”நல்ல காரியங்களை உடனுக்குடன் செய்து விட வேண்டும்.
உள்ளுக்குள்ளேயே ஊறப்போட்டு, செய்யலாமா, வேண்டாமா என்று தயக்கத்திலும், சோம்பேறித்தனத்திலும் இருந்தால், சோர்வும், சலிப்புமே மிஞ்சும். அன்றாடம் செய்து முடிக்க வேண்டிய பணிகளே வரிசை கட்டி நிற்பதால், எதையும் ’ஆகட்டும், அப்புறம் பார்க்கலாம்’ என்று தள்ளிப்போடுவது சுலபம்.
‘ஊஹூம், இப்போது வேண்டாம், அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற சால்ஜாப்புக்குத்தான் ஆயிரக் கணக்கான மோசமான உதாரணங்கள் இருக்கின்றனவே. ஆனால், இனிமேலும் ஜகா வாங்காமல், ம்,ம்ம், சீக்கிரம், மொதல்ல எழுந்திரிங்க சொல்றேன், வேற பேச்சே வேணாம், எழுத ஆரம்பிங்க ...!”
மேற்சொன்ன தொனியில் பல ரீங்காரங்கள் எனக்குள்ளும், என் ரசிக மகா ஜனங்களிடமிருந்தும் ஏகோபித்து ஒலிக்க ஆரம்பித்து விட்டதால், ‘யாம் பெற்ற இன்பம்’ ஆரம்பிக்கப் போகிறது.
இமாலயப் பயணம் இது!
Thursday, June 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நன்றி தல.
இமாலயப் பயணத்தில் பாத்ரூம் பாகவதர், ஜக்குபாய் வல்லுனர் எல்லோரும் வலம் வருவார்களென நம்புகிறேன் :-)
இமாலயப் பயணத்தில் அலாஸ்காவும் ஆஸ்திரேலியாவும் பாங்காக் கூத்துகளும் களை கட்டும் தானே ?
'யாம் பெற்ற இன்பம்' தொடராக எழுதும் போது சப்ஜெக்ட் லைனில் தேதியும் போட்டால் பின்னால் தேடவும் வசதியாக இருக்கும்.
- அலெக்ஸ் பாண்டியன்
//யாம் பெற்ற இன்பம்’ ஆரம்பிக்கப் போகிறது.//
சூப்பரேய்ய்ய் !
எதிர்பார்த்து காத்திருக்கிறோம் :)))
அநானிமஸ் அலெக்ஸ்ஜி, ஆயில்யன் சார், தொலைபேசிய ஏழேகால் பேர்வழிகள் அனைவருக்கும் வணக்கம்.
பிச்சிப் பிரிஞ்சி மேஞ்சுருவம், வாங்க!
எல்லே ராம்
Post a Comment