நண்பர்களே, எப்படி இருக்கிறீர்கள்?!
'எனது இதயம் கனிந்த அன்பான ரசிகப் பெருமக்களுக்கு ...' என்றெல்லாம் உங்களை ரம்பம் போடாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.
அமரர் சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு, சில வாரங்கள் சென்னையில் நான் தங்கி இருந்தாலும் சில பல சோதனைக்காலப் பணிகளால் இலக்கிய ஜோதியில் ஐக்கியம் ஆக முடியவில்லை. என் ப்ளாக் பக்கம் கூட நான் எட்டிப் பர்க்கவில்லை என்கிற உண்மை உங்களுக்குத் தெரிந்ததே. அவ்வப்போது ஏதாவது ஜு. வி. அல்லது ரிப்போர்ட்டரில் படம் பார்த்துக் கொறிப்பதோடு சரி.
ஏப்ரல் கடைசியில் அமெரிக்கா திரும்பி விட்டாலும், வேறு சில அலுவலகப் பணிகளில் நான் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தபோது தான் அது நடந்தது.
எது?
"என்னப்பா அது, ஏதோ முகமூடி சமாச்சாரமாமே, உன் பெயர்ல ஏதோ கச்சாமுச்சா சமாச்சாரமெல்லாம் நெட்ல வருதாமே?" என்று கேட்டான் என் பையன். அப்பாக்களைப் பற்றிய வழக்கமான பையன்கள் படும் கவலை அவன் குரலில் தெறித்தது.
"என்னடா இது, எல்லேக்கு வந்த சோதனை?"
"நான் இப்பொழுதெல்லாம் எங்குமே தொடர்ச்சியாக எழுதுவதே இல்லையே அப்பா. ராயர் காப்பி கிளப், மரத்தடி, தமிழ்மணம், தமிழோவியம், இத்யாதி, இத்யாதி- இதையெல்லாம் நான் மூட்டை கட்டி வைத்து ஆண்டுகள் சில பல கடந்து விட்டனவே, ஈதென்ன கொடுமை?"
நெட் சமுத்திரத்தில் முழுங்கி முத்தெடுத்து, என் பெயரால் அல்லது என் பெயரில் யாராவது எங்கேயாவது ஏதாவது கிழித்துக் கொண்டிருக்கிறார்களா என்றேல்லாம் ஆராய்ச்சி செய்து சித்தப் பிரமை பிடித்து அலைய நான் தயாரில்லை.
அப்படியே ஏதாவது பிரகிருதிகள் எங்கேயாவது எனக்கு ஒரு முகமூடியை மாட்டித் தொலைத்திருந்தால், என்னுடைய பின்னூட்டம் என்ற பெயரில் எதையாவது பெனாத்திக் கொண்டிருந்தால், அவர்களும் வாழ்க, வளர்க!
ஆனால்,
'அதற்ககெல்லாம் நான் பொறுப்பில்லை. நான் அவனில்லை' என்பதை மட்டும் கண்ணியத்துடன் தெரிவித்துக் கொண்டு நான் என் கடமை ஆற்றப் போய்க் கொண்டே இருக்கிறேன்.
மியாவ், லைட்ஸ் ஆன், க்ளோஸப், ஹாட் 16 என்று படிக்க, பார்க்க எவ்வளவோ இலக்கிய சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றனவே!
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Saturday, May 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
ஆஹா....ஈதென்ன சோதனைன்னு எங்க கோபாலகிருஷ்ணன் 'மியாவ்'கிறான்.
பேரை 'ரிப்'பேர் ஆக்காதவரை சரியாம்.
மியாவ்.....:-)
Mask of zorro, the mask அப்படிங்கிற படத்துல எல்லாம் நீங்கதான் கதாநாயகன் அப்படின்னு 2 வருஷத்துக்கு முன்னாடியே கேள்விப்பட்டேனுங்களே! நீங்க அவரில்லையா?
//மியாவ், லைட்ஸ் ஆன், க்ளோஸப், ஹாட் 16 என்று படிக்க, பார்க்க எவ்வளவோ இலக்கிய சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றனவே//
சைடு கேப்ல விகடன் குமுதத்தை எல்லாம் இந்த இலக்கியத்தரத்துக்கு ஒசத்திட்டு போறது எல்லாம் நல்லதில்லைங்கண்ணா!
சரி.
//மியாவ், லைட்ஸ் ஆன், க்ளோஸப், ஹாட் 16 என்று படிக்க, பார்க்க எவ்வளவோ இலக்கிய சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றனவே!
//
:))))))
ஊருக்கு போய் வந்த செய்திகளை கூறுங்கள் அண்ணா!
இது நீங்க தானே ராம்?:)
உங்க பேர்ல கோபம்...ஆமா இந்தியா வர்ரதும் தெரியல போறதும் தெரியாம என்னவோ போங்க ஹ்ம்ம்...
ஷைலஜா
ரைட்டு!
ரைட்டு!
ரைட்டு!
நியூஸி துளசி, இலா, வடுவூர்க்காரர், அபி, ஆயில்யன், சீமாச்சு என்று பல நண்பர்களும் கமெண்ட்ஸ் அடித்திருந்தாலும், ஷைலஜாக்கா மிகவும் கோபமாய் இருப்பதால், முதல் பதில் அவர்களுக்கு!
சென்னையிலும் மும்பையிலும் கோயமுத்தூரிலும் 2 1/2 மாதங்கள் அலைந்து திரிந்தாலும். பெங்களூர் பக்கம் எட்டிப் பார்த்தது இரண்டே தடவை தான். இரண்டு தடவையும் அடுத்த ப்ளேனைப் பிடிக்கிற அவசரத்தில் இருந்ததால் தான் ஷைக்குத் தெரிவிக்க்க முடியவில்லை. இல்லாவிட்டால் ஒரு அட்டகாசமான காஃபிக்காவது அங்கே நான் பிரசன்னமாகி இருக்க மாட்டேனா?
கலிஃபோர்னியாவில் அருகிலேயே இருந்த இன்னோரு அழகான கேர்ள் ஃப்ரண்டும் இப்போது பெண்களூருக்கே போய் செட்டில் ஆகி விட்டதால்,...ம்ஹும்ம்..(நெடிய பெருமூச்சு)... அடுத்த முறை அங்கே வரும்போது இரண்டு மூன்று நாட்கள் தங்கி விட முடிவு எடுத்தாகி விட்டது என்பது இதனால் ஷையம்மாவுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
"கண்டிப்பாக வருகிறேன், இதோ வருகிறேன், அதோ வருகிறேன்" என்று சொல்லிச் சொல்லி என் பெயர் ஏற்கனவே அந்த அரிச்சந்திரன ரேஞ்சில் பிரபலமாகப் பேசப்படுவதால், அடுத்த முறை ,,, வேண்டாம். செய்தே காட்டுகிறேன்.
பெங்களூரில் தாமரை மலர்ந்திருப்பது இன்னுமொரு இன்றைய இனிக்கும் பெங்களூர் செய்தி.
ஷைலஜாஜி, இந்த முறையும் என்னை மன்னித்து விடுங்கள். கோபத்தில் என்னைக் கூப்பிட்டுத் திட்டினாலும் பரவாயில்லை. என்ன இனிமையான குரல்! தொடர்ந்து வாய்ஸ் கொடுத்து வருகிறீர்களா? பின்னணி பாட ஆரம்பித்தாயிற்றா? ரஹ்மானிடமிருதோ, வித்யாசாகரிடமிருந்தோ போன் வந்ததாமே, உண்மையா?
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Post a Comment