என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, October 12, 2012

அமெரிக்க அரசியல் 2012 VP Debateமுதல் டிபேட்டில் சொங்கி மாதிரி சொதப்பி விட்டதால் எல்லோராலும் ‘வாங்கு வாங்’கென்று வாங்கப்பட்ட அதிபர் ஒபாமா, அவசர அவசரமாக துணை ஜனாதிபதி ஜோ பைடனைக் கூப்பிட்டு, “யோவ்! நாலு வருஷமா நீரு இருக்கீரா இல்லையான்னே தெரியல. தண்டச் சம்பளம் வாங்கிக்கிட்டு ஊர் சுத்திக்கிட்டிருக்கீரு. உமக்காவது பரவாயில்ல, ஒரே ஒரு டிபேட்டுதான். என்னிய 3 தபான்னு சொல்லிச்சொல்லி ரிவிட்டு அடிக்கிறானுவ. போயி என் சார்புல அந்த அண்டங்காக்காத்தலையன் ரையனை ஒரு சாத்து சாத்துய்யா” என்று சொன்னாராம்.

மாலைக் கதகதப்பில் செம மந்தார மப்புத் தூக்கத்திலிருந்த பைடனுக்கோ கடுப்பென்றால் கடுப்பு, தாங்கமுடியாத எரிச்சல்!

“ஊக்கும், நீர் போயி கெக்கேபெக்கேன்னு சொதப்பிட்டு வருவீரு, எல்லாத்தயும் நானு சரி பண்ணணுமாக்கும். இப்ப என்னிய கூப்பிட்டு உதார் வுடறீரே, அன்னிக்கி ஏன்யா பேஸ்தடிச்சு போடியத்துக்குக் கீழே பதுங்கினீரு?"

மறுமுனையில் பதில் இல்லை.

”சரி, சரி, நீரு கெலிச்சாத்தானே நானும் இன்னோரு நாலு வருஷம் பிரணாப் முகர்ஜி மாதிரி பந்தாவா உலகம் சுத்தலாம், போறேன், ஒரு பழைய பேஸ்பால் பேட் இருந்தா ஒண்ணு குடும், போயி அந்த பேந்தாத் தலையன உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்”

மேற்சொன்ன பேக்ரவுண்டில்தான் பைடன் - ரையன் உப ஜனாதிபதி டிபேட் கெண்டக்கியின் சிற்றூர் டான்வில்லில் ஆரம்பித்தது.

Photobucket

படு ரிலாக்ஸ்டாகவும், புள்ளி விவரங்களுடனும் ஆரம்பித்த பைடன், குட்டிப்பையன் ரையனை ஆரம்பத்திலேயே பெண்டு கழட்டி விட்டார் என்றே சொல்லலாம்.

ராம்னி அரைத்த அதே புளித்த மாவை ரையனும் அரைக்கத் தவறவில்லை. அதே 2+2=8 கணக்குப் பிதற்றல், அதே “மேஜிக் ப்ளான் ஒண்ணு வரும், ஆனா வராது” அப்ரோச்.

எடுத்த எடுப்பிலேயே ராம்னியின் அபத்த 47% ஸ்டேட்மெண்டாஸ்திரத்தை பைடன் வீசத் தவறவில்லை. ரையனிடம் அதற்கு பதில் இல்லை. பைடனின் வயது, அனுபவம் இவற்றைக் கண்டு ரையன் பயந்தமாதிரியே தெரிந்தது. ஒன்றரை மணி நேர டிபேட்டில் பொடியன் பத்து கேலன் தண்ணீராவது குடித்துத் தள்ளாடித் தத்தளித்தது பரிதாபம்.

“ஈரானை போட்டுத் தள்ளிவிடலாம்” என்கிற ரையனின் அரைவேக்காட்டுத்தன அசுர அப்ரோச்சுக்கு “ஏற்கனவே ஈராக், ஆஃப்கன் சண்டையால நாம திவாலு. இன்னோரு உலகமகா யுத்தத்துக்கு நாம தயார் இல்லை. மற்றும் அணு ஆயுத யுத்தமாக அது மாறினால் யாருமே சமாளிக்க முடியாமல் போகும். சும்மா பேட்டை லூஸு மாதிரி பேசப்படாது” என்று பைடன் கிளாஸ் எடுத்ததை ரசித்தேன்.

ஆனால், எப்படியாவது ரையனைக் கீழே தள்ளி மிதிக்கவேண்டும் என்ற ஓவர் எரிச்சலில், பைடன், ரையனைப் பேசவே விடாமல் எதற்கெடுத்தாலும் தடுத்ததும், அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறே பம்மியதும், ’அடாடா’, பேஷ் பேஷ்’, ‘த்ஸொ த்ஸொ’ என்று ரையன் பேசும்போதெல்லாம் சதா பிஜிஎம் கொடுத்ததும் அவருடைய நாற்காலிக்கோ வயதுக்கோ மரியாதை சேர்க்கவில்லை.

இவர்களெல்லாம் தான் நம் எதிர்காலத்தை நிரணயம் செய்பவர்கள் என்று நினைத்தாலே கதி கலங்குகிறது.

மொத்தத்தில் ஒபாமாவின் சரிவு பெருமளவு சரிகட்டப்பட்டு, மறுபடியும் குஸ்தி பழைய ஆரம்ப நிலைக்கே வந்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆரம்ப நிலையென்பது ஒபாமாவுக்கு ஆதரவு கொஞ்சம் அதிகமாகவே இருந்த நிலை.

கோமாளிக்கூத்து டிபேட் 2 ல் தொடரும்!

5 comments:

பொன்.முத்துக்குமார் said...

உங்க விமர்சனம்-தான் அட்டகாசம் போங்க. விவாதத்தை பார்க்காத குறை உங்க விமர்சனம் படித்ததால தீந்தது. :)

முரளிகண்ணன் said...

ஆஹா. வெயிட்டிங் பார் கோமாளிக்கூத்து - 2 & 3

Anonymous said...

The market does not seem to agree with you. Romney's chances have gone up by around 3 percentage points since the debate last night.

http://www.intrade.com/v4/misc/scoreboard/

Anonymous said...

Actually Biden's behavior will be bad for Obama in the long run when it plays in TV news and comedy shows.

Remember the election will be decided by 10-15% of independent voters. This people watch the biden clips in TV news and SNL and form their opinions.

But said this i have to agree this vp debate again energized the democratic party's core base and will help in turnout and field work

Pulavar Tharumi said...

செம நக்கலோட தெளிவான கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள்!