என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, September 16, 2004

சும்மா ஒரு 'சார் போஸ்ட்' ...

'என்னங்க நாலஞ்சு நாளாப் பேச்சு மூச்சையே காணுமே உங்க 'ப்ளாக்'ல?' என்று வட அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து ஒரு அவசரத் தொலைபேசித் தாக்கீது வந்தது.

இரண்டு பேர் 'சாட்'டிலும், ஐந்து பேர் ஈமெயிலிலும் என் சோம்பேறித்தனத்துக்கு வேட்டு வைக்க நினைத்து என்னை உசுப்பியபோது ஏதாவது சால்ஜாப்பு சொல்வது எளிதாயிருந்தது. தொலைபேசியிலிருந்து தப்புவது அவ்வளவு சுலபம் இல்லை.

"இல்லை, வந்து, டயம் ..." என்று நான் முழுசாக அசடு வழிவதற்கு அதிக நேரம் கொடுக்காமல் நண்பர் தொடர்ந்தார்:

"இந்த ப்ளாக்குக்கெல்லாம் ஒரு இலக்கணம் இருக்குங்க. எழுதறதுக்கு ஒண்ணுமே மேட்டர் இல்லாங்காட்டியுங்கூட எதுனாச்சியும் டெய்லி எழுதிக்கிட்டே இருக்கணும். 'இன்று காலை எழுந்ததும் பல் தேய்த்தேன். அப்போது குழாயில் தண்ணீர் வரவில்லை. ஆனால் ...' இந்த மாதிரி எதுனா எழுதிக்கிட்டே இருங்க. உங்களுக்கு எக்கச்சக்கமா ரசிகர் கூட்டம் இருக்கு, அவுங்களை இப்படி ஏமாத்தலாமா?"

என் எழுத்து ரசிக்கப்படுவது சந்தோஷம் தான். அதற்காக 'ஜக்குபாய்' என்று எதையாவது அவசர அவசரமாக அறிவித்துவிட்டு 'அய்யோ, அம்மா' என்று கே. எஸ். ரவிகுமாராய் அலற முடியுமா?

எந்நேரமும் எதையாவது எழுதிக்கொண்டே காலத்தைக் கழிக்க ஆசை தான். ஆனால் புவ்வாவுக்கு சரியாக வழி பண்ணாமல் இலக்கியச் சேவை பண்ணுகிறேன் என்று ஆரம்பித்தால் அகத்தில் மாமி கட்டையைத் தூக்கிக் கொல்வாள். இலக்கணம் பிறழவில்லை. உண்மையை விளம்புகிறேன்.

ஆனாலும் எழுதவேண்டும் என்கிற 'டெட்லைனி'ல் நான் நன்றாகவே எழுத வல்லவன். "சாருக்கு அர்ஜெண்டா ஒரு நல்லெண்ணெய் சாதா' என்கிற மாதிரி பத்திரிகை ஆசிரியர்கள் சில சமயம் அவசரமாகப் படுத்தும்போது உடனே தோசை சுடுவது எளிதாகத்தான் இருக்கிறது எனக்கு.

இன்றைக்கு இவ்வளவு போதுமா?

நாளைக்கு, நாட்டின் தலையாய டாபிக்கான 'லஜ்ஜாவதி' பற்றி விவரமாகப் பேசுவோம்.

கட்டைக்குப் பயந்து இப்போது கணினியை மூடுகிறேன்.

என்றும் அன்புடன் தான்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

2 comments:

அன்பு said...

'லஜ்ஜாவதி'-ன்னா என்னங்க?
அந்தப்பாட்டைக் கேட்டாலே/பார்த்தாலே ஒரு கோவா குஷி வருதுல்ல!? ஜாய்ஸ் கிஃப்டோட கிஃப்ட்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்பண்ணா, அது அட்டகாசமான ஆட்டம் போடறதுக்கேத்த பாட்டுங்கண்ணா. கோவான்னு கரெக்டா ஒரே வார்த்தையில சொல்லிட்டீங்க. வடமொழியில் 'லஜ்ஜை' என்றால் பச்சைத் தமிழில் 'நாணம்'ங்கண்ணா.

'லுச்சா'ங்கறது செம்மொழித் செந்தமிழ். மேற்கொண்டு அடுத்த போஸ்டிங் பாருங்கண்ணா.

அன்புடன் தான்,

எல்லே ராம்