என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, July 07, 2005

உனக்கு நினைவிருக்கிறதோடீ?

பல்லாங்குழி ஆடும்போதுபட்ட
விரல்களினால்
மின்சாரம் ஏதும் சுட்டு விடவில்லை

கரும்பு வெட்டிய என் விரலை
பதறித் துடைத்தழுதபோது
அவள் பார்வையில்
மின்னலெல்லாமில்லை

முல்லைப்பூ பறிக்கையில்
ஏணிப்படி தடுக்கிவிட
அணைத்துப் பிடித்தபோது
நட்சத்திரங்கள்
வானில் கண் சிமிட்டவில்லை

ஒட்டுத் திண்ணையிலும்
மொட்டைக் கிணற்றடியிலும்
ஒரு கோடை முடிந்தது
பதினாறு கழிந்தது

ஊருக்குப் போகுமுன்
ஒருவருக்கும் தெரியாமல்
ஓடி வந்து
அழுத கண்களும்
சிவந்த மூக்குமாய்க்
கசங்கிய காகிதம் ஒன்று
கொடுத்தாளே?

"நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்கமாட்டேன்"

எனக்கு மறக்கவில்லை
உனக்கு நினைவிருக்கிறதோடீ?

5 comments:

Mookku Sundar said...

எசப்பாட்டு
==========
(உள்ளிவாயன் பெருங்காயடப்பா என்கிற ஒட்டக்கூத்தராயன் என்கிற ரங்கபாஷ்யம் என்கிற சுவாரசியமான முகமூடியைப் போட்டுக்கொண்ட ***************னின் லீலை.

மூணாம்வகுப்பிலே
மூக்குத்தோண்டியதை
மறக்கமுடியுமா?

வீடுபெருக்கும்
முனியம்மாவைப் பார்த்து
விஸில் அடித்ததை
மறக்கமுடியுமா?

ஆத்தங்கரையிலே
அல்வா அவுக் அவுக்கின்னு தின்னு
பேதியாகி கோரைப்புல்லு பின்னாடி
குந்தினதை மறக்கமுடியுமா?

ஏழாம் கிளாசு வாத்தி
இங்கிபிலீஸ¤ கத்துத்தந்தக்கா,
எலந்தைப்பழம் தின்னதை
மறக்கமுடியுமா?

சினிமா போய்
இரவிலே சைக்கிளிலே
நிலவிலே திரும்பி வந்ததை
மறக்கமுடியுமா?

இப்போது,எட்டாத தொலைவிலே ரிச்மண்டிலே
மண்டி போட்டுகம்பியூட்டரிலே
மாங்குமாங்கு தேங்கா ஸைஸிலே
ஜாவா எழுதினாலும்
இஸ்மயில் பாவா
மூணாம் வகுப்பிலே
மூக்கணாம்ப்பட்டி முனிசிபல்
ஸ்கோலிலேமூக்குத் தோண்டியதையும்
முனியம்மாவையும் மறக்கமுடியுமா?

அதனால், தீர்மானத்துக்கு வந்தாச்சு.

லே ஆப்போ லேத் வர்க்கோ
ரிச் மண்டு ஜாப்பை விட்டுவிட்டு
மூன்றாம் வகுப்பிலே
எலந்தைப்பழம் தின்னு
திரும்ப இங்கிபிலீசு படிக்க
பாபாக்கு ஹாயா விஸில் அடிக்க
கோரைப்புல் கிராமத்துக்குக்
கோவணம் கட்டப் போகிறேன்.

முனுசாமி!
முனியம்மா!!
வட் எவர் யு டூ,
கிவ் இட் அப்.
பிளீஸ் ரிட்டர்ன் பக்
டுயுவோர் பழைய பாத்திரம்.

ஜாவாவே உன் உப்பு வாய்க்கு
ஒரு மூட்டை அல்வா.

கண்டினியூட்டி ஸாட்!
டேக் டென் டு த பவர்
இன்பினிட்டி!
ஆக்ஸன் பிளீஸ்!!

உள்ளிவாயன் பெருங்காயடப்பா.
------------------------

(எல்லோராலும் ரசிக்கப்பட்ட, எல்லே ராமராயரின் " மறக்கவில்லை" என்கிற கவிதையின் வாசனையை இது நினைவு படுத்துமே!) -
அன்பன் O.K. ராயன்
நன்றி: ராயர் காப்பி க்ளப்

கறுப்பி said...

ஓமடா எல்லாம் நினைவிருக்கு அதுக்கென்ன இப்ப? போய் உன்ர சோலியப்பாரு

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

என்னங்க பண்றது, சுந்தர்? 'மறக்கவில்லை' மறந்து போயிட்டுது. எனக்கும் ஒரு தேசிகன் வாய்ச்சாக்க, இந்த மாதிரிக் கொழப்படிகள் வராது.

இந்த 'சுமனு'ம் இப்ப பிசி கிரகஸ்தன் ஆயிட்டான்;-)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

'மனுஷி'யோட கோவம் இன்னும் கொறஞ்சபாடில்லையாக்கும்? 'வேலை இல்லாத் திண்டாட்டம்' எவ்வளவு அன்புன்னு கொடுமையாச் சொல்றாங்க, சாரி, கொடுமைங்கறதை அம்பாச் சொல்றாங்க.

நல்லவேளை, அந்தப் பெண் 'ஓமடா' இல்லை;-)

Anonymous said...

ஐயோ ஐயா, உங்க மூக்காய்யா, உள்ளிவாயன் மூக்காச்சே என்று கிள்ளிவிடுகிறீர்களே!!

எதை மறக்காவிட்டாலும், இந்த இல்லாத ரிலேஷன்ஷிப்பை ஓட்டாமலிருக்க மறந்து விடுகிறீர்களே!!

உள்ளிவாயன் பெருங்காயடப்பா வேறு ரங்கபாஷ்யம் வேறு. மாட்டுத்தொழுவத்துள்ளே அப்பாவ்வி ஆட்டைக் கட்டாதீர்கள்.