என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, February 04, 2008

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

நடிகர் அமிதாப் பச்சன் மஹாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக வேலை செய்தாலும், அங்கேயே குடியிருந்தாலும், எப்படி அவர் அலகாபாத்திலிருந்து தேர்தலில் போட்டியிடலாம் என்றும் எப்படி அவர் உத்தர் பிரதேசத்திற்கான 'பிராண்ட் அம்பாசடர்' வேலை செய்யலாம் என்றும் ராஜ் தாக்கரே என்கிற பிரஹஸ்பதியின் 'மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' என்கிற கோஷ்டி மும்பையில் கலாட்டா செய்தது மட்டுமல்ல, அமிதாப் வீட்டில் கல்லெறிந்து, சோடா பாட்டில்கள் வீசி கலாட்டா செய்துள்ளது.

இந்த ராஜ் தாக்கரே 'சிவ்சேனா' புகழ் பால் தாக்கரேயின் மருமகன். மாமாவிடம் சண்டை போட்டுக்கொண்டு போட்டிக் கட்சி ஆரம்பித்திருக்கும் புத்திசாலி.

இந்த மாதிரி அசிங்கங்கள் வழக்கமாகத் தெற்கே தானே அரங்கேறும்?! தெலுங்கள், மலையாளத்தான், கன்னடியன் என்று நாம் தானே அடித்துக் கொள்வோம், இப்போது இந்த அசிங்க கலாச்சாரம் வடக்கேயும் பரவி விட்டதா, என்ன?

உத்தரப் பிரதேசம் என்ன சீனாவிலா இருக்கிறது?

அலகாபாத் என்ன ஆப்பிரிக்காவிலா இருக்கிறது?

இந்த மாதிரி கீழ்த்தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை முதலில் நாடு கடத்தினால் தான் இந்தியா உருப்படும்.

அவர்களை எங்கே அனுப்பலாம்?

5 comments:

துளசி கோபால் said...

எங்கேஏஏஏஏ அனுப்பணுமா?

உங்கூருக்கு?

ம்ம்ம்ம்ம்..சரிப்படாது.:-))))

பேசாம இந்தியாவிலேயே ஒரு குகைக்குள் வச்சுறலாம்.

இதுக்குன்னு ஒரு மாநிலம் அகப்படாமலா போயிரும்?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க துளசி, நல்லா இருக்கீங்களா?

எங்கூர்ல தான் இப்ப ஏகப்பட்ட எலெக்ஷன் கலாட்டாவாச்சே!

குகைன்னதும் சிட்னி பக்கத்துல இருக்கற பாதாள குகைகள் தான் ஞாபகம் வருது. ப்ளூ மௌண்டன் ரேஞ்சில இருக்கற ஜெனோலன் கேவ்ஸ் தான் உலகத்திலேயே மிக மிக அதிக 'வயதான்' திறந்தவெளிக் குகைகளாம்.

எழுதறேன், கொஞ்சம் நேரம் கிடைச்சதம் இதைப் பத்தி எழுதறேன்!

ரவி said...

to US :))))

வானம்பாடி said...

//இந்த மாதிரி அசிங்கங்கள் வழக்கமாகத் தெற்கே தானே அரங்கேறும்?!//

அப்படியா...?

தமிழர்களை மும்பையில் சில பத்தாண்டுகளுக்கு முன்பே அடித்து துவைத்தது கணக்கில் வராதா..

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க சுதர்சன்!

கண்டிப்பாக அதுவும் கணக்கில் உண்டு. தெற்கே இம்மாதிரிக் கலவரங்கள் கொஞ்சம் அதிகம் என்பதால் அப்படிச் சொன்னேன்.

அருணாச்சல் பிரதேஷில் அஸ்ஸாமியர்களை விரட்டினாலும், மும்பையில் பீகாரிக்களை அடித்து நொறுக்கினாலும், பெங்களூரில் தமிழர்களை எதிர்த்து வட்டல் நாகராஜ் பஸ்ஸை எரித்தாலும்...எல்லாமே மிகவும் கண்டனத்திற்குரிய, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே உலை வைக்கக்கூடிய சம்பவங்கள் தான்.

2020-ல் வல்லரசாகப் போகிறோம் என்று முழங்குகிறோம். ஆனால் இத்தகைய அரசியல் கிருமிகள் நாட்டைத் துண்டாடிப் போட்டு விடும் என்பது பயங்கரமான உண்மை அல்லவா?

'வேற்றுமையில் ஒற்றுமை'- வெறும் கோஷம் தானா?

இந்திய, மாநில அரசாங்கங்கள், எல்லாவற்றையும் அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், இதில் முனைப்பு காட்டவேண்டும்.