பத்மா அர்விந்த் said...

ராம்கி
வைத்தீஸ்வரன் கோவிலில் தியேட்டர் எப்போது வந்தது? நான் இருந்த போது கோவிலும் சந்தன குழம்பும்தான் பிரபலம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

துளசிம்மா, ஜீன்ஸ்ல நான் லஷ்மியோட தம்பியா வந்தேன். படத்துல என் பேரு சிவசு அங்கிள்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ராஜா ராமதாஸ், டாக்டரா இல்லீங்கோ, பணக்காரப் பண்ணையார் வீட்டுப் பையனா! 'அம்பிகாவ பிக்கப் பண்ணிட்டு போன'னே தவிரக் கடோசி வரிக்கும் தொடலியே ;-)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ராம்கி சொல்றது நூத்துக்கு நூறு உண்மை! ('குரலில் கொஞ்சம் கிழடு தட்டியிருந்ததை மறைக்காம சொல்லியாகணும்')

யாரையோ எனக்கு 'ட்ப்பிங்' பேசவைச்சுக் கழுத்த அறுத்துட்டாங்க. வளர்ந்து வரும் நடிகரால ஒண்ணுமே செய்யமுடியாத சூழ்நிலை அப்ப ;-(

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சுதர்சனு, எனுக்கு கட்அவுட்டு வெச்சி மாலியப் போட்டு ஜூடம் கொளுத்தி அல்லாம் தான் செஞ்ஜாங்கோ.

ஐய, அத்தல்லாம் இப்ப ஏம்பா நியாகப்படுத்துற, எனுக்கு அய்கையா வர்து.

அல்லாத்துக்கும் பர்த்தியா, ஆலிவுட்டு சைனு மேல நம்ம ரஜிக மன்றக் கொடியப் பர்க்க வுட்டாத்தாம்பா கட்ட வேவும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அர்விந்த, நல்ல எண்ணத்தோடு நண்பர் ராம்கி எழுதியதைத் தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள். நடிகர் சுமன் தெலுங்கில் பெரும் அளவுக்குப் பேசப்படுபவர். தனிப்பட்ட முறையிலும் அவரை நான் அறிவேன். இங்கே வரும்போதெல்லாம் நாங்கள் சந்திப்பதுமுண்டு. அவ்ர் வளர்ச்சி பொறுக்காமல், சில சொந்தப் பிரச்னைகளுக்காக அவரைப் பலியாக்கச் சில பேர் முயற்சித்தார்கள் என்பதே நிஜம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

புரிகிறது, நண்பரே. வருத்தம் இல்லை!

Anonymous said...

At 3:36 AM, தேன் துளி said...
ராம்கி
வைத்தீஸ்வரன் கோவிலில் தியேட்டர் எப்போது வந்தது? நான் இருந்த போது கோவிலும் சந்தன குழம்பும்தான் பிரபலம்!


மேற்கு கோபுர வாசற்படிக்கு வடக்கே கட்டப்பட்டது கொட்டகை 81-82 ல். உரிமையாளர் பழைய எம்பி கோவிந்தசாமியின் மகன் சரத்சந்திரன். தற்காலிக கட்டிட மேற்பார்வையாளானாக சில தடவைகள் நான் அங்கு பணி புரிந்ததுண்டு.

( எல்லே ராம், உங்களது பின்னூட்ட பகுதியில் சம்பந்தமில்லாமல் எழுதுவதை பொறுத்துக் கொள்ளவும், நன்றி. மண்பாசம் கையை கட்டமாட்டேன் என்கிறது )

- வாசன்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அடேடே, வாங்க வாசன். சீர்காழிக்காரர் ஆச்சே நீங்க. எனக்கு ஞாபகம் இருக்கிறது ;-)

Anonymous said...

I personally know a family got destroyed by this suman scandal. Because of one man's lust and a poor girl's stupidity an entire family was shattered . Suman may claim he is innocent, but he is as guilty as they come...

Iknow this is not a forum to discuss this and sorry for the digression. but I couldnt avoid writing about the tragedy..

sorry again for the digression.

Anonymous said...

oooo.! cinemala ellaam act senji irukkingala? wow! nadippu, direction(unda?)kadhai katturai kavidhai karnaticmusic endru aaya kalaikal 64 la ellaam unga
vasam pola?

ithu theriyaama naan ungala
urimaiya kindal senji munbu niraya
comments koduthhuttene?
echchuuch me sir!
anbudan
shylaja

முகமூடி said...

// ithu theriyaama naan ungala
urimaiya kindal senji munbu niraya
comments koduthhuttene?
//

பாத்தீங்களா.. ஆள் யாருன்னு தெரிஞ்சா, அவர் ஆய கலைகள் தெறிந்தவருன்னு அறிஞ்சா, கிண்டல் செய்யக்கூடாதுன்னு ஒரு எண்ணம் வருது... கருத்த விட்டு ஆள பாக்கறீங்க... அதனாலதான் ஞான் முகமூடி அணிந்து...

Manmadan said...

*****************
துளசிம்மா, ஜீன்ஸ்ல நான் லஷ்மியோட தம்பியா வந்தேன். படத்துல என் பேரு சிவசு அங்கிள்!
***************

இந்த இரண்டு படங்கள் தவிர வேற எந்த படங்களாவது பண்ணியிருக்கீங்களா ராம் ....