என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, August 06, 2008

யூ டூ விகடன்?

ரஜினிகாந்த் - குசேலன் மேட்டர் ஒரு வழியாக தானே எரிந்து சாம்பலாகி முடிந்து போகின்ற நேரத்தில், இந்த வார ஜூனியர் விகடன் (10-8-08)'சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்' என்ற தலைப்பில் எழுதி இருப்பதை, வெறுப்பு நெருப்பை ஊதி ஊதி வளர்ப்பதை, அதில் கொஞ்சம் குளிர் காய நினைப்பதை இப்போது தான் படித்தேன்.

உடனே நான் அவர்களுக்கு எழுதிப்போட்ட பதில்:

"யூ டூ விகடன்? ரஜினியை விமர்சனம் செய்வதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஒரு பத்திரிகை என்ற முறையில், அதுவும் எதையாவது பரபரப்புக்காக எழுத வேண்டிய வியாபாரக் கட்டாயத்தில் நீங்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், கன்னடியர்கள் என்னவோ பாகிஸ்தானியர்கள் போலவும், கர்நாடகா ஏதோ பயங்கர விரோத தேசம் போலவும் எழுதியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, வருத்தப்படவேண்டியது, இந்திய இறையாண்மைக்கே, தேச ஒற்றுமைக்கே ஆப்பு வைக்கும் விதத்தில் விகடன் எழுதலாமா? கர்நாடகத்தில் சில முட்டாள்கள் தான் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்றால் நம் தமிழர்களை இப்படி உசுப்பேற்றி விளம்பரம் தேடுவது விகடனா? அவசரப்பட்டு விட்டீர்கள். நான் வெட்கப்படுகிறேன்."

என் பின்னூட்டத்தை அவர்கள் பிரசுரம் செய்வார்களா என்பது தெரியவில்லை.

விகடனா இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போய் எழுதுவது? தனி மனிதத் தாக்குதலில் இப்படி ஈடுபடுவது? ரஜினையைப் பற்றிய 'கன்னடத்து ஆள்' போன்ற கேவலமான பிரயோகங்கள் என்னை மிகவும் வருந்த வைத்தன.

இந்தியாவைக் கூறு போட எதிரி அமைப்புகளே இனி தேவை இல்லை. தமிழ்ப் பத்திரிகைக்காரர்களே அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டு விடுவார்கள் போல் தெரிகிறது.

16 comments:

prabu said...

நீங்கள் சொல்வது சரிதான்.அதேசமயம் ரஜினியின் இமேஜை உயற்றியதில் அதிகபங்கு அந்த பத்திரிக்கைகளுக்கு உண்டு.ஒன்றும் இல்லாத் ரஜினியின் பல படங்களுக்கு விளம்பர தூதர்கள் போல சில செயல்பட்டுள்ளன,செயல்படுகின்றன.கடந்த சில மாதத்தில் மட்டும் ரஜினியின் புகைப்படம் ஆனந்த விகடனின் அட்டையில் எத்தனை முறை வந்துள்ளது என்பதை கணக்கிட்டு பாருங்கள்.எல்லாமே வியபாரம் .ரஜினியை பாராட்டுவதும் இகழ்வது.ரஜினியை பாராட்டும் போது சும்மா இருந்தவர்கள் இப்போதும் சும்மாத்தான் இருந்தாகவேண்டும்.விடுங்கள் அடுத்த இதழில் குசேலனுக்கு 80 மர்க் கொடுத்துடலாம்
குழப்பவாதி குசேலன் என்ற என் பதிவையும் கொஞ்சம் படித்து பாருங்களேன்

http://priyamudan-prabu.blogspot.com/

தீலிபன் said...

உங்கள் பதிவை படித்தவுடன் வருத்தமாக உள்ளது, உண்மையில் பாகிஸ்தான் கூட நேரடியாக தான் மோதுகிறது, இவர்களை போல் குடிக்க தணீர் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. தவித்த வாய்க்கு தண்ணி கொடுகதவர்கள் என்ன மனிதர்கள் ராம்.கருநாடகத்தில் சில முட்டாள்கள் என்று நீங்கள் கூறுவது அந்த மாநிலத்தின் முதல் அமைச்சரை தான் ராம், ஏன் என்றால் அவர்தான் இன்று நடக்கும் அனைத்து விடயத்துக்கும் காரணம். இன்னும் எத்தனை ஆண்டுகள் இறையாண்மை, தேச ஒற்றுமை என்று பேசுவிர்கள். தமிழ் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் மற்ற மாநிலத்தவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா?

Anonymous said...

http://mayavarathaan.blogspot.com/2008/08/455.html

கிரி said...

பாராட்டுவதால் யாராலும் யாருக்கும் பிரச்சனை இல்லை அதே போல பாராட்டவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை ஆனால் ஒரு தெளிவான கருத்துக்கள் இல்லாமல் மற்றும் முழுவதும் விசாரிக்காமல் ஒரு கட்டுரை வெளியிட்டால்...அது ஒருவரை எவ்வளவு பாதிக்கிறது..தற்போது அவசரப்பட்டு திட்டியவர்கள் விழிக்கிறார்கள் ..என்ன தான் தான் திட்டிய சொல்லும் பேசிய வார்த்தையும் இல்லை என்று ஆகி விடுமா.. நல்ல பதிவு ராம்
..
இது குறித்து மாயவரத்தான் எழுதிய பதிவு அருமை ..rajinifans.com கூட பிரசுரித்து இருக்கிறார்கள் http://www.rajinifans.com/detailview.php?title=707

LA_Ram said...

அன்புள்ள பிரபு,

என் பதிவு ரஜினியை மட்டும் பற்றியது அல்ல. அவரைப் பற்றிய தனி மனிதத் தாக்குதலை மட்டும் பற்றியது அல்ல.

அநாமதேயமாக மொட்டைக் கடிதாசி ரேஞ்சுக்கு இறங்கி, வாட்டாளுக்குப் போட்டியாக, விகடனில் ஒரு அங்கம் இறங்கிப்போய் விட்டதே என்கிற அவலம் என்னை உலுக்கி விட்டது.

உங்கள் பதிலுக்கு நன்றி.

LA_Ram said...

அன்புள்ள திலீபன்,

கர்நாடகா செய்து வருவது அழிச்சாட்டியம் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. அது கேவலமான அடிமட்ட அரசியல்.

கொஞ்சம் ஆழ்ந்து அமைதியாக சிந்தித்துப் பார்த்தால், நம் தற்கால இந்திய அரசியல் தலைவர்கள் யாருமே இப்படிப்பட்ட பிரிவினை இயக்கங்களைக் கண்டிக்கக்கூட தயங்கித் தயங்கி யோசனை செய்கிறார்கள் என்பது புரிகிறது.

அமிதாப் பச்சனை அட்டாக் பண்ணி மும்பையில் ஒரு கலாட்டா, பீஹாரிகளை வெளியேறச் சொல்லி கல்லெறி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடையாது என்று கேரளாவும், கர்நாடகாவும் போராட்டம்- இதயெல்லாம் நம் 'தலைவர்கள்' ஏன் கண்டு கொள்வதே இல்லை?

வாரிசுகளை வளர்த்து விடுவதற்கும், கருப்பு சொத்து சேர்ப்பதற்கும், வைப்பாட்டிகளைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதற்குமே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இல்லையா?

LA_Ram said...

நன்றி கிரி.

உங்கள் புண்ணியத்தில் அந்த ப்ளாக்களை ஒரு முறை சுற்றி வந்தேன்.

திங்கள் சத்யா said...

நெத்தியடி அடித்தீர்கள் திலீபன். இதைவிடக் கடுமையாகச் சொல்லலாம். லாஸ் ஏஞ்சல்காரர் காழ்ப்புணர்ச்சி என்பார். இன்னும் கேட்கவேண்டியைதைக் கேட்டால், ரஜினியும் ராமும் தாங்கமாட்டார்கள். ரஜினி வெறும் வியாபாரி. ஆனால்...?

ர‌ஜினியை ஒரு தனி மனிதனாக யாரும் பார்த்ததில்லை. அவர் பின்னால் ஒரு சமுதாயமே பெரும் நம்பிக்கையோடு இருக்கிறது. ரஜினி படத்துக்கு பூஜை போடத் துவங்கினாலே ரசிகர்கள் தொடங்கி மீடியாக்கள் வரை, தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். அதேபோல் விமர்சனங்கள் வருகிறபோதும் சூப்பர் ஸ்டார் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமே தவிற இதை தனி மனித தாக்குதலாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது அவரது ரசிகர்களுக்கும் பொருந்தும். வளர்த்துவிட்டது பத்திரிகைகள்தான் என்கிறீர்கள். நம்ம பிளையை நாம்தான் வளர்க்கிறோம். அது தப்பு செய்துவிட்டால் ஓங்கி அறைவதில்லையா? அப்படி அறைந்த ஒரு கடிதம்தான் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உட்கார்ந்துகொண்டு மானங்கெட்ட நாட்டுப்பற்று பற்றி பேசாதீர்கள் ராம். நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்காக கோடிகளைக் கொட்டியதை டி.யி.யில் பார்க்கவில்லையா?

LA_Ram said...

அன்புள்ள திங்கள் சத்யா,

'லாஸ் ஏஞ்சல்ஸில் உட்கார்ந்துகொண்டு மானங்கெட்ட நாட்டுப்பற்று பற்றி பேசாதீர்கள் ராம். நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்காக கோடிகளைக் கொட்டியதை டி.யி.யில் பார்க்கவில்லையா?' என்று கேட்டிருக்கிறீர்கள். நல்ல கேள்வி.

இந்திய அரசியல் தரம் மகா அசிங்கத்தில், அதல பாதாளத்தில் இருப்பது உண்மை தான். இது பற்றி நாம் எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் குமைந்து கொண்டு தான் இருக்கிறோம்.

அமைதியாக இது பற்றி யோசித்தால், இந்திய அளவில் ஆக்க பூர்வமான சில பல நடவடிக்கைகள் மிக, மிக அவசியம் என்பது புரிகிறது.

இது பற்றி, வரும் நாட்களில் விபரமாக எழுதுகிறேன்.

இன்னோரு விஷயம்: சமீப காலங்களில் நான் இந்தியாவில் செலவிடும் நேரமே அதிகம்! இதோ, அடுத்த விசிட்டுக்குத் தயாராகிக் கொண்டே இருக்கிறேன்.

koothanalluran said...

எல்லே ராம் நீங்கள் வருவதுஅ} புதிய படம் ஏதாவது ஆ) புதிதாக ஏதேனும் சாப்ட்வேர் கம்பெனி துவங்கஇ) மாயாவரம் போய் காளியாகுடியில் டிபன் சாப்பிட

Anonymous said...

குருவே நல்லா இருக்கீங்களா ?

இங்கயும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_6874.html

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_6684.html

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_3983.html

முன்னாள் விகடன் எம்டி பாலசுப்ரமணியன் அவர்களுடைய ஃபோன் நம்பர் இருந்தால் ஒருமுறை அவரிடம் பேசவும்.

- அலெக்ஸ் பாண்டியன்

LA_Ram said...

கூத்தாநல்லூர்க்காரரே,

திருக்கழுக்குன்றத்துக்கு மூவ் பண்ணியது எப்போது! மூணுக்கு ரெண்டு பழுதில்லை!

LA_Ram said...

வாய்யா அலெக்சு!

இட்லி வடையெல்லாம் குர்ஜி ஒரு ரவுண்டு கட்டிட்டேன். நீ தான்பா லேட்டு!

பிரபு said...

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_6874.html


////////////////////////////
அதேசமயம் ரஜினியின் இமேஜை உயற்றியதில் அதிகபங்கு அந்த பத்திரிக்கைகளுக்கு உண்டு.ஒன்றும் இல்லாத் ரஜினியின் பல படங்களுக்கு விளம்பர தூதர்கள் போல சில செயல்பட்டுள்ளன,செயல்படுகின்றன.கடந்த சில மாதத்தில் மட்டும் ரஜினியின் புகைப்படம் ஆனந்த விகடனின் அட்டையில் எத்தனை முறை வந்துள்ளது என்பதை கணக்கிட்டு பாருங்கள்.எல்லாமே வியபாரம் .//////////


என் கருத்து மிக சரியா?

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_6874.html

பிரபு said...

?

Anonymous said...

Thinkal Sathya,

Enna foriegnla irundha Nattupattru manaketta nattuppattru. Iyya, Inthiya porulatharathula velinattukku ulaikirranvan kaasu perum vakikithunga. Thirai kadalodiyum thiraviyam thedunnu thaan unga tamil palamozhi.

Aaga ippa velinaatuth thamilan ellam ini thamilane illannu solveenga pola. enna kodumai sir idhu, natila vanthupolakiravanaiyum nimmathiyaa vida maatinga, veliyila irunthu sambathichu annuparavaniyum nimmathiya vida mattinknga, Romba nalla Uyarntha panbu.