என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, July 21, 2009

யாம் வழிந்த அசடு!

'யாம் பெற்ற இன்பம் -6' ம் பாகம் இருக்கட்டும். அதற்கு முன், இந்த unexpected அசடு வழிதலை உங்களிடம் நான் சொல்லியே ஆக வேண்டும்!

நாளைக்கு என் மனைவியின் பிறந்த நாள் என்பதால், அம்மாளுவை ஐஸ் வைக்க, நான் மேற்படி மனைவியாரின் காரைத் துடைத்துப் புதுப்பித்தல், வீட்டைத் துடைத்து வேக்குவம் செய்தல், வீட்டுக் குப்பைகளை வெளியிலே கொட்டல் -இன்னபிற ஜால்ரா சமாசாரங்களில் ஈடு பட்டிருந்தபோது தான் அந்த ஐடியா வந்தது.

எந்த ஐடியா?

ஆஃபீசிலிருந்து மேற்படியார் வருமுன்னரே, கொஞ்சமாக சமையலையும் செய்து வைத்தால்?!

அன்னாரின் 'வைட் வாட்சிங்' தத்துவப்படி, அரிசி, கோதுமை, சப்பாத்தி, ஆயில், இன்ன பிற அபிஷ்டு ஐட்டங்கள் வீட்டுக்குள்ளிருந்து வெகு தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், " வெறும் புல்கார் ரைஸ் பண்ணி வைக்கட்டுமா? ஏற்கனவே பீர்க்கங்காய் துவையல், வெஜிடபிள் கூட்டு, அப்பளம், தயிர், ஊறுகாய் எல்லாமே ரெடியாக இருக்கின்றனவே?"

"ஹும்ம்ம், நீங்களா? மே பி. நோ. நோ. யெஸ். ஓ கே. ஜாக்கிரதை!" போன்ற அவநம்பிக்கையான வசனங்கள் பதில் பதிவாயின.

நானும் சுறுசுறுப்பாக அந்த புல்கார் அரிசியைத் தேடிக் கண்டுபிடித்து, அதன் தலையில் தண்ணீரைக் கொட்டி சுத்த மந்திர ஸ்நானம் செய்வித்து, குக்கரில் அதைக் கொட்டிப் படாரென்று மூடி ....

பரம சந்தோஷ சிஷ்யானந்தனாக நான் -'எப்படியும் இன்று இவ்வளவு சமர்த்தனாக இருந்து விட்டதால் இன்று ஒரு Cabernet Sauvignon ஓபன் செய்தால் யாரும் நம்மைக் கண்டு கொள்ளவா போகிறார்கள்?'- ரேஞ்சுக்கு மிதப்பாக இருந்த நேரம் தான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது.

எது?

"என்னங்க இது? புல்கார் ரைஸ் பண்றேன்னுட்டு முழு உளுத்தம்பருப்பை சாதம் மாதிரி குக்கர்ல சமைச்சு வெச்சிருக்கீங்க?"

அய்யா தெரியாதையா, இந்தப் பீடை முழு உளுத்தம்பருப்பும், புல்கார் ரைசும் ஒரே மாதிரி சைஸ், ஒரே மாதிரி கலர், ஒரே கப்போர்டு, ஒரே பாத்திரத்துக்கு உள்ளே- ஃபிலிம் காட்டி நம்மை சதாய்க்குமென்று!

பிற்பாடு, மீடியம் எரிச்சலுடன், பீன்ஸ் கறிகாய் சமையலில் அந்த அவித்த உளுத்தம்பருப்பை வீட்டம்மாள் கொட்டிக் கடுகுக் கடுப்புடன் சமாளித்தது என்னவோ தனிக் கதை.

பெஹாக் ராகத்தில் 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம், என் ஸ்வாமிக்கு?' என்று பாட்டு கேட்டு, பாடிக் கொண்டிருக்கிறேன்.

நல்ல பாட்டு!



7 comments:

Unknown said...

ஆஹா!ஆஹா! மிகவும் ரசித்தேன்.

//அய்யா தெரியாதையா, இந்தப் பீடை முழு உளுத்தம்பருப்பும், புல்கார் ரைசும் ஒரே மாதிரி சைஸ், ஒரே மாதிரி கலர், ஒரே கப்போர்டு, ஒரே பாத்திரத்துக்கு உள்ளே- ஃபிலிம் காட்டி நம்மை சதாய்க்குமென்று!//

முதல் முறை உங்கள் தளத்திற்கு வந்து பின்னூட்டமும்!

ரொம்ப நன்றாக இருந்தது.

துளசி கோபால் said...

haiyo.......


you made my day:-)))))

ஆயில்யன் said...

// 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம், என் ஸ்வாமிக்கு?' என்று பாட்டு கேட்டு, பாடிக் கொண்டிருக்கிறேன்.

நல்ல பாட்டு!//

பாடி முடித்தப்பிறகும் கூட கண்டிப்பாக இரக்கம் வந்திருக்காது - பாவம் எம்புட்டு பில்ட்-அப் கனவுகளோட வந்திருப்பாங்க !

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

தேங்க்யூ, நளினா. எங்க இருக்கீங்க, எப்படி இருக்கீங்க? ஒரு தனி மடல் போடுங்க. அடிக்கடி இங்கேயும் வாங்க.

உங்கள் பாராட்டுக்கு மறுபடியும் நன்றி!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள துளசி,

நியுஸிலாண்டில இருந்து சென்னை வந்துட்டது தெரியும். எப்படித்தான் சமாளிக்கறீங்களோ நம்ம சிங்காரச் சென்னையை! கொஞ்சமாவது வெயில் கம்மி ஆகியிருக்கா?

தேங்க்யூ!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க ஆயில்யன்!

மயிலாடுதுறை எப்படி இருக்கு? அடுத்த விசிட்ல நான் அங்கே கண்டிப்பா வந்தாகணும்.

என்னுடைய 'பிறந்தகப் பெருமை' படிச்சிருக்கீங்களோ? அதுக்கு மேட்டர் சேகரிச்சாகணும்!

துளசி கோபால் said...

//கொஞ்சமாவது வெயில் கம்மி ஆகியிருக்கா?//

ஓஓஓஓஓஓஓஓ....ஆகி இருக்கே நம்ம கனவுலே நியூஸி வர்றப்போ(-:

அப்பப்ப வீசும் குளிர்த் தென்றல் இதுமாதிரி வரும் நகைச்சுவை இடுகைகள்தான்.

( மனுசன் பட்ட கஷ்டம் உனக்கு நகைச்சுவையான்னு கேக்கமாட்டீங்கதானே?)