என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, June 02, 2005

'செல்', கவனி, காதலி! -2

பாட்டி+பேத்தியிடம் என் புலன் விசாரணை ஒரு வழியாக முடிந்தது.



பாட்டி சொன்ன கதையின் சாராம்சமாவது: 'பெருந் தலைவர் சூ என் லாய் என்றோ சொன்னதை என்னால் எப்படி இன்று மறக்க முடியும்? இந்த இந்தியனுங்களயே நம்பக்கூடாது. 1962ம் வருட இந்திய-சீனப் போரின்போதுதான் என் கணவர் -உன் தாத்தா- இறந்தார் என்பதையும் மறந்தாயோடீ மக்குப்பெண்ணே? அவர் சீன ராணுவத்தில் கடைநிலைச் சமையற்காரச் சிப்பாயாக்குக் கறிகாய் நறுக்கித் தரும் உதவியாளராக இருந்திருக்கலாம், யுத்தத்தில் வீர மரணம் அடையாமல் ஓடி மரப் பொந்தில் ஒளிந்திருக்கலாம். ஆனால், கைது செய்யப்பட்ட பிறகு, இந்தியச் சிறையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஊசல் மசாலா சமாச்சாரங்களாலேயே தான் அவர் உயிர் பிரிந்தது என்பதை நீ மறந்தாலும் நான் மறப்பதாக இல்லை.

'உருப்படியாக உயிருடன் தின்ன இங்கே ஒரு மரவட்டை கூடக் கிடைக்கவில்லையடி, நாக்கு செத்தே போய் விட்டது. பூரான் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது' என்று அவர் கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாரே. ஹும், என்னால் எதையும் மறக்க முடியவில்லை.


இந்த இந்தியச் சொங்கி இங்கே மறந்து போன போனை நான் தான் எடுத்தேன். நம் பாரம்பரிய இந்திய விரோத ஞாபகார்த்தமாக இதை டாய்லெட்டில் போட்டு அதை ஜல சமாதி செய்து விடத்தான் எண்ணினேன். ஆனால் தண்ணீரில் போடுமுன் அதைத் தற்செயலாக நான் திறந்தபோது, அதிலே ஒரு அழகிய இந்தியப் புன்னகை இளவரசியின் படத்தைக் கண்டு நானே மயங்கி விட்டேன். மனம் மாறினேன். போனைத் திருப்பிக் கொடுக்கலாமென்று வாசலில் வந்தால், அங்கே இவனைக் காணோம். ஆனால் இவனை மாதிரியே, இவன் நிறத்திலேயே ஒருத்தன் மரத்தடியில் பல் குத்தியபடியே நின்று கொண்டிருந்தான். அவனிடம் அந்தப் போனைக் கொடுத்து விட்டேன். அவன் பையில் போட்டுக்கொண்டு ஜூட் விட்டு விட்டான் போலிருக்கிறது. இவனுக்கு நன்றாக வேண்டும். அவ்வளவு அன்பாக, ஸ்நேகமாக இருக்கும் அந்தப் போன் பெண்ணை இவன் எப்படி ஒரு கணமேனும் கண் கலங்க விட்டுக் கை விட்டுச் சென்றிருக்கலாம்?'



நான்: But, how did she assume that guy was by brother in law?

சீனக் குட்டி: Just like all Chinese look the same to you, all Indians look the same to us too.

தலையைச் சொறிந்தபடி நான்: May be it was some unemployed Mexican lounging under the tree?

புன்சிரிப்புடன் சீனக் குட்டி: Probably. But who was that girl's photo my grandma was referring to? I am curious.

நான்: Oh my God! என் அத்யந்த நண்ப, நண்பிகளின் நம்பர்கள் அனைத்தும்- எங்குமே எழுதப்படா தனிச் செல் நம்பர்களும் கூட- அதிலே அல்லவா இருக்கின்றன?

(பாட்டி+பேத்தி) கோரஸாக: What?

எனக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

சீனப் பிராந்தியத்திலிருந்து வெறுப்புடன் வெளியேறினேன். இனிமேல் சைனீஸ் நூடுல்ஸ் கூடச் சாப்பிடுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டேன். காரை எடுக்கவும் மறந்து கால் போன போக்கில் நடக்கலானேன்.

'போனால் போகட்டும் போடா- இந்த பூமியில்
செல்லுடன் வாழ்ந்தவன் யாரடா?- கால்
வருவது தெரியும் போவது எங்கே?
எதுவும் எனக்கே தெரியாது- வீட்டில்
கேட்டால் என் பதில் சொல்வேன்
அதுவும் எனக்கே புரியாது'

சோக மிகுதியில் புலம்புகையில் தான எனக்கு அந்த ஐடியா எனக்கு வந்தது. என் செல்லையே நான் கூப்பிட்டால் என்ன? எடுத்துச் சென்றவன் தராமலா போய் விடுவான்?

தெரு முனையில் இருந்து ஒரு போன் போட்டேன். மறு முனையில் என் போன் சிணுங்கும் சத்தம் கேட்டது. கரகரப்பான குரல் ஒன்று 'ஹலோ' என்றது.

"ஹலோ, ஹலோ. ஹு ஈஸ் திஸ்?"

"ஹு ஆர் யூ?" என்றது கரகரப்பு. எனக்கு இது தேவை தான்.

"ஐ யாம் தி ஓனர் ஆஃப் தட் போன். வேர் ஆர் யூ?"

மறு முனை ஏளனமாகச் சிரித்தது. "வாட் ஈஸ் திஸ் ப்ரெட்டி கேர்ள்'ஸ் நம்பர்?"

எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

-இன்னும் 'செல்'வேன்

No comments: