என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, June 29, 2009

’கம்பலை’ என்றால் என்ன? - கொஞ்சம் தமிழ் ஆராய்ச்சி!

’யாம் பெற்ற இன்பம்- 3’ ல், நான் பின்வருமாறு எழுதியிருந்தேன்:

” ... இருந்தாலும், பலத்த செக்யூரிட்டியையும் தாண்டி, முக்கியப்பட்ட சிலர் கண்ணீரும், கம்பலையுமாக (அது என்னங்ணா, ‘கம்பலை’? யாராச்சியும் பதில் சொல்லுங்ணா) எனக்கு விடை கொடுக்க முடியாமல் ஏர்போர்ட்டில் கேவிக்கேவி, தேம்பித்தேம்பி அழுதார்கள்.”

பின்னூட்டத்தில், சுந்தர், “நானும் ரொம்ப நாளா தவிச்சிட்டிருக்கேன் இந்த ‘கம்பலை'க்கு அர்த்தம் புரியாம....நீராச்சும் சொல்லுவீர்னு பார்த்தா......இப்படி அம்போன்னு விட்டா எப்படி ??” என்று கேட்டிருந்தார்.

சுந்தர் கேட்கும்போது சும்மா இருக்கலாமோ? நாம் கேட்ட கேள்விக்கு நாமே பதில் கண்டுபிடித்து விடுவோம் என்று கொஞ்சம் தமிழ் ஆராய்ச்சி செய்ததில் ‘கம்பலை’ என்றால் சத்தம், ஆரவாரம், ’சவுண்டு கொடுப்பது’ என்பது தெரிந்து கொண்டேன்.

கண்ணீரும் கம்பலையுமாக என்பது ’அழுகையும் ஆத்திரமுமாக, சத்தமாக ஃபிலிம் காட்டி’ என்ற பொருளில் உபயோகிக்கப்படும் சொற்றொடர்.

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக் காஞ்சியில் இந்தக் ‘கம்பலை’ 6 இடங்களில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. மதுரைக் காஞ்சி பாடியவர் :: மாங்குடி மருதனார். தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப் புகழ்ந்து மொத்தம் 782 பாடல்கள் பாடி இருக்கிறார். (இந்த மாங்குடி தான் மயிலாடுதுறை - வைத்தீஸ்வரன் கோவில் வழியில் இருக்கும் மாங்குடியா என்பதை வேறு யாராவது எனக்குத் தெரியப்படுத்தவும்).

110வது பாடலில், இந்தக் கம்பலை வருகிறது:

இரு பெயர்ப் பேரா யமொடு இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும் பொலந் தாமரைப் பூச் சூட்டியும் நலஞ் சான்ற கலஞ் சிதறும் பல் குட்டுவர் வெல் கோவே! கல் காயுங் கடுவேனி லொடு இரு வானம் பெயலொ ளிப்பினும் வரும் வைகல் மீன் பிறழினும் வெள்ளமா றாது விளையுள் பெருக நெல்லி னோதை அரிநர் கம்பலை . (110)

அதேபோல் 120, 430, 530, 550, 620-வது பாடல் வரிகளிலும் இதே கம்பலை பெரும் சப்தம், ஆரவாரம் என்ற பொருட்களில் கையாளப்பட்டிருக்கிறது.

அதேபோல், மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தரின் தேவாரத்திலும் ’கம்பலை’யைக் கண்டேன்::

கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்
டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழ
அம்ப லத்துறை வான்அடி யார்க்கடை ............ (நன்றி: www.thevaaram.org)

’அடியார்கள் ‘ஹர ஹர’வென்று பெரு முழக்கம் செய்து பணிந்து எழுந்து போற்றும் இளங்காளையைப் போன்ற உடற்கட்டு கொண்ட சிவன்’ என்று பாடுகிறார் சம்பந்தர்.

இப்போதைக்கு இத்தனை கம்பலை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?!




4 comments:

ஆயில்யன் said...

கம்பலை - சவுண்ட் விடறதா முதன் முதலாய் அறிந்துகொண்ட விசயம்!

இந்த கம்பலை போதும் - இப்படி கிளை விட்டு போகும் போது யாம் பெற்ற இன்பம் இன்னும் ரொம்ப இண்ட்ரஸ்டிங்க ஆகும் :)))- நிறைய நிறைய சைடு கொஸ்டீன்ஸ் போடுவோம்ல :)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஆயில்யன்,

இப்படி கிளை விட்டு எழுதும் போது நானும் நிறைய தெரிந்து கொள்கிறேன். மாங்குடி மருதனாரென்ன, தேவாரமென்ன, படிப்பதற்கு எவ்வளவு சுவாரசியமான தகவல்கள்! நேரம் தான் போதவில்லை.

sundar said...

ஹைய்யோ !! சூப்பர்!!

அருமையான தேடல்கள்...விளக்கங்கள்....

இது வரை ‘மாங்குடி மைனர்' சினிமா தான் தெரியுமெனக்கு.....இனி ‘மாங்குடி மருதனார்' பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்

நன்றி.....ரொம்ப டாங்ஸ் பா !!

Unknown said...

very late comment but mangudi is a small village near madurai sivagangai route