என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, December 31, 2009

ஹாப்பி நியூ இயர் 2010 !

நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

சிகரெட்டை விட்டு விடுவது, சினிமாவே பார்க்காமல் இருப்பது, தண்ணியடிக்காமல் இருப்பது, தினமும் ஆயிரத்தெட்டு ஸ்ரீராமநாம ஜெபம், வெயிட்டைக் குறைத்தே தீருவது, அவளை மறந்தே தீருவது, அவன் கைத்தலம் பற்றியே தீருவது, ஒரு வேலை பார்த்தே தீருவது, சேவிங்க்ஸ் அக்கவுண்டில் கணிசமான தொகையை ஏற்றுவது என்று ஆளாளுக்கு எக்கச்சக்கமான புத்தாண்டு பிளான்கள், நம்பிக்கைகள் வைத்திருப்பீர்கள்.

எல்லாம் நல்லபடியாக நிறைவேற என் அன்பான வாழ்த்துகள்!

சொதப்பல் வேலைகள், சோம்பேறித்தனம் எல்லாவற்ரையும் தூக்கிக் கடாசிவிட்டுப் புத்தாண்டில் நான் நிறைய எழுதப் போகிறேன்! 'தினம் ஒரு வதை' என்று தினமும் ஒரு கதை எழுதலாமா என்று கூட ஒரு உத்தேசம்!

நடக்கக் கூடியதை மட்டுமே நினைத்துப் பார்க்க நான் என்னைப் பழக்கிக் கொண்டுவிட்டேன். நீங்க எப்படி?!

ஹாப்பி நியூ இயர் 2010!

3 comments:

ILA (a) இளா said...

Happy New Year!

ILA

ILA (a) இளா said...

//நான் நிறைய எழுதப் போகிறேன்! 'தினம் ஒரு வதை' என்று தினமும் ஒரு கதை எழுதலாமா என்று கூட ஒரு உத்தேசம்!//

//நடக்கக் கூடியதை மட்டுமே நினைத்துப் பார்க்க நான் என்னைப் பழக்கிக் கொண்டுவிட்டேன். //

அடுத்த அடுத்த வரிகளிலே முரண்..

ஆயில்யன் said...

:) புத்தாண்டு வாழ்த்துக்களுடன் - வரப்போகும் பதிவுகளுக்காய் வெயிட்டிங்கு :)