என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, October 12, 2011

ஐ சுயம்பு! (ஸ்டீவ் ஜாப்ஸுக்கு அஞ்சலி)


ஐ சுயம்பு! – லாஸ்ஏஞ்சல்ஸ் ராம்


1 Votes
ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் தம் 56வது வயதில் அகால மரணம் அடைந்து விட்டார்.
ஆப்பிள் கம்பெனியின் ஒவ்வொரு புது வின் வரவேற்பை ஆர்வமாகக் கவனிப்பதும், படு கேஷுவலாக, “அப்புறம் சொல்ல மறந்து விட்டேனே” பாணியில், “One more thing …” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் புதுவரவை உலகத்துக்கு அறிமுகம் செய்வதும் கண்கொள்ளாக் காட்சி. ஐபேடாகட்டும், ஐஃபோனாகட்டும், ஒவ்வொரு புதுவரவுக்கும் குளிரிலும் பனியிலும் நின்று நுகர்வோர் அவற்றை வாங்குவது என்பது வாடிக்கை.
கணினி உலகத்திலேயே ஆப்பிளுக்கு மட்டும்தான் அப்படிப்பட்ட அதிதீவிர அடியார்கள் கூட்டம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 5, ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்துவார் என்றுதான் எல்லோருமே நம்பி இருந்தார்கள். எவ்வளவோ மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும், பாழாய்ப்போன கணையப் புற்றுநோய் (pancreatic cancer) அவரை படுத்தி எடுத்தது. மெடிகல் லீவில் போனாலும், துரும்பாக இளைத்தாலும், ஒவ்வொரு தடவையும் அவர் எமனை ஏமாற்றி விட்டு, கம்பெனி தலைமைக்குத் திரும்பிவிடுவார். அது ஆப்பிள் ஸ்டாக் விலையை அதிரடி உயரங்களுக்கு எடுத்துச் சென்றது.
தற்போதைய ஆப்பிளின் மதிப்பு பல்லாயிரம் கோடி டாலர்கள். ஸ்டீவ் ஜாப்சின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டுமே கிட்டத்தட்டரூ 40,000 கோடி!
இத்தனைக்கும் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைக்கூட ஒழுங்காக முடிக்கவில்லை. பிறக்கும்போதே பணக்காரர் இல்லை. எந்தக் கம்பெனியிலும் போய் மேனேஜ்மென்ட் டிரெய்னிங் இல்லை. எந்த ஒரு புது ஆப்பிள் தயாரிப்புக்கும் டிஸைன் டெஸ்ட், மார்க்கெட்டிங் டெஸ்ட் எதுவுமே இல்லை. எல்லாமே அவர் மூளையில் உருவாகிய தயாரிப்புகள். உண்மையான சுயம்பு, ஸ்டீவ் ஜாப்ஸ்.
 தம் கம்பெனியின் போர்டிலிருந்தே இயக்குனர்களால் ஒரு காலகட்டத்தில் தூக்கி எறியப்பட்டு, பின்னர் அதே கம்பெனியை உலகத்தரத்துக்கு எடுத்துச் சென்றவர்.
மாக்கிண்டாஷ், ஐபாட், ஐபேட், ஐஃபோன்- எத்தனை எத்தனையோ புத்தம்புது உபகரணங்கள்; அத்தனையும் அவர் மூளையில் தோன்றியவைதாம். பல கோடி ஐஃபோன்களிலும் ஐபேட்களிலும் இன்னும் வரப்போகும் எத்தனையோ ஆப்பிள் அதிசயங்களிலும், ஒவ்வொருவரும் உபயோகப்படுத்தும் போதும் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆன்மா பெருமையோடு சிரித்துக் கொண்டிருக்கும்.
[RamBW2-1.jpg]
- லாஸ்ஏஞ்சல்ஸ் ராம் (கல்கி வார இதழ்)
நன்றி: கல்கி வார இதழ்

2 comments:

Anonymous said...

நான் படிக்கவில்லை. நீங்க ரொம்ப லேட். இன்னுமா ஜாப்ஸ்... என்று அலுப்பாக இருக்கிற அளவுக்கு இணையம், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பார்த்காகி-படித்தாகிவிட்டது...

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இல்லீங்க அநாநி!

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த உடனேயே ‘கல்கி’ ஆசிரியர் குழுவிலிருந்து அவர்கள் கேட்டு, நானும் உடனுக்குடன் ‘சுடச்சுட’ எழுதி உடனேயே ’கல்கி’யில் வெளியான மினி கட்டுரை இது.

இப்போதுதான் இங்கே போடுகிறேன். அவ்வளவே!