மஞ்சள் யானைகள்
-------------------
கொள்ளிடம் வாய்க்கால்
சுழித்துச் சுழித்து
குறுவையும் சம்பாவும்
பொன்னியும் ஐஆரெட்டும்
பசுமைப் புரட்சியின்
சகதியில் சிரித்ததால்
காது ஆட்டாமல்
காசு கேட்காமல்
களத்து மேட்டில்
கூட்டம் கூட்டமாய்
மஞ்சள் யானைகள்
வீங்கி நிற்கும்
கருப்பு எருமைகள்
புறமுதுகிட்டுச்
சொறிந்து
சுகம் காணும்
நான்
ஒளிந்து விளையாடினால்
உயரேறிக் குதித்தால்
மஞ்சள் யானைகள்
மதம் கொள்ளாது
எரியும் முதுகில்
எண்ணெய் தடவி
அம்மா தான்
திட்டுவாள்
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Wednesday, July 06, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அடடா, வைக்கோல் போருக்கு இப்பிடி ஒரு கவுஜயா? வித விதமா, வெவ்வேறு உயரங்களில், எங்கள் களத்து மேட்டில் (ஒரு காலத்தில்) நின்ற மஞ்சள் யானைகளை ஞாபகப் ப்டுத்தியமைக்கு நன்றி!!!
Post a Comment